டான்..

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் டான்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர் இதற்கு முன் டாக்டர் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஆக்ராவில் நடைபெற்று வருகிறது.

அங்கு தாஜ்மகாலில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கசிந்து வெளியாகி வருகிறது.
























































