“Charge போடாம சூடு ஆவுதே…” மொத்த Structure காட்டிய பிரியாமணி!

பிரியாமணி..

அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி.

தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.

மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே

அதிகளவில் தேடி வந்ததால் கும்பிடுபோட்டுவிட்டு தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அங்கு மட்டும் ஓரவஞ்சனை கடும் விதமாக கவர்ச்சி வேடங்களில் டூ பீஸ் நீச்சல் உடை அணிந்தும் நடித்தார்.

சில காலமாக இவரை காணவில்லை என்கிற வகையில் ரசிகர்கள் கவலையில் துரும்பாக இளைத்துவிட்டனர். அவர்களை குஷி படுத்துவதற்காக மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

தற்போது விராட பருவம் 1992 என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். இவர் நடித்த FAMILYMAN 2 Web Series விமர்சனங்கள் அப்படி இப்படி இருந்திருந்தாலும் ஒரு தொடராக பார்க்க விறுவிறுப்பாக நன்றாகவே இருக்கிறது.

தற்போது தனது வலைதளமான இன்ஸ்டாகிராமில் சுட சுட கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் பிரியமான அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், “Charge போடாம சூடு ஆவ்தே…” என்று வர்ணிக்கிறார்கள்.

சரித்திரத்தை கண்முன் நிறுத்திய ‘கொற்றவை’.. வெளியான அதிரடி டீசர் இதோ!!

கொற்றவை..

சமீபகாலமாக பல சரித்திர நிகழ்வுகளை மையப்படுத்தி பல திரைப்படங்கள் இந்தியளவில் வெளியாகி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது தமிழில் உருவாகியுள்ள சரித்திர திரைப்படம் தான், கொற்றவை.

இப்படத்தை தயாரிப்பாளர் சி.வி குமார் இயக்கி தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே மாயன், கேங்ஸ் ஆப் மெட்ராஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் சரித்திர நிகழ்வுகளை கண்முன் நிறுத்தும், ‘கொற்றவை’ படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதில் ராஜேஷ் கனகசபை, சந்தனா ராஜ், அனுபமா குமார், சுபாஷிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இதோ அந்த டீசர்..

சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள மஹா படத்தின் டீஸர் 2 !

மஹா டீஸர் 2..

நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு மஹா படத்தின் புதிய டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் ஹன்சிகாவின் 50-வது திரைப்படம் மஹா . யூ.ஆர்.ஜமீல் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார்.

மேலும் ஸ்ரீகாந்த், மானஸ்வி, சனம் செட்டி, கருணாகரன், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் மஹா படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் நேற்று நடிகை ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு மஹா படத்தின் புதிய டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .

நீச்சல் குளத்தில் சந்தோஷமாக நீந்தும் நடிகை பூமிகா.. ரசிகர்களை கவர்ந்த வீடியோ இதோ!!

பூமிகா..

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூமிகா.

இதன்பின் சூர்யா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று தந்தது.

தமிழில் மட்டுமின்றில், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய பல மொழிகளில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

மேலும், கடந்த 2007ஆம் ஆண்டு பரத் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை பூமிகா, ஒரு ஆண் குழந்தையையும் பெற்றார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்யும் நடிகை பூமிகா தற்போது நீச்சல் குளத்தில் நீந்தும் வீடியோவை சந்தோமாக வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் ரசிகர்களை கவர்ந்து வரும் அந்த வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t)

போலீஸ் கெட்டப்பில் அசத்திய பிக்பாஸ் நடிகை சம்யுக்தா.. செம மாஸ் புகைப்படம்!!

சம்யுக்தா…

பிக் பாஸ் சீசன் 4 மூலம் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கியவர் மாடல் சம்யுக்தா.

ஆம், மாடலாக இருந்த சம்யுக்தா தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாகியுள்ளார்.

விஜய் சேதுபதி நடித்து வரும் படத்திலும் மற்றும் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க சம்யுக்தா கமிட்டாகி இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் சம்யுக்தா.

இந்நிலையில் தற்போது போலீஸ் கெட்டப்பில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த போலீஸ் கெட்டப், சம்யுக்தா நடித்து வரும் புதிய படத்திற்காக அவர் போட்டுள்ளார் என்று கூறுகின்றனர்.

கட்டுப்போட்ட காலுடன் நடிகை யாஷிகா.. வெளியான அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்!

யாஷிகா..

