நடிகை கீர்த்தி பாண்டியனின் Latest Click !

கீர்த்தி பாண்டியன்..

பட வாய்ப்புகள் இல்லாததால் அடிக்கடி அம்மணி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

அந்த வகையில் மழை தண்ணீரில் விளையாடுவது போல தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை கீர்த்தி பாண்டியன்.

தும்பா படத்தில் நடித்தற்காக நடிகை கீர்த்தி பாண்டியனுக்கு சிறந்த அறிமுக நடிகை என்ற விருது சமீபத்தில் தான் வழங்கப்பட்டது. ஆனால், தும்பா படத்திற்கு பின்னர் வேறு எந்த தும்பா வாய்ப்பும் இவருக்கு கிடைக்கவில்லை. அதனால் அருண்பாண்டியன் தற்போது தன் மகளை வைத்து Helen என்கிற ஒரு மலையாள படத்தை தமிழில் தயாரித்து தன் மகளான கீர்த்தியை வைத்து தயாரிக்கிறார்.

இவர் நடிச்சா ஹீரோயினாதான் நடிக்கணும்னு இல்லை. பெர்ஃபாமன்ஸுக்கு ஸ்கோப் இருக்கிற எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கத் தயார் என்று கூறியிருக்கிறார்.

அதற்காக வித விதமாக புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாக்ராம்மில் வெளியிடுகிறார். எல்லா புகைப்படங்களிலும் அவ்வளவு அழகாக கவர்ச்சியாக இருக்கிறார்.

மாஸ்டர் ரிலீஸ் அறிக்கைக்கு ரியாக்ட் செய்த நடிகர் தனுஷ் !

தனுஷ்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். XB பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக உள்ளது. மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.

கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. மாஸ்டர் திரைப்படம் நிச்சயம் திரையரங்கில் தான் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ உறுதி செய்தார். ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன.

தீபாவளி விருந்தாக மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. மாஸ்டர் டீஸரை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியாகினர். அதிக பார்வையாளர்களை ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது இந்த டீஸர். தற்போது திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் 50% இருக்கைகளை நிரப்புவதற்கு மட்டுமே தமிழக அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதனிடையே முன்னணி ஓடிடி தளங்கள் மாஸ்டர் படத்தைக் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் லலித்குமார், மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும்.

பிரபல ஒடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் பொழுதும் திரையரங்குகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காத்திருக்கிறோம். ரசிகர்கள் வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து மாஸ்டர் ரிலீஸ் குறித்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ரிலீஸ் அறிக்கைக்கு தளபதி ரசிகர்கள் தாண்டி திரைப்பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ், லோகேஷ் கனகராஜின் பதிவை ரீட்வீட் செய்து Yes என்று கூறியுள்ளார். இதனால் மாஸ்டர் படத்திற்காக மிகுந்த ஆவலில் காத்திருக்கிறார் தனுஷ் என்று தெரிகிறது. இந்த பதிவை தளபதி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஜிம்மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட தனுஷ் மற்றும் சாரா அலிகான் !

தனுஷ் – சாரா அலிகான் …

இந்திய திரையுலகில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து என்டர்டெயின் செய்து வரும் நடிகர் தனுஷ். தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்தாலும் தனுஷின் ஹாலிவுட், பாலிவுட் திரைப்பயணம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் தனுஷ். பிறகு பால்கி இயக்கத்தில் அமிதாப் பச்சனுடன் ஷமிதாப் என்ற படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அத்ரங்கி ரே படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷுடன் அக்‌ஷைகுமார் மற்றும் சாரா அலிகான் முக்கிய ரோலில் நடிக்கின்றனர்.

இப்படம் பற்றி பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் ஆனந்த் எல் ராய், சென்ற லாக்டவுன் நேரத்தில் நான் அதிக நேரம் எடுத்துக் கொண்டு இனி நடக்க உள்ள ஷூட்டிங்கிற்காக தயாராகி வந்தேன். இந்த படப்பிடிப்பில் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தான் நடத்த உள்ளோம் என்று கூறியிருந்தார். நமக்கு கிடைத்த தகவலின் படி, அத்ரங்கி ரே படத்தில் சாரா அலி கான் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். படத்தின் கதை இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடப்பது போல காட்டப்பட்டு இருக்குமாம்.

