பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வெளியான லேட்டஸ்ட் ஷட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!

பொன்னியின் செல்வன்..

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.

இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி என ஏராளமான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் புதிய போஸ்டர் சமீபத்தில் வெளியானது, அதில் PS-1(பொன்னியின் செல்வன்) படத்தின் முதல் பாகம் 2022-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் தற்போது இப்படத்திற்காக போடப்பட்டுள்ள பிரம்மாண்ட செட்டுகளின் ