சுரேஷ் சக்ரவர்த்தி இவர் பிக்பாஸ் வருவதற்கு முக் மக்களுக்கு அவ்வளவாக தெரியாது.
இப்போது அவரது பெயரை சொன்னாலே சும்மா அதிருதுல என்பது போல் மக்களிடம் பெரிய பெயர் வாங்கிவிட்டார்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக தான் இருந்தது. கடந்த சில நாட்களாக அவர் பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் ரீ எண்ட்ரீ கொடுக்கிறார் என்றும் வதந்திகள் உலா வந்தது.
இந்த நிலையில் சுரேஷ் சக்ரவர்த்தி பிக்பாஸ் குறித்து இன்ஸ்டாவில் ஒரு புகைப்படம் போட்டுள்ளார். அதில் அவரையும், அர்ச்சனாவையும் வைத்து ரசிகர் ஒருவர் உருவாக்கிய மீம்ஸ்.
அதை அவரே ஷேர் செய்ய ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
கோலிவுட் திரையுலகில் உள்ள இளைய தலைமுறை நடிகர்கள் பலர் சிக்ஸ்பேக் வைத்து அசத்தி வருகிறார்கள் என்பது தெரிந்ததே. ஏற்கனவே சிம்பு, தனுஷ், விஷால், பரத், ஆர்யா உள்பட பல நடிகர்கள் சிக்ஸ்பேக் உடலமைப்பில் ஒருசில படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணுவிஷால் சிக்ஸ்பேக் வைத்து அசத்தியுள்ளார்.
இவர் சிக்ஸ்பேக் உடலமைப்புடன் கண்ணாடி முன் நின்று போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.அனேகமாக அவரது அடுத்த படத்திற்காக விஷ்ணுவிஷால் சிக்ஸ்பேக் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் விஷ்ணு விஷாலுக்கு கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் எந்த திரைப்படமும் வெளிவரவில்லை என்றாலும் அவர் தற்போது 5 படங்களில் நடித்து வருகிறார்.
’காடன்’, ’ஜெகஜாலக்கில்லாடி’, ’எப்.ஐ.ஆர்’, ’ஆரண்யா’ மற்றும் ’மோகன்தாஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இவற்றில் மூன்று படங்கள் கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது ஒரே நேரத்தில் சுமார் ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் பாதி படங்களின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு என தென்னிந்திய நடிகராக அவர் மாறிவிட்டார் என்பதும் அது மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அல்லு அர்ஜுன் நடித்து வரும் ’புஷ்பா’ என்ற படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்த நிலையில் திடீரென அவர் இந்த படத்தில் இருந்து விலகினார்
இந்த நிலையில் இந்த படத்தின் வில்லன் கேரக்டருக்கு விஜய்சேதுபதிக்கு பதிலாக விக்ரம் நடிக்க இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன. ஆனால் விக்ரம் தரப்பிலிருந்து இந்த செய்தியை மறுத்துள்ளனர்
‘புஷ்பா’ படத்தில் வில்லனாக நடிக்க எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் இது முழுக்க முழுக்க தவறான தகவல் என்றும் விக்ரம் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ’புஷ்பா’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருந்த வில்லன் வேடத்தில் வேறு எந்த நடிகர் நடிக்க உள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, ஆலியா பட் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆர்ஆர்ஆர்’. கொரானோ தொற்று பரவலுக்குப் பிறகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் முதல் மீண்டும் ஆரம்பமாகி நடந்து வருகிறது.
இப்படத்தில் கதாபாத்திரங்களை பின்னணிக் குரல் மூலம் அறிமுகப்படுத்தி வைக்க மொழிக்கு ஒருவராக அந்தந்த மொழிகளில் பிரபலமான நடிகர்களைக் கேட்க ஆரம்பித்துள்ளனர்.
அந்த விதத்தில் தெலுங்கில் சிரஞ்சீவியும், ஹிந்தியில் ஆமீர் கானும் குரல் கொடுக்க சம்மதித்துவிட்டார்களாம். தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கான நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்.
