“எவ்ளோ பெரிய CAKE-U..” – ப்ரியா பவானி ஷங்கரின் GLAMOUROUS புகைப்படங்கள் !

பிரியா பவானி ஷங்கர்..

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர்.

நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா, விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

அதன்பின் மேயாதமான் படத்தின் மூலம் சினிமாவில் வந்த இவர் பெரிதும் கவனிக்கப்பட்டார்.

அடுத்த படமே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தியுடன் நடிக்க கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடிக்க, எல்லோர் மத்தியிலும் பிரபலம் ஆனார்.

அதன்பின் கார்த்திக் நரேன் இயக்கத்தில் மா.ஃபியா படத்தில் நடித்தார் ஆனால் அது சரியாக ஓடவில்லை. அதன் பிறகு களத்துல சந்திப்போம் படம் சுமாராக ஓடியது.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர்,

பெரிய சைஸ் கேக் ஒன்றை ஆர்டர் செய்து போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட.. “எவ்ளோ பெரிய்ய்ய கேக்கு…” என்று வர்ணித்து வருகிறார்கள்.

வெளியானது மகான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!!

மகான் பர்ஸ்ட் லுக்..

நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மகான்.

இப்படத்தின் ஷூடிட்ங் பணிகள் அனைத்தும் சமீபத்தில் முடிந்த நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் ரீல் வெளியிடப்பட்டுள்ளது.

ஆம், மகான் என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தின் மாஸ்ஸான பர்ஸ்ட் லுக், இதோ..

செம மாஸ் வீடியோவை வெளியிட்ட நடிகர் சிம்பு.. இணையத்தில் செம வைரல்!

சிம்பு..

தமிழில் முன்னணி நட்சத்திரமாகவும், தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர் சிம்பு.

இவர் நடிப்பில் தற்போது மாநாடு எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார்.

அதே போல் தற்போது கவுதம் மேனன் இயக்கி வரும் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இப்படத்திற்காக உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிமாகவும் மாறி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் செம மாஸாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சிம்பு ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..

குத்து சண்டை பயிற்சியில் நடிகை ஸ்ருதி ஹாசன்.. வெறித்தனமான வீடியோ!!

ஸ்ருதி ஹாசன்..

தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இவர் தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அடுத்ததாக பிரபாசுக்கு ஜோடியாக, பிரஷாந்த் நீல் இயக்கும் சலார் என்கிற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

சமீப காலமாக தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இந்நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் குத்துச்சண்டை பழகும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

VIRAL VIDEO: Bullet-ஐ கைவிட்டு ஓட்டி மாஸ் காட்டிய ரச்சிதா மஹாலட்சுமி !

ரச்சிதா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார்.

இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார். சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர், தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் செம ஆக்டிவாக இயங்கி வரும் ரச்சிதா,

தற்போது புல்லட் அருகில் நின்று வேற லெவல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஜீன்ஸ் அணிந்து தனது வளைவு நெளிவுகள் எடுப்பாக தெரிய Bullet-ஐ கைவிட்டு ஓட்டி மாஸ் காட்டியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், வியந்து இவரை பாராட்டி வருகிறார்கள்.

“Homely Piece, ஆனாலும் Lovely Piece” – நீலிமா ராணியின் கிளாமர் புகைப்படங்கள் !

நீலிமா ராணி..

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து,

மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில்,

கருப்பு நிற புடவை அணிந்து கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள், “Homely Piece-U, ஆனாலும் Lovely Piece-U” என்று கமெண்ட் அடித்திருந்தார்கள்.

பாவாடை தாவணியில்.. கேப்ரியல்லாவின் ஹாட் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

கேப்ரியலா..

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார். சினிமாவுக்கு முன்,

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார்.

அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா. பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

இந்நிலையில், தற்போது தன்னுடைய இடுப்பு அழகு எடுப்பாக தெரியும் படி பாவாடை தாவணி அணிந்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.

கழுத்தில் தாலியுடன் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் வனிதா.. வைரல் புகைப்படம்!!

வனிதா..

