தாயிடம் இருந்து சிம்புவுக்கு கிடைத்த எதிர்பாராத பரிசு!

சிம்பு…

சிம்பு தனது தாயிடம் இருந்து கிடைத்த எதிர்பாராத பரிசால் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார் என்ற தகவல் தற்போது புகைப்படத்துடன் வெளியே வந்துள்ளது.

சிம்புவின் தாயார் உஷா ராஜேந்தர் அவருக்கு ஏற்ற மணமகளை தேடி வருகிறார் என்பதும் விரைவில் சிம்புவுக்கேற்ற பெண்ணைக் கண்டுபிடித்து அவருக்கு திருமணம் செய்து வைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சிம்புவுக்கு அவரது தாயார் உஷா ராஜேந்தர் ஆச்சரியமான பரிசாக அவருக்கு பிடித்த ஒரு காரை பரிசளித்துள்ளார்.

இந்த எதிர்பாராத பரிசை தாயிடமிருந்து பெற்ற சிலம்பரசன் தனக்கு மிகவும் விருப்பமான அந்த காரில் தற்போது நகரில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுசீந்திரன் இயக்கத்தில் ‘ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு, தற்போது வெங்கட்பிரபு இயக்கி வரும் ‘மாநாடு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா-வெற்றிமாறன் ‘வாடிவாசல்’ டிராப்பா? கலைப்புலி எஸ்.தாணு விளக்கம்!

வாடிவாசல்…

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ’வாடிவாசல்’ என்ற திரைப்படம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் சூர்யா அடுத்ததாக பாண்டியராஜன் இயக்கும் படத்தில் நடிக்க சென்றுவிட்டார் என்பதும் வெற்றிமாறன் சூரி நடிக்கும் படத்தை இயக்க சென்று விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து சூர்யா-வெற்றிமாறன் இணையும் ’வாடிவாசல்’ திரைப்படம் டிராப் என்ற வதந்தி பரவியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கலைப்புலி எஸ் தாணு அவர்களின் பெயரில் போலியான டுவிட்டர் பக்கம் ஆரம்பித்த மர்ம நபர்கள் சிலர் அந்த டுவிட்டர் பக்கத்தில் ’வாடிவாசல்’ திரைப்படம் டிராப் என்று பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை அடுத்து இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் தனது சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து கூறியதாவது: எண்ணியது எண்ணியபடி, சொல்லியது சொல்லியபடி,

வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” வலம் வரும் வாகை சூடும்’ என்று பதிவு செய்துள்ளார்.

அடுத்தடுத்து பிளாப்… மங்கும் பட வாய்ப்பு – நடிகை எடுத்த அதிரடி முடிவு !

நடிகை எடுத்த அதிரடி முடிவு…

அக்கறை தேசத்தை சேர்ந்த உயரமான நடிகை ஒருவர் பட வாய்ப்பு இல்லாததால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம்.

டோலிவுட், கோலிவுட் என இரு மொழி படங்களிலும் உயரமான நடிகை ஒருவர் பிசியாக நடித்து வந்தாராம்.

ஒரு படத்திற்காக குண்டான அந்த நடிகை மீண்டும் உடல் எடையை குறைக்க முடியாமல் போனது அவரது சினிமா கேரியரில் பின்னடைவாக அமைந்ததாம்.

அதையும் மீறி வந்த ஓரிரு படங்களும் பிளாப் ஆனதால் அந்த நடிகையை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி குடும்பத்தினர் அறிவுறுத்தினார்களாம்.

பெற்றோரின் அறிவுரைப்படி திருமணம் செய்துகொள்ள அந்த நடிகை ரெடியாகி வருகிறாராம். அவருக்கு மாப்பிள்ளை பார்க்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.

அந்த ஒரு காரணத்திற்காக தனுஷ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் – ஐஸ்வர்ய லட்சுமி !

ஐஸ்வர்ய லட்சுமி…

தனுஷ் படத்திலிருந்து ஒரே ஒரு காரணத்திற்காக நீக்கப்பட்டதாக நடிகை ஐஸ்வர்ய லட்சுமி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மலையாள நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி, கடந்தாண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ஆக்‌ஷன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ள ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இதுதவிர மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் நடிக்கிறார்.

இந்நிலையில், அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், ஜகமே தந்திரம் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே,

இன்னொரு படத்திலும் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்ததாகவும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த படத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

அந்தப்படத்தில் பிராமண பெண் கதாபாத்திரத்திற்கு தான் சரியாக பொருந்தினாலும், தனக்கு அந்த பாஷையை சரியாக பேச தெரியவில்லை என்ற காரணத்தால்

அந்தப்படத்தில் இருந்து விலக்கப்பட்டதாக கூறியுள்ள ஐஸ்வர்ய லட்சுமி, அது எந்தப்படம் என்பதை தெரிவிக்கவில்லை.

