விருந்துக்கு வராததால் வித்யாபாலன் படப்பிடிப்பை நிறுத்தினாரா அமைச்சர்?

வித்யாபாலன்…

முன்னணி பாலிவுட் நடிகையான வித்யா பாலன் தற்போது ஷேர்னி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள காடுகளில் நடந்து வருகிறது. இதில் கலந்து கொண்டு வித்யாபாலன் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் மத்திய பிரதேச மாநில வனத்துறை அமைச்சர் விஜய் ஷா, தான் ஏற்பாடு செய்திருந்த விருந்து ஒன்றில் கலந்து கொள்ளுமாறு தனது உதவியாளர் மூலம் வித்யா பாலனை அணுகி உள்ளார். ஆனால் விருந்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று வித்யாபாலன் கூறிவிட்டார்.

மறுநாள் வழக்கம்போல் படப்பிடிப்பு குழுவினர் வனப்பகுதிக்குள் சென்றபோது படப்பிடிப்பு வாகனங்களை தடுத்து நிறுத்திய வனத்துறை ஒரு சில வாகனங்களை மட்டுமே அனுமதித்தனர்.

இதனால் படப்பிடிப்பை நடத்த முடியாமல் படப்பிடிப்பு குழுவினர் திரும்பி விட்டனர். அமைச்சர் அழைத்த விருந்துக்கு வித்யா பாலன் செல்லாததால் தான் படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது என்று அங்குள்ள மீடியாக்களில் செய்தி வெளியானது.

ஆனால் அதனை அமைச்சர் விஜய் ஷா மறுத்துள்ளார். நான்தான் வனப்பகுதியில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கினேன். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவர்கள்தான் என்னை விருந்துக்கு அழைத்தார்கள். படப்பிடிப்பை நிறுத்த நான் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. என்று கூறியிருக்கிறார்.

சந்தானத்தின் பாரீஸ் ஜெயராஜ் !

சந்தானம்…

நடிகர் சந்தானம், இயக்குனர் ஜான்சன் கூட்டணி, மீண்டும் பாரீஸ் ஜெயராஜ் என்ற படம் மூலம் இணைந்துள்ளனர். முன்னதாக இருவரும் இணைந்த, ஏ1 படத்திற்கு கிடைத்த வரவேற்பு, மீண்டும் இருவரையும் இணைய வைத்துள்ளது.

படத்தின் முதல், போஸ்டர் நேற்று வெளியானது. படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

சந்தானத்திற்கு ஜோடியாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடிக்கின்றனர்.

முக்கிய பாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார். லார்க் ஸ்டூடியோஸ் சார்பில், கே.குமார் படத்தை தயாரிக்கிறார்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள இப்படத்தை, 2021 ஜனவரியில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.

கர்ப்பகாலத்தில் வியக்க வைக்கும் அனுஷ்காவின் யோகா – போட்டோ வைரல் !

அனுஷ்கா சர்மா…

கர்ப்பகாலத்தில் கணவர் கோஹ்லி உதவியுடன் நடிகை அனுஷ்கா சர்மா ‘சிரசாசனம்’ செய்யும் போட்டோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

இந்திய அணி கேப்டன் கோஹ்லி. இவரது மனைவி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா. இந்த தம்பதிக்கு புத்தாண்டில் குழந்தை பிறக்கவுள்ளது. தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள கோஹ்லி, முதல் டெஸ்ட் முடிந்த பின் இந்தியா திரும்புகிறார்.

இதனிடையே, கர்ப்ப காலத்தில் அனுஷ்கா சர்மா தலைகீழாக நின்று ‘சிரசாசனம்’ செய்ய, அவருக்கு கோஹ்லி உதவும் போட்டோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இதனை ‘இன்ஸ்டாகிராமில்’ வெளியிட்ட அனுஷ்கா சர்மா கூறியது: ”எனது வாழ்க்கையில் யோகா முக்கிய பங்கு வகிக்கிறது.

தலைகீழாக நின்று, கால்கள் மேலே வைத்து செய்யும் சிரசாசனம் கடினமானது. இதனை பல ஆண்டுகளாக செய்து வருகிறேன். தற்போது கர்ப்ப காலத்தில் டாக்டரின் ஆலோசனைப்படி செய்கிறேன்.