பிரபல நடிகை யாஷிகா, அவரின் தோழி வள்ளி செட்டி பவானி மற்றும் ஆண் நண்பர்களுடன் புதுச்சேரியில் ஒரு விருந்தில் கலந்துகொண்டுவிட்டு சென்னைக்கு காரில் திரும்பும்போது, மாமல்லபுரம் அருகில் விபத்தில் சிக்கினார்கள்.

இதில் அவரின் தோழியான வள்ளிச்செட்டி பவணி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யாஷிகாவும் அவருடன் காரில் பயணித்த 2 ஆண் நண்பர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் படுகாயம் அடைந்துள்ள யாஷிகா ஒரு சில அறுவை சிகிச்சைக்குப்பின் அவர் வீட்டிலேயே ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அவர் பழைய நிலைக்கு திரும்ப ஒரு வருடம் ஆகலாம் என்றும் டாக்டர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்போது யாஷிகா கட்டுபோடப்பட்ட காலுடன் மருத்துவமனையில் ஓய்வு பெற்று வரும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகிய அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

கையில் சிகரெட்டுடன் தனுஷ் பட நடிகை.. இணையத்தை அதிர்ச்சியாக்கிய புகைப்படம்!!

ஐஸ்வர்யா லட்சுமி..

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வெளியான திரைப்படம் ஜகமே தந்திரம்.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக, நடித்திருந்தவர் இளம் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் இதற்கு முன் மலையாளத்தில் வெளியான பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் தற்போது தமிழில் உருவாகி வரும் பிரமாண்ட திரைப்படம், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கையில் சிகரெட் வைத்துக்கொண்ட புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், ‘ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்த நடிகையா இது’ என கேட்டு அதிர்ச்சியாகி கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

சமந்தா, கீர்த்தி சுரேஷை பின்னுக்கு தள்ளிய நடிகை ராஷ்மிகா மந்தனா.. ரசிகர்கள் ஷாக்!!

ராஷ்மிகா மந்தனா..

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

சமீபத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.

இவருக்கு தென்னிந்திய மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாகவும் இருப்பார் நடிகை ராஷ்மிகா.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை ஒன்றை ராஷ்மிகா படைத்துள்ளார். ஆம், இன்ஸ்டாகிராமில் Followers எண்ணிக்கை, 20 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தென்னிந்திய நடிகைகள் காஜல் அகர்வால் 19 மில்லியன், சமந்தா 18 மில்லியன், கீர்த்தி சுரேஷ் 10 மில்லியன் Followers வைத்திருந்தனர்.

தற்போது காஜலை பின்னுக்கு தள்ளி ராஷ்மிகா முதலிடம் பிடித்துள்ளார்.இதனால் அவர் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள்.

9 முறை மூளையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சீரியல் நடிகை சரண்யா மரணமடைந்தார்.. திரையுலகினர் அதிர்ச்சி!!

சரண்யா..

மலையாள சின்னத்திரையுலகில் மிகவும் பிஸியான நடிகையாக வளம் வந்தவர் சரண்யா. சில வருடங்களுக்கு முன் இவருக்கு ப.ய.ங்கரமான தலைவலி ஏற்பட்டதால், இவர் மருத்துவரை அணுகியுள்ளார்.

அப்போது, அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவருகிறது. அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் கூறினர்.

இதனால் அவருக்கு முதல் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இதன்பின் வீடு திரும்பிய நடிகை சரண்யாவிற்கு, சில மாதங்கள் கழித்து மீண்டும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

இதனால் இரண்டாவது முறையாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதன்பின் சில மாதங்கள் கழித்து மீண்டும் தலைவலி ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவரை அணுகியுள்ளார் நடிகை சரண்யா.

இதன்பின், 7 முறை இவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் படிப்படியாக நடிகை சரண்யா குணமடைந்து வந்துள்ளார்.

ஆனாலும், தீடீரென சிகிச்சை பலனின்றி நேற்று நடிகை சரண்யா மரணமடைந்துள்ளார் என்று, அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. இவரின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

53 வயதில் தலைகீழாக யோகா செய்து அசத்திய நடிகை சமந்தாவின் மாமியார்!!

நடிகை அமலா..

டி. ராஜேந்தர் இயக்கி நடித்து வெளியான மைதிலி என் காதலி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா.

இதன்பின், ரஜினியுடன் மாப்பிள்ளை, கமலுடன் சத்யா, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தார்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கொடிகட்டி பறந்துவந்தா நடிகை அமலா, தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் 53 வயதாகும் நடிகை அமலா, தலைகீழாக யோகா செய்து அசத்திய புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

 

A post shared by Amala Akkineni (@akkineniamala)