பிக்பாஸுக்கு முன்னரே பாலாஜி முருகதாஸ் கலந்து கொண்ட விஜய் டிவி நிகழ்ச்சி, அதுவும் இந்த பிரபல நடிகையுடன்?

பாலாஜி…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சி, அதே சமயம் இந்த நிகழ்ச்சியை பலரும் பலவிதமாக விமர்சித்தும் வருகின்றனர்.

மேலும் இதில் கலந்து கொண்ட புது முகங்களில் பாலாஜியும் ஒருவர், இவர் மாடல் மட்டுமின்றி பலவிதமான பட்டங்களையும் வென்றுள்ளார்.

இந்த போட்டியில் உள்ள கடினமான போட்டியாளர்களில் இவரும் ஒருவர், அவ்வப்போது இவருக்கும் ஆரிக்கும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி முன்பே பிரபல விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

ஆம் Connection என்ற பிரபல நிகழ்ச்சியில் பாலாஜி மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் உடன் கலந்து கொண்டுள்ளார்.

கணவனுடன் பால்கனியில் போஸ் கொடுத்த தாமிரபரணி பட நடிகை..!

நடிகை பானு…

நடிகை பானு முதலில் மலையாள படங்களில் அறிமுகமானார். மலையாளத்தில் ஒட்ட நாணயம் மற்றும் அச்சம் உறங்கும் வீடு என இரண்டு படங்களில் நடித்திருக்கிறார்.

அதன் பிறகு இவருக்கு மலையாளத் திரைப்படங்களில் படவாய்ப்புகள் குறைந்து கொண்டு வந்த நிலையில் மேலும் இவர் தமிழ்த் திரையுலகில் கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி படத்தில் தமிழில் அறிமுகமானார்.

இதுதான் இவருக்கு முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்திய படமாக அமைந்தது. இவரது உண்மையான பெயர் முக்தா.

சினிமாவிற்காக தனது பெயரை பானு என்று மாற்றிக் கொண்டார். தாமிரபரணி படத்தை தொடர்ந்து, மூன்று பேர் மூன்று காதல், அழகர்மலை, சட்டப்படி குற்றம்,

ரசிகர் மன்றம், வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, பாம்பு சட்டை போல் தமிழ் படங்களில் நடித்தார். ஆனாலும் பெரிய ப்ரேக் கிடைக்கவில்லை.

5 வருடங்களுக்கு முன் இவருக்கு திருமணம் ஆனது. தற்போது இவர் கணவருடன் நெருக்கமாக நின்றபடி போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக வருகிறது.

என்னது பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இந்த பிரபலமா?- கசிந்த உண்மை தகவல், ஷாக்கான ரசிகர்கள் !

பிக்பாஸ்…

பிக்பாஸ் நிகழ்ச்சி தான் இப்போது உள்ள தொலைக்காட்சி ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

நிகழ்ச்சியில் உள்ள பிரபலங்களால் பார்க்க ஆரம்பித்த ரசிகர்கள் பின் அவர்களாகவே தொடர்ந்து பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

பிக்பாஸ் 50 நாளை கடந்துவிட்டது, இனி வரும் நாட்களில் நிகழ்ச்சியில் பல திருப்பங்கள் வரும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது வந்த தகவல் என்னவென்றால் இந்த வாரம் வீட்டைவிட்டு வெளியேற இருப்பது ஜித்தன் ரமேஷ் என்று கூறுகின்றனர்.

இவரா இந்த வாரம் வெளியேறப்போவது என்று ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியாக தான் பார்க்கின்றனர்.

நயன்தாராவை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த நடிகை.. இனி இவர் தான் டாப்..!

நயன்தாரா…

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை நயன்தாரா.

வருடாவருடம் ஒவ்வொரு நிறுனத்தில் இருந்து டாப் 10 நடிகைகளின் பட்டியல் வெளியாகும். ஆம் அந்தந்த ஆண்டின் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னி யார் என்றும் அதில் தெரியவரும்.

இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் கடந்த ஆண்டு வரை டாப் 10 தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவர் நடிகை நயன்தாரா தானாம்.

ஆனால் 2020ஆம் ஆண்டில் தெலுங்கு திரையுலகின் கனவுக்கன்னியாக நடிகை சமந்தா முதலிடத்தை பிடித்துள்ளாராம்.