முன்பு சுவற்றின் உதவியால் செய்வேன். இப்போது கூடுதல் பாதுகாப்பிற்காக கணவர் கோஹ்லி உதவுகிறார். எனது யோகா ஆசிரியர் காணொளி மூலம் பயிற்சிகளை மேற்பார்வையிட்டார். கர்ப்ப காலத்திலும் யோகா பயிற்சிகளை தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது” என பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸுக்கு முன்பே யாஷிகாவுடன் பாலாஜி ! இதை ஷிவானி பார்த்தங்கனா அவ்வளவுதான் !

பாலாஜி…

பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளை பார்த்தால், பாலாஜிக்கும் ரெட்கார்டு கொடுக்கப்படுமா? என்ற கேள்வி மிக வேகமாக பரவி வருகிறது. ஏன் என்றால் எந்நேரமும் பிரச்சனை அக்குளில் போட்டுக் கொண்டு சுற்றி வருகிறார் பாலாஜி,

ஏற்கனவே சனதோடு, சண்டை, ஆரியோடு சண்டை, என ஒரண்டை இழுத்து வருகிறார் பாலாஜி.

ஏற்கனவே இரண்டாவது சிசனில் மகத், மூன்றாவது சீஸனில் சரவணன் ஆகியோர் பெண்கள் குறித்த சர்ச்சையில் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் ஏற்கனவே விஜய் டிவியில் ஜெகன் தொகுத்து வழங்கிய கனெக்சன் என்கிற கேம் ஷோவிற்கு யாஷிகாவுடன் வந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் அவரது பதில் மற்றும் பேசும் வீதம் வித்தியாசமாக இருந்ததால் Big Boss வீட்டிற்க்கு இவரை அணுகி இருக்கலாம் என்று மக்கள் கருதுகின்றனர்.

கோலமாவு கோகிலா இந்தி ரீமேக் – நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் தெரியுமா?

கோலமாவு கோகிலா…

கோலமாவு கோகிலா படத்தின் இந்தி ரீமேக்கில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல நடிகை ஒப்பந்தமாகி உள்ளாராம்.

நெல்சன் இயக்கத்தில், நயன்தாரா, யோகிபாபு நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் ‘கோலமாவு கோகிலா’. தமிழில் இப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததால், இப்படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவு வந்தது.

இந்நிலையில், அதில் வலிமை பட தயாரிப்பாளரின் மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளார். தனுஷை ‘ராஞ்சனா’ படம் மூலம் இந்தியில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆனந்த் எல் ராய் இப்படத்தை தயாரிக்கிறார்.

அறிமுக இயக்குனர் சித்தார்த் சென்குப்தா இப்படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலத்தில் வருகிற ஜனவரி மாதம் ஆரம்பமாக உள்ளது.

ஒரே கட்டமாக தொடர்ந்து ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளார்களாம். தமிழைப் போலவே இந்தியிலும் இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என படக்குழுவினர் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

பிக்பாஸ் அனிதாவின் கணவர் வெளியிட்ட உருக்கமான பதிவு! இந்த விசயம் தெரியுமா!

அனிதாவின் கணவர்…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ல் கலந்து கொண்டிருக்கும் போட்டியாளர்களில் ஒருவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளரான இவருக்கு விஜய் நடித்திருந்த சர்கார் படத்திற்கு பின் ரசிகர்கள் நிறைய கூடினார்கள். காப்பான் என ஒரு சில படங்களிலும் நடித்து வந்தார்.

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பின் அவரின் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சுரேஷ் சக்ரவர்த்தியிடம் அவர் செய்த வாக்குவாதம் உள்ள சில விசயங்களால் ரசிகர்களுக்கு அதிருப்தியே நிலவி வருகிறது.

பிக்பாஸ் தொடங்கும் சில மாதங்களுக்கு முன்னர் தான் அவருக்கு பிரபாகர் என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் அவர் கணவர் ஹேப்பி Mensiversary கன்னுகுட்டி. இன்றுடன் 64 நாள் ஆகிறது. உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

பாலாஜி குறித்த சுசியின் சர்ச்சை பதிவு: நெட்டிசன்கள் கேள்வி!