இந்த படத்தின் ஷூட்டிங் அக்டோபர் முதல் வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு தளத்தில் இருந்து தனுஷின் புகைப்படம் ஒன்று சமீபத்தில் வெளியாகி அசத்தியது. அத்ரங்கி ரே பாடல் காட்சியின் படப்பிடிப்பின் போது அங்குள்ள குரூப் டான்சர்களுடன் தனுஷ் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ட்ரெண்டானது. பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் காட்சியளித்தார் தனுஷ். இதனைத்தொடர்ந்து சில நாட்கள் முன்பு கேமராவுடன் தனுஷ் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார்.

வாரணாசியில் சில முக்கிய இடங்களில் அத்ரங்கி ரே ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவ துவங்கியதால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது. மதுரையில் நடைபெற்று வந்த ஷுட்டிங்கை தொடர்ந்து டெல்லியில் இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. கடைசியாக டெல்லி இறுதி கட்ட படப்பிடிப்பில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார் தனுஷ்.

இந்நிலையில் தனுஷ் மற்றும் சாரா அலிகான் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சாரா அலிகான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள், இந்த படத்திலும் தனுஷ் 6 பேக் கொண்டு காட்சியளிக்கிறாரா என்ற ஆர்வத்தில் உள்ளனர்.

பாலிவுட் வட்டாரத்தை பொறுத்த வரை பிரபலங்கள் ஜிம்முக்கு செல்லும் போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாவது வழக்கம். இதே வழக்கம் தான் நடிகர் தனுஷுக்கு நடந்துள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள்.

படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தனுஷ் ஒரு பாடலை பாடியிருப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. இதுகுறித்து தனுஷூம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். இதற்கு முன்னர் தனுஷ் பல திரைப்படங்களில் பாடியிருந்தாலும் இசைப்புயல் இசையில் முதன்முதலாக பாட இருப்பது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரெண்டாகும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படம் !

மாநாடு..

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் திரைப்படம் மாநாடு. இந்த படத்தை சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் ப்ரோடுக்ஷன் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் KL எடிட்டிங் செய்யவுள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.

முன்னதாக சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார் சிலம்பரசன். ஒரு மாத காலத்திற்குள் நடித்து முடித்ததுடன், டப்பிங்கும் பேசிக் கொடுத்துவிட்டார். சிம்பு, இப்படி தீயாக வேலை செய்வதை பார்த்து வியக்காதவர்களே இல்லை. இதே போன்று இருங்கள் சிம்பு என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

புதுச்சேரியில் நடந்து வரும் மாநாடு படப்பிடிப்பில் சிம்பு நடித்து வருகிறார். முறையான பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி வருகிறது படக்குழு. முன்பெல்லாம் சிம்புவின் படங்கள் பற்றி இயக்குனர்கள் அல்லது தயாரிப்பு நிறுவனங்கள் அப்டேட் கொடுத்தால் தான் தெரிய வரும். ஆனால் தற்போது அப்படி இல்லை. சிம்பு மீண்டும் சமூக வலைதளங்களில் என்ட்ரி கொடுத்ததில் இருந்து தன் படங்கள் குறித்து அவரே அவ்வப்போது அப்டேட் கொடுத்து அசத்திக் கொண்டிருக்கிறார்.

கல்யாணி ப்ரியதர்ஷினி ஹீரோயினாக நடிக்க SJ சூர்யா முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் பாரதிராஜா, SA சந்திரசேகர், கருணாகரன், உதயா, சுப்பு பஞ்சு, டேனியல் பாப், பிரேம்ஜி, YG மகேந்திரன், மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பு சென்னை VGP கோல்டன் கடற்கரையில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது.

மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் கடந்த வாரம் நவம்பர் 21-ம் தேதி வெளியாகி அசத்தியது. அப்துல் காலிக்காக நடிக்கும் சிலம்பரசனின் நடிப்பை காண ஆவலாக உள்ளனர் அவரது ரசிகர்கள்.