தமிழில் அப்படி குரல் கொடுக்க வேண்டுமென்றால் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவர்தான் பொருத்தமாக இருப்பார்கள்.
அவர்களில் யார் ஒருவர் சம்மதிக்கப் போகிறார்கள் என்பது சீக்கிரம் தெரிய வரலாம்.
கடந்த சில நாட்களாக நடைபெற்ற டெலிகாலர் டாஸ்க் நேற்று முடிவுக்கு வந்தது. கேப்டனாக இருந்தும் ஆஜீத்திடம் சொல்லிவிட்டு ரியோ போன் செய்ததை சக போட்டியாளர்கள் அலசி, ஆராய்ந்ததன் விளைவாக ரியோ ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்.
யாருக்கும் சொல்ல வேண்டாம் என சொல்லிவிட்டு கேப்டனாக அவரே ரூல்ஸ் மீறியது ரியோவுக்கு எதிராக திரும்பி விட்டது. இதுதொடர்பான விவாதம் சென்று கொண்டிருந்த போது, நான் பாலாவுக்கு தான் போன் செய்ய போகிறேன் என அர்ச்சனா, ஷிவானியிடம் சொன்னதாக தெரிவித்தார்.
இதற்கு பாலாஜி நீங்கள் சொன்னதை ஷிவானி என்னிடம் சொல்லவில்லை என நேர்மையின் வழக்கம்போல ஷிவானியை காப்பற்றினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த அர்ச்சனா, வேகமாக சென்று ஷிவானியை கட்டிப்பிடித்து பாராட்டினார்.
இந்த நிலையில் பாலாஜி, ஷிவானி இருவருமே பொய் சொன்னதாக ரசிகர்கள் ஆதாரத்துடன் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் அர்ச்சனா தான் உங்களுக்கு கால் பண்ண போறாங்க என ஷிவானி தெரிவிக்க பதிலுக்கு பாலாஜி உனக்கு எப்படி தெரியும்? என கேட்கிறார்.
அதற்கு ஷிவானி அவங்க பேசுனதை நான் ஒட்டு கேட்டேன் என்று சொல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
This is the drawback of #Archana… Immiedietly she believe anyone and hug and say thanks, not thinking whether they are truthful or Liars… pic.twitter.com/oV0qvy2qNX
ஹாலிவுட்டில் புரூஸ்லி நடித்த படங்கள் உள்பட பல திரைப்படங்கள் மார்ஷியல் ஆர்ட்ஸ் குறித்து வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ஐந்து நிமிட வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது
கடந்த சில வருடங்களாக குறிப்பாக லாக்டவுன் நேரத்தில் கவர்ச்சி, த்ரில் படங்களை இயக்கி வந்த இயக்குனர் ராம்கோபால் வர்மா, தற்போது இயக்கியிருக்கும் படம் தான் ’லடுக்கி’. இந்த படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் ஐந்து நிமிட பாடல் ஒன்றை இயக்குனர் ராம்கோபால் வர்மா வெளியிட்டுள்ளார்.
இந்த பாடலில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞராக நடித்துள்ள பூஜா பலேகரின் கவர்ச்சியுடன் கூடிய ஆக்சன் காட்சிகள் உள்ளது. கவர்ச்சி, ஆக்சன் என இரண்டும் ஒருசேர கலந்துள்ள இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய், விஷால், சிவகார்த்திகேயன் எனப் பிரபல ஹீரோக்களுடன் தமிழில் நடித்து வந்தார்,. தெலுங்கு படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் பிஸியாக நடித்து வந்தார்.
இவர் தமிழில் பெண்குயின் படத்தில் நடித்தார். அப்படம் தியேட்டரில் வெளியாகாமல் ஒடிடி தளத்தில் வெளியானது. பிறகு தெலுங்கில் மிஸ் இந்தியா படத்தில் நடித்தார். அப்படமும் ஒடிடி தளத்தில் வெளியானது.
தற்போது ரஜினியுடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணி காயிதம் படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தெலுங்கில் நிதின் நடிக்கும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார். அதற்கான படப்பிடிப்பு துபாயில் நடக்கிறது.