சுசித்ரா…

பிக்பாஸ் வீட்டில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த சுசித்ரா பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் முதல் நாள் மட்டுமே அனைத்து போட்டியாளர்களுடன் விடிய விடிய அவர்கள் குறித்து மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

அதன் பின்னர் அவர் பெரும்பாலான டாஸ்குகளில் ஆர்வமாக கலந்து கொள்ளவில்லை. பாலாஜியுடன் மட்டுமே எப்போதும் ஒட்டிக்கொண்டு ஷிவானிக்கு கடுப்பு ஏற்றியதை தவிர சுசித்ரா எதையும் உருப்படியாக செய்யவில்லை என்பதே பார்வையாளர்களின் விமர்சனமாக இருந்தது. இதனால் இரண்டே வாரத்தில் அவர் வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பின்னர் பாலாஜி குறித்து அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுகளை செய்து வருகிறார் சுசி. அந்த வகையில் சமீபத்தில் அவர் செய்த ஒரு பதிவில் பாலாஜியின் புகைப்படத்தை பதிவு செய்து ’எங்கள் ஜாதியே வேற’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் பாலாஜி குறித்து கூறுவதற்கு ஜாதி என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்றும், அதற்கு பதிலாக வேறு வார்த்தையை சொல்லி இருக்கலாமே என கூறிய போது அதற்கு பதிலளித்த சுசி, ‘ஜாதியை எப்படி சார் மாற்ற முடியும்? அது ஏதோ ஒரு பொறாமை பிடித்தவர்கள் செய்து கணக்கு, அதை தப்பாக நினைக்க வேண்டாம். நான் குறிப்பிட்டதை வேறு அர்த்தத்தில் பாருங்கள். நான் எப்போதும் திராவிட ஜாதி என்பதை பெருமையாக சொல்வேன்’ என்று கூறியிருந்தார்.

மேலும் ‘நான் யானை ஜாதி என்று பெருமையாக சொல்லி கொள்வேன் என்றும், ஏனெனில் அதுவும் உண்மை’ என்றும் பதிவு செய்துள்ளார். பாலாஜி குறித்து சுசி பதிவு செய்த இந்த சர்ச்சை பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சிறிது நேரத்தில் அவர் கமெண்ட் பகுதியை ஆஃப் செய்துவிட்டு தனது ஜாதி குறித்த சர்ச்சை பதிவில் எடிட்டும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நிறுத்தப்படுகிறதா சன் டிவியின் முன்னணி சீரியல்.. ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி..!

சீரியல்கள்…

சீரியல்கள் மூலம் டி.ஆர்.பியில் முன்னணியில் உள்ள தொலைக்காட்சியில் ஒன்று சன் டிவி. ஆம், தற்போது வரை டி.ஆர்.பியில் எந்த ஒரு சரிவையும் காணாமல் இருந்து வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா, பாண்டவர் இல்லம், ரோஜா, சித்தி 2 போன்ற சீரியல்கள் டி.ஆர்.பியில் முன்னணியில் விளங்கி வருகிறது.

இந்நிலையில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் சுமார் 700 எபிசோட்கள் வரை பார்க்கப்பட, ரோஜா சீரியல் தீடீரென்று நிறுத்தப்படுகிறது என்று தகவல் வெளியானது.

இந்த செய்தி ரோஜா சீரியல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், சின்னத்திரை ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஆனால், சூப்பராக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் எப்படி நிறுத்தப்படும் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் ரோஜா சீரியல் கண்டிப்பாக நிறுத்திவைக்கப்படாது என்று சன் டிவி தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளதாம். அதுமட்டுமின்றி ரோஜா சீரியல் கண்டிப்பாக 1500 எபிசோட் வெற்றிகரமாக ஓடும் என்று கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் ரோஜா சீரியல் தற்போது முடிவிற்கு வரவில்லை என்று தெரியவந்துள்ளது.

Sanam எப்போ தான் வெளில போவாங்க, டான்ஸ் மாஸ்டர் சதிஷ் செம்ம கலாய்..!

சதிஷ்…

விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு… ஏன் தெரியுமா?

விஜய் சேதுபதி…

கிருஷ்ணகிரி அருகே நடைபெற்று வரும் விஜய் சேதுபதியின் லாபம் படத்தின் படப்பிடிப்பு போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் லாபம். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். மேலும் ஜெகபதிபாபு, கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பை காண சுற்றுவட்டார பகுதி மக்கள் அதிகளவில் வருவதாக கூறப்பட்டது. அனைவரும் முகக்கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை என புகார் எழுந்தது.

இதனால் கொரோனா பரவும் சூழல் ஏற்பட்டதால் படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பு முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.