இந்நிலையில் மாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிலம்பரசன் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரு புகைப்படத்தில் பிரேம்ஜி, கருணாகரன், அஞ்சனா கீர்த்தி ஆகியோர் உள்ளனர். மற்றோரு புகைப்படத்தில் மேக்கப் ரூமில் இருந்து சிம்பு செல்ஃபி எடுப்பது போல் உள்ளது.

நிஜமானது நடிகர் விவேக்கின் காமெடி காட்சி !

விவேக்…

திரையுலகில் சின்ன கலைவாணராக திகழ்பவர் நடிகர் விவேக். 90ஸ் கிட்ஸின் ஃபேவரைட்டான விவேக், சினிமாவில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் மக்களுக்கும் சமூகத்திற்கும் நன்மை செய்யும் பல விஷயங்களை செய்து வருகிறார். குறிப்பாக அவர் மரம் நடுவதை பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறார்.

மரம் நடுங்கள், சுற்றுச் சூழலை காப்பாற்றுங்கள் என்று தான் அவர் சமூக வலைத்தளங்களில் மற்றும் மேடைகளில் தொடர்ந்து அவர் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் விவேக் கடைசியாக தாராள பிரபு படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்த இந்த படம் பிரபல ஹிந்தி படமான விக்கி டோனார் படத்தின் தமிழ் ரீமேக்காகும்.

கொரோனா நேரத்தில் மக்கள் மாஸ்க் அணியும் விதம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் விவேக். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் விவேக் இணையவாசிகளுக்கு பயனுள்ள பதிவுகளை பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் ஸ்டைலாக போட்டோஷூட் நடத்தி அசத்தினார். வெள்ளை நிற ஆடையில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மிகவும் அழகாக காணப்பட்டார். காஸ்டியூம் ஸ்டைலிஸ்ட் சத்யா நடத்திய இந்த போட்டோஷூட் ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்தது.

சமூக வலைத்தளத்தில் விவேக் குறித்த மீம்ஸ் எதுவாக இருந்தாலும், அதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு பகிரும் பழக்கம் அவரிடம் உண்டு. இந்நிலையில் ரசிகர் ஒருவர் பகிர்ந்த மீம்ஸை பகிர்ந்துள்ளார். பவானி IPS படத்தில் ஒரு காமெடி காட்சியில் பஜ்ஜியில் உள்ள எண்ணெயை பிழிந்து வாகனங்களுக்கு செலுத்துவார் விவேக். அந்த காமெடி காட்சி கிட்டத்தட்ட இன்று உண்மையாகியுள்ளது.

சுற்றுச் சூழலுக்கும் உடல் நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெய் மறுசுழற்சி முறையில் பயோடீசல் ஆக மாற்றும் திட்டம் தென்காசியில் தொடங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரால் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு முறை பயன்படுத்திய ஆயிலை கொடுத்தால் அது பயோடீசல் ஆக மாற்றப்படுகிறது என்றும், இதன் மூலம் ஒருமுறை ஆயிலை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வருமானம் கிடைப்பது மட்டுமின்றி பயோடீசல் உற்பத்தி அதிகரிப்பதால் நாட்டின் அன்னிய செலவாணியும் குறைகிறது என்பது குறிப்பிடதக்கது.

இதுகுறித்து நடிகர் விவேக் தனது டுவிட்டர் தளத்தில், பஜ்ஜி ஆயிலை பஜாஜ் ஆயிலா மாத்திட்டேண்டா என்று அன்று செய்த காமடி.. இப்போது மீம்சில் என்று குறிப்பிட்டுள்ளார். அன்று விவேக் நடித்த காமெடி காட்சி இன்று நிஜமாகியுள்ளது.

உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்க பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார் விவேக். சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் அரண்மனை 3 படத்திலும் நடிக்கிறார் விவேக். தற்போது பொள்ளாச்சியில் இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இராவண கோட்டம் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான புகைப்படம் !

இராவண கோட்டம்…

வானம் கொட்டட்டும் படத்திற்கு பிறகு தளபதி விஜய்யுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஷாந்தனு. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தை XB பிலிம்ஸ் தயாரித்துள்ளது. மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் தளபதி விஜய்யுடன் ஷாந்தனு ஆடிய நடனத்தை யாரும் மறக்க முடியாது. நடனத்தால் அரங்கையே அதிர வைத்தனர். கொரோனா ஊரடங்கில் புதிதாக youtube சேனல் துவங்கிய ஷாந்தனு, மனைவி கிகியுடன் சேர்ந்து என்டர்டெயின் செய்து வந்தார்.