படப்பிடிப்பு ஓய்வு நேரத்தில் கீர்த்தி சுரேஷ் சேரில் அமர்ந்தபடி கண்களில் துணியை வைத்து மறைத்துக் கொண்டு அப்படியே சாய்ந்த படி குட்டி தூக்கம் போட்டார். அதைக் கவனித்த ஹீரோ நிதின். இயக்குனர் வெங்கி அட்லுரி இருவரும் சத்தமில்லாமல் அவர் அருகே சென்றனர்.
கீர்த்தியை டீஸ் செய்வதற்காகக் கண்களில் துணியை வைத்துக் கொண்டு தூங்கிய நிலையில் கீர்த்தி இருக்கும்போது செல்ஃபி படம் எடுத்து வெளியிட்டார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
காஜல், சமந்தாவை தொடர்ந்து மாலத்தீவு செல்லும் பிரபல நடிகர்
முன்னணி நடிகையான காஜல் அகர்வால் சமீபத்தில் கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இவர்கள் இருவரும் தேனிலவை கொண்டாடுவதற்காக மாலத்தீவுக்கு சென்றிருக்கிறார்கள்.
அதுபோல் முன்னணி நடிகையான சமந்தாவும் தனது கணவர் நாக சைதன்யாவுடன் விடுமுறையைக் கொண்டாட மாலத்தீவு சென்றுள்ளார்.
அந்த வரிசையில் தற்போது பிரபல நடிகரான சிலம்பரசன் மாலத்தீவு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்த சிலம்பரசன், தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு கைவிடப்பட்டதாக கூறப்பட்ட மஃப்டி படத்தின் ரீமேக்கில் சிலம்பரசன் நடிக்க இருக்கிறார்.
இதற்கான படப்பிடிப்பு மாலத்தீவில் நடக்க இருப்பதாகவும் இதில் சிலம்பரசன் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாயகன் சந்தோஷ் பிரதாப், நான்கு குறும்படங்களை இயக்கி வெற்றி கண்டவர். ரூபாய் 50 கோடி பட்ஜெட்டில் புதிய பெரிய திரை படம் ஒன்றை இயக்க தயாராகிறார். படப்பிடிப்பிற்கு செல்லும் முதல் நாளில் மர்மநபர்களால் கடத்தப்படுகிறார்.
இதனால் படப்பிடிப்பு நின்று போய்விடுகிறது. மனைவி அதுல்லா ரவியும் சந்தோஷ் பிரதாப் காணவில்லை என்று வருத்தப்படுகிறார். இறுதியில் சந்தோஷ் பிரதாப்பை கடத்தியவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? சந்தோஷ் பிரதாப் மீண்டு வந்தாரா? என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் பிரதாப், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். பிற்பாதியில் அவரை முழுவதும் கட்டி வைத்து விடுகிறார்கள். நடிப்பையும் கட்டி வைத்தது போல் இருந்தது.
நாயகியாக நடித்திருக்கும் அதுல்யா ரவி, ஒரு காட்சியில் சிரித்துவிட்டு 2 காட்சியில் அழுதுவிட்டு செல்கிறார். அரவிந்த் ராஜகோபால், தீபக் பரமேஷ், அருண் ஆகியோர் திரைக்கதைக்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.
கூத்து, நாடக கலையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீதர் வெங்கடேசன். முதல் பாதி கதை எதை நோக்கி செல்கிறது என்று தெரியாமல் இருக்கிறது. இரண்டாம் பாதியில் சொல்லவந்ததை கொஞ்சம் தெளிவாகச் சொல்லியிருக்கலாம்.
நவீன உலகத்தால் கூத்து நாடகம் ஆகியவை அழிந்து விட்டதாகவும் அவர்களுக்குள்ளும் நல்ல கதைகள் இருக்கிறது என்பதை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர். சிறந்த கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஜோஸ் பிராங்கிளின் இசையில் கூத்து பாடல் ரசிக்க வைக்கிறது. மனோ ராஜாவின் ஒளிப்பதிவு ஆங்காங்கே பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘என் பெயர் ஆனந்தன்’ தெளிவு இல்லை.