தமிழ் சினிமாவில் பெரியளவில் பேசப்படும் அதுவும் சர்ச்சையாக பேசப்படும் நடிகையாக தற்போது இருப்பவர் நடிகை வனிதா. ஆரம்பகாலத்தில் நடிகர் விஜய்யின் சந்திரலேகா படத்தில் நடிகையாக அறிமுகமாகினார்.

இதையடுத்து திருமணம், விவாகரத்து, குடும்ப பிரச்சனை என்று சினிமாவைவிட்டு விலகி இருந்தார்.

மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கும் விதமான கேபிஒய் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா அதன் பிறகு லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் எனபவரை திருமணம்செய்து சில காரணங்களால் பிரிந்தார்.

எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் அதை வனிதாவை சீண்டியே இணையத்தளத்தில் செய்திகள் வலம்வந்தது.

இந்நிலையில் அடுத்த திருமணம் எப்போது என்று கேட்டு வந்த நிலையில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டார். அது பிக்கப் டிராப் படத்தின் போட்டோஷூட் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

சேதுவையே மிஞ்சிய பிச்சைக்காரன் கெட்டப்பில் சியான் விக்ரம்.. வைரலாகும் புகைப்படம்!!

சியான் விக்ரம்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து பெரிய வெற்றிகளை கொடுப்பவர்கள் வரிசையில் இருப்பவர் சியான் விக்ரம். சமீபத்தில் அவர் நடித்து வெளியான படங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

அந்தவகையில் சியான் 60 தற்போது ரசிகர்களிடையே நல்ல எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படத்தில் அவரது மகன் துருவ் விக்ரமும் இணைந்து நடித்து வருகிறார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் படமாக்கபட்டு வருகிறது. அப்படத்தில் விக்ரம் பணம் பறக்க புகைப்பிடிப்பது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ் இணையத்தில் வைரலானது.

இதைதொடர்ந்து சியான் விக்ரம் பிச்சைக்காரன் வேடத்தில் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் லீக்காகியுள்ளது. பிதாமகனையே மிஞ்சும் கதாபாத்திரமாக இருக்குமோ என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

விவாகரத்து சர்ச்சைக்கு பின் சமந்தாவின் கணவர் சத்தமில்லாமல் கோவாவில் செய்த காரியம்!

கோவாவில்..

கடந்த சில நாட்களாக சமந்தாவின் கணவர் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து பெறுகின்றார். இருவரும் பிரிய போகின்றார்கள் என்ற வதந்தி வைரலாகியது. அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது போல ஒரு காரியத்தினை நடிகர் நாகர்ஜுனா செய்து முடித்துள்ளார்.

சமந்தாவும், பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களின் திருமணம் கோவாவில் பிரமாண்டமாக நடந்தது.

கோவா தனக்கு மிகவும் பிடித்த இடம் என்றும், அங்கு வசிக்க ஆசையாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் சமந்தா. இந்நிலையில் தன் கணவருடன் சேர்ந்து கோவாவில் அதுவும் கடற்கரைக்கு அருகில் நிலம் வாங்கியிருக்கிறாராம்.

அந்த இடத்தில் பிரமாண்டமான பண்ணை வீட்டை கட்ட கணவனும், மனைவியும் முடிவு செய்திருக்கிறார்களாம். சமந்தா சமூக வலைதள கணக்குகளில் இருந்து அகினேனி என்கிற பெயரை நீக்கிவிட்டார்.

இதையடுத்து சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே பிரச்சனை, அவர்கள் பிரியப் போகிறார்கள். அதனால் தான் அகினேனியை கழற்றிவிட்டுவிட்டார் என்று பேச்சு கிளம்பியது.

விவாகரத்து பேச்சு கிளம்பியிருக்கும் நேரத்தில் கணவருடன் சேர்ந்து இடம் வாங்கியதன் மூலம் தங்களுக்கு இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்.

சமூக வலைதளங்களில் இருந்து அகினேனியே நீக்கியது குறித்து சமந்தா விளக்கம் அளிக்கவில்லை. இந்நிலையில் நிலம் வாங்கியது தான் அதற்கு விளக்கம் என்பது போன்றாகிவிட்டது.