காயமடைந்த நடிகர் அருண் விஜய்.. வெளியான ஷாக்கிங் நியூஸ்!!

அருண் விஜய்..

ஹரி இயக்கத்தில் புதிதாக உருவாகி வரும் திரைப்படத்தில் தான், தற்போது அருண் விஜய் ஹீரோவாக நடித்து வருகிறார்.

AV 33 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் அருண் விஜய்யுடன் பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ராதிகா சரத்குமார், புகழ், அம்மு அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது கையில் காயமடைந்துள்ளதாக, நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியிருக்கிறார்.

மேலும், ஒரு மணி நேர ஓய்வு எடுத்து கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

காயமடைந்ததால் உடற்பயிற்சியை அடுத்த ஐந்து நாட்களுக்கு செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் பதிவு செய்து இருக்கிறார்.

சார்பட்டா பரம்பரை பட நாயகி துஷாரா விஜயனா இது?- மாடர்ன் உடையில் எப்படி போஸ் கொடுத்துள்ளார் தெரியுமா !!

துஷாரா விஷயன்..

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்க வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

OTT தளத்தில் வெளியான இப்படத்திற்கு மக்களிடம் மிகவும் நல்ல விமர்சனம் வந்துள்ளது. படத்தில் வந்த ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களிடம் பேசப்பட்டது.

இந்த படத்தில் நாயகியாக நடித்து அசத்தியவர் துஷாரா விஷயன். புடவையில் நடித்து அசத்திய அவரின் மாடர்ன் உடை போட்டோ ஷுட் புகைப்படங்கள் திடீரென சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்தன.

அதில் சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் மாரியம்மாவா இப்படி மாடர்ன் உடையில் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதிதாக சொகுசு கார் வாங்கிய பிக் பாஸ் நடிகை ஷிவானி.. விலை மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

ஷிவானி நாராயணன்…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையானவர் இளம் நடிகை ஷிவானி நாராயணன்.

அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் ஷிவானி.

இந்நிலையில், நடிகை ஷிவானி நாராயணன் புதிதாக, BMW சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்த காரின் விலை குறைந்த பட்சம் சுமார், ரூ. 40 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

“இறுக்கி கட்டினாலும், இருக்குறது அப்படியே தெரியுது” கிளாமர் போட்டோக்களை வெளியிட்ட வேதிகா !

வேதிகா..

தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

The Body என்ற இப்படத்தில் பாலிவுட் சினிமாவின் உச்ச நடிகரான முத்த மன்னன் இம்ரான் ஹாஸ்மி ஹீரோவாக நடித்தார். தமிழ் சினிமாவில் முனி படத்தில் வேதிகா ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து சிம்புவுடன் காளை, சாந்தனுக்கு ஜோடியாக காவியத்தலைவன், அதர்வாவுடன் பரதேசி உள்ளிட்ட படங்களில் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

பிரபல தென்னிந்திய மொழி பட நடிகையான வேதிகா தமிழில் போதுமான அளவு படம் கிடைக்கவில்லை என்பதே உண்மை. கடைசியாக இவர் நடித்த காஞ்சனா 3 பேய் ஹிட் அடித்தது.

தற்போது, இவர் Tight T shirt-ஐ அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள் சிலது இணையத்தை கலக்குகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள், “இறுக்கி கட்டினாலும், இருக்குறது அப்படியே தெரியுது” என்று டபிள் Meaning – இல் கலாய்த்து வருகிறார்கள்.

Uncontrollable-ஆ இணையதளத்தை ஆட்டிபடைக்கும் நடிகை நிவேதா தாமஸ் !

நிவேதா தாமஸ்..

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது இதை ரீமேக் செய்து வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்திருந்தார். அந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.

தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி.

இந்தநிலையில், இப்போது சிக்கென இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இளசுகள் மனசை கட்டி இழுத்துள்ளார் அம்மணி.

பட வாய்ப்புகள் வந்ததும் கவர்ச்சியில் இறங்கிய பிக் பாஸ் வனிதா.. புகைப்படத்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்!!

வனிதா விஜயகுமார்…

தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இப்படத்திற்குப் பிறகு இவர் மாணிக்கம் காக்கை சிறகினிலே சும்மா நச்சுன்னு இருக்கு மற்றும் நானும் ராஜாவாகப் போகிறேன் போன்ற படங்களில் நடித்தார் இருப்பினும் ஒரு சில படங்கள் மட்டுமே இவருக்கு வெற்றியை கொடுத்தன.

அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றியும் கண்டார். அதன் பிறகு இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதன் பிறகு வீட்டில் ஒளிபரப்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள ஆரம்பித்தார்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று ஓரளவு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு இவருக்கு அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் தற்போது ஒரு சில படங்கள் மட்டுமே நடித்து வருகிறார்.

பிரசாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு அந்தகன் எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அவரது அப்பா தியாகராஜன் இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தில் வனிதா விஜயகுமாரின் டப்பிங் பணிகள் முடிவடைந்ததை புகைப்படம் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினர்.

சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் வனிதா விஜயகுமார் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமுல் பேபி போல் கொழு கொழுவென மாறிய அமலாபால்.. எக்ஸ்க்ளூசிவ் போட்டோஷூட்!!

அமலாபால்..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் தான் அமலாபால். வரிசையாக தெய்வத்திருமகள், தலைவா போன்ற வெற்றி படங்களை கொடுத்து வந்தார்.

அதன்பிறகு இவர் தேர்ந்தெடுத்த கதைகள் அனைத்தும் இவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை. அதனால் திக்குமுக்காடி கொண்டிருந்த அமலாபாலுக்கு மீண்டும் ஆடை படம் கை கொடுத்தது என்றே கூறலாம்.

இந்த படத்தில் இவர் துளியும் ஆடை இல்லாமல் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இதன் மூலம் இவருக்கு பல சர்ச்சைகள் வந்தாலும் ரசிகர்கள் ஆடை படத்தின் நடிப்பை பார்த்து அமலாபாலை வெகுவாக பாராட்டினர்.

ஒரு நல்ல பெண்ணாக தமிழ் சினிமாவில் வலம் வந்த அமலா பால் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. சமீபகாலமாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமே தான் வெளியிட்டு வருகிறார்.

இதனால் மனமுடைந்த சில ரசிகர்கள் ஏன் அமலாபால் இந்த மாதிரி எல்லாம் செய்கிறீர்கள் எனவும், மற்ற ரசிகர்கள் அமலாபாலிடம் பிடித்தது இதுதான் எனவும் கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்து வருகின்றனர்.

எது எப்படியோ மீண்டும் முன்னணி நடிகர்களுடன் எப்படியாவது ஜோடியாக நடித்துவிட வேண்டும் என்பதற்காகத்தான். இந்த மாதிரியான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

மீண்டும் வித்தியாசமான டைட்டிலில் விஜய் ஆண்டனியின் அடுத்த படம்.. எங்கிருந்துதான் இப்படி யோசிக்கிறாங்களோ!

விஜய் ஆண்டனி..

விஜய் ஆண்டனி என்றாலே வித்தியாசம் என்கிற அளவுக்கு தன்னுடைய ஒவ்வொரு படத்தின் டைட்டில்களையும் வித்தியாசமாக வைத்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார். அந்த வகையில் அடுத்த படமும் வித்தியாசமான டைட்டிலில் உருவாக உள்ளது.

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் தொடர் வெற்றி படங்களை கொடுத்தாலும் இடையில் மாஸ் ஹீரோவாக மாற ஆசைப்பட்டு சில படங்களில் மண்ணை கவ்வினார். இதனால் அவரது மார்க்கெட்டும் கொஞ்சம் அடி வாங்கியது.

மாஸ் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள இன்னும் சில காலம் ஆகும் என்பதை உணர்ந்த விஜய் ஆண்டனி மீண்டும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் கதையின் நாயகனாக நடிக்க தொடங்கினார்.

அப்படி திரும்பி வந்த முதல் படமான கொலைகாரன் படமே சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பிறகு மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள், ஏற்கனவே வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் என அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறார்.

மேலும் பிச்சைக்காரன் 2 படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் என்பதும் கூடுதல் தகவல். இந்நிலையில் அடுத்ததாக கோலி சோடா போன்ற படங்களை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விஜய் ஆண்டனி.

இந்த படத்திற்கு மழை பிடிக்காத மனிதன் என பெயர் வைத்துள்ளனர். விஜய் ஆண்டனியின் ஒவ்வொரு படத்தலைப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து விடுகிறது.

மற்றவர்களைப் போல் இல்லாமல் வித்தியாசமான டைட்டில்கள் வைப்பதால் இவருடைய படங்கள் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் ஸ்ருதி ஹாசன் திடீர் சந்திப்பு !

கீர்த்தி – ஸ்ருதி..

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளாக விளங்குபவர்கள் கீர்த்தி சுரேஷ், ஸ்ருதி ஹாசன்.

இவர்கள் இருவரும் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து விட்டனர், அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் அவருடன் நடித்துள்ளார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் பிரபல நடிகரான பிரபாஸ் உடன் சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தை கே.ஜி.எப் பட இயக்குனர் இயக்கி வருகிறார்.

இந்நிலையில் ஸ்ருதி ஹாசன் தனது தனது இன்ஸ்டா பக்கத்தில் விமான நிலையத்தில் நடிகை கீர்த்தி சுரேஷை சந்தித்த போது எடுக்கப்பட்ட செல்பி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதோ அவர்களின் சந்திப்பில் எடுத்து கொண்ட புகைப்படம்..

சென்சேஷன் நடிகருக்கு ஜோடியான நடிகை ஷில்பா மஞ்சுநாத்.. யாருடன் தெரியுமா?

ஷில்பா மஞ்சுநாத்…

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

இதன்பின், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார்.

மேலும் தற்போது இவர் நடிப்பில் தேவதாஸ் Brothers மற்றும் பேரழகி ISO உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில், தமிழ் திரையுலகின் சென்சேஷன் நடிகர்களில் ஒருவராக நட்டி நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். ‘வேலன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

படத்தில் முக்கிய வேடங்களில் நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.