ஆம் தெலுங்கு திரையுலக ரசிகர்கள் மத்தியில், நடிகை நயன்தாராவை பின்னுக்கு தள்ளி நடிகை சமந்தா முதலிடத்தை பிடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

நாம் இருவர் நமக்கு இருவர் நடிகைக்கு நிச்சயதார்த்தம் ! குவியும் வாழ்த்துக்கள் !

ராஷ்மி ஜெயராஜ்..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர்.இந்த தொடரில் நாயகன் செந்தில் இரு வேடங்களில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ரக்ஷா மற்றும் ராஷ்மி இருவரும் நடித்து வருகின்றனர்.இந்த தொடரில் முக்கிய வேடங்களில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வந்தனர்.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து ஷூட்டிங்குகள் தொடங்கின.ஆனால் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான நாம் இருவர் நமக்கு இருவர் தொடரின் ஹீரோயின்கள் மாற்றப்பட்டதாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவி வந்தன.இதனை பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரக்ஷா உறுதி செய்தார்.இந்த தொடரில் நட்சத்திரங்களை ஒன்றுதிரட்டமுடியாததால் இந்த தொடரை அப்படியே முடித்துக்கொண்டு ,புதிய கதை கொண்டு அடுத்த சீசன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளனர் என்ற தகவல் தனக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.இது குறித்து யாரும் தன்னிடம் எந்த ஒரு அறிவிப்பும் அளிக்காதது தனக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியது என்று தெரிவித்தார். ராஷ்மியும் இந்த புதிய தொடரில் நடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

நாம் இருவர் நமக்கு இருவர் இரண்டாவது சீசனிலும் செந்தில் ஹீரோவாக டபிள் ஆக்ஷன் வேடத்தில் நடிக்கிறார் என்றும்.சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமான ரச்சிதா இதில் ஹீரோயினாக நடிக்கிறார் என்பதும் தெரியவந்தது.இந்த தொடர் கடந்த ஜூலை 27ஆம் தேதி முதல் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரின் முதல் சீசனில் ஒரு ஹீரோயினாக நடித்து வந்த ராஷ்மி ஜெயராஜூக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.இது குறித்த புகைப்படங்களும்,வீடியோக்களும் வெளியாகி சமூகவலைத்தளங்களில் செம வைரலாகி வருகின்றன.இவருக்கு பிரபலங்களும்,ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.கலாட்டா சார்பாக ராஷ்மிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

வைரலாகும் STR-ன் புதிய புகைப்படம் !

சிம்பு…

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு பிறகு STR , ஹன்சிகா நடிக்கும் மகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து STR45 படத்திலும்,வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் மாநாடு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த வருடம் தொடங்கி கொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்டது. கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தின் ஹீரோயினாக நடிக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகர்,பாரதிராஜா,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.யுவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

STR என்ன செய்தாலும் அவரை பற்றி என்ன செய்தி வந்தாலும் அது வைரலாகி விடும்.சமீபத்தில் இவரது சமையல்,ஜாகிங் வீடியோக்கள் வைரலாகி வந்தன.கெளதம் மேனன் இயக்கிய குறும்படத்திலும் வீட்டிலிருந்தே நடித்து கொடுத்திருந்தார்.

மாநாடு படத்திற்கு முன் STR பாண்டியநாடு,ஜீவா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கத்தில் தயாராகியுள்ள ஈஸ்வரன் படத்தில் நடித்திருந்தார்.மாதவ் மீடியா ஒர்க்ஸ் மற்றும் D கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.நிதி அகர்வால் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த லாக்டவுன் நேரத்தில் சிம்பு உடலெடையை குறைத்து செம ட்ரான்ஸபார்மேஷன் ஆகியுள்ளார் என்று பலரும் தெரிவித்து வந்தனர்.ஈஸ்வரன் படத்தின் பர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி அவர் செம ஸ்மார்ட்டாக ஸ்லிம்மாக மாறியுள்ளதை ரசிகர்கள் பார்த்து கொண்டாடி வந்தனர்.இந்த படத்தின் வேலைகள் அனைத்தையும் விறுவிறுவென முடித்து கொடுத்தார் சிம்பு.

சிம்புவின் ட்ரான்ஸபார்மேஷனை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.இந்த படம் பொங்கல் 2021க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது.இந்த படத்தின் டீஸர் தீபாவளிக்கு வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஈஸ்வரன் படத்தின் வேலைகளை முடித்த கையேடு வெங்கட் பிரபுவின் மாநாடு ஷூட்டிங்கையும் தொடங்கினார் STR.இந்த படத்தின் இரண்டு வித்தியாசமான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது தனது புதிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சிம்பு.இந்த புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.