இந்த லாக்டவுனில் தன்னை ஓர் இயக்குனராகவும் செதுக்கிக் கொண்டார். கொஞ்சம் Corona Naraiyya காதல் எனும் குறும்படத்தை இயக்கினார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது இந்த குறும்படம். அதன் பின் கெளதம் மேனன் இயக்கத்தில் ஒரு சான்ஸ் குடு பெண்ணே பாடலில் நடித்து பட்டையை கிளப்பினார்.

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் இராவண கோட்டம். கண்ணன் ரவி தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் முதற்கட்டப் படப்பிடிப்புடன் நிறுத்தப்பட்டது.

படத்தின் கதை தட்பவெப்பநிலையைப் பொறுத்தது என்றும், வருடத்துக்கு 3 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்றும் படக்குழு அறிவித்தது. மேலும், கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்கள். கடந்த ஆகஸ்ட் மாதம் இராவண கோட்டம் படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டனர் படக்குழுவினர்.

இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் நாயகி கயல் ஆனந்தியுடன் பைக்கில் செல்கிறார் ஷாந்தனு. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர், நீங்க தான இது..என்று ஷாந்தனுவை டேக் செய்துள்ளார். இதை பார்த்த ஷாந்தனு, ஏன் யா…இப்படிபப்ளிக்கா மாட்டி விடுவியா என்று நகைச்சுவையாக கேட்டுள்ளார்.

ஷாந்தனு கைவசம் முருங்கைகாய் சிப்ஸ் படம் உள்ளது. இந்த படத்தில் ஏதோ சொல்ல பாடல் வெளியாகி அசத்தி வருகிறது. தரன் இசையில் சித் ஸ்ரீராம் பாடிய இப்பாடல் ரொமான்டிக் பாடலாக அமைந்துள்ளது. ஸ்ரீஜர் இந்த படத்தை இயக்குகிறார். ஷாந்தனுவின் தந்தையும் பிரபல இயக்குனருமான பாக்யராஜ் முக்கிய ரோலில் நடிக்கிறார்.

ஷாந்தனு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார். இந்த படத்திற்கு மேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்யவுள்ளார். லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சார்பாக சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.

நடிகை-அரசியல்வாதியின் கார் விபத்து: 3 பேர் பரிதாப பலி!

உமாஸ்ரீ..

பிரபல நடிகைக்கு சொந்தமான கார் ஒன்று விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே இருவரும் சிகிச்சை பலனின்றி ஒருவரும் என மொத்தம் 3 பேர் பலியாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல கன்னட நடிகை உமாஸ்ரீ. இவர் அரசியலிலும் ஈடுபட்டு உள்ளார் என்பதும் கர்நாடக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் உமாஸ்ரீக்கு சொந்தமான கார் கர்நாடக மாநிலத்தில் உள்ள உப்பள்ளி என்ற பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த காரில் நடிகை உமாஸ்ரீ செல்லவில்லை என்பதும் டிரைவர் மட்டுமே சென்று கொண்டிருந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இந்த கார் பாண்டிவாடா என்ற பகுதியில் கார் சென்றபோது எதிரே வந்த டாக்டர் ஸ்மிதாகுட்டி என்பவரின் கார் மீது மோதியது.

நேருக்கு நேர் மோதிக் கொண்ட இந்த விபத்தில் டாக்டர் ஸ்மிதாகுட்டி காரில் இருந்த டாக்டர் ஸ்மிதாகுட்டி, அவரது தாயார் ஷோபா குட்டி மற்றும் டிரைவர் சந்திப் ஆகியோர் உயிரிழந்தனர். உமாஸ்ரீ கார் டிரைவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து கர்நாடக மாநில போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பிரபல நடிகை மற்றும் அரசியல்வாதிக்கு சொந்தமான கார் விபத்து ஏற்பட்டு மூன்று பேர் பலியாகிய சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிஷா குறித்து ஒரே வார்த்தையில் பதிவு செய்த சுரேஷ்!

சுரேஷ் சக்கரவர்த்தி…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வரை தாக்குபிடிக்கும் போட்டியாளர் என கருதப்பட்ட சுரேஷ், எதிர்பாராத வகையில் வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களுக்கு கடும் அதிருப்தியாக இருந்தது.

பிக்பாஸ் வீட்டில் சாப்பிடவும், தூங்குவதையும் தவிர வேறு எதையும் செய்யாத ஒருசில போட்டியாளர்கள் இன்னும் இருக்கும் மத்தியில் கண்டெண்ட் கொடுத்து கொண்டிருந்த சுரேஷ் வெளியேறியது நிகழ்ச்சியின் சுவாரஸ்யம் குறைந்ததாக பலர் கருத்து கூறினர்.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினாலும், போட்டியாளர்கள் குறித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சுரேஷ் சமூக வலைத்தளம் மூலம் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று நிஷாவுக்கு பிக்பாஸ் விளையாட்டு என்றால் என்ன? என்பதையும், அவர் ஏன் இன்னொருவரை சார்ந்து விளையாடுகிறார் என்பதையும் கமல்ஹாசன் புரிய வைத்தார். ஆனால் நிஷாவுக்கு புரிந்ததா? என்பதை இனி அவர் விளையாடும் திறனை வைத்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் நிஷா குறித்து சுரேஷ் சக்கரவர்த்தி ஒரே ஒரு வார்த்தையில் விமர்சனம் செய்துள்ளார். அவர் ’நிஷா.. வேஷம்’ என்று கூறியுள்ளார். நிஷாவை சுரேஷ் சரியாக கணித்துள்ளதாக பார்வையாளர்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அர்ச்சனாவின் ‘அன்பு’ குறித்து கேள்வி எழுப்பிய சுரேஷ்..!

சுரேஷ் சக்கரவர்த்தி…

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அர்ச்சனா வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வரும்வரை குரூப் என்றால் என்னவென்றே தெரியாமல் போட்டியாளர்கள் இருந்தனர். ஆனால் அர்ச்சனா எண்ட்ரி ஆன உடனேயே தனக்கென ஒரு குழுவை அமைத்துக் கொண்டு அந்த குரூப்பில் உள்ளவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக பார்வையாளர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

பார்வையாளர்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களான பாலாஜி, ரம்யா, சம்யுக்தா உள்பட ஒரு சிலரும் ஏன் கமல்ஹாசனே கூட சில சமயங்களில் அர்ச்சனாவிடம் குரூப் குறித்து கேள்வி எழுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்தி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த தனது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்.

அந்த வகையில் அர்ச்சனாவின் அன்பு குறித்து அவர் கூறிய போது ’என்னுடைய மைண்டில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் உள்ளது, அரவணைக்கும் அன்பா? அல்லது ஆளை கொல்லும் அம்பா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த கேள்விக்கு விரைவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெடி நடிகருடன் குத்தாட்டம் போட்ட சம்யுக்தா: வீடியோ வைரல்!

சம்யுக்தா…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய சம்யுக்தா ஆரம்பத்தில் பார்வையாளர்களின் விருப்பத்திற்குரிய போட்டியாளராக இருந்தார். ஆனால் அதன் பின்னர் திடீரென அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

நீதிமன்ற டாஸ்க்கில் ஆரியுடன் ஏற்பட்ட மோதல், பாலாஜியால் கேப்டனான பின் அவரது நடவடிக்கையில் ஏற்பட்ட் மாற்றம், இவை அனைத்தையும் விட ‘வளர்ப்பு சரியில்லை’ என்று அவர் பயன்படுத்திய வார்த்தை ஆகியவை பார்வையாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

மேலும் பாலாஜி உடன் இணைந்து கொண்டு ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டதும் அவர் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று அவருக்கு இரண்டு குறும்படங்கள் போடப்பட்டு வெளியேற்றப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சம்யுக்தாவின் பழைய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சம்யுக்தாவும் பாவனாவும் காமெடி நடிகர் சதீஷுடன் தளபதி விஜய் நடித்த ’துப்பாக்கி’ படத்தின் பாடலுக்கு ஆட்டம் போட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு ரசிகர்களின் கமெண்ட்டுக்களும் சுவாரஸ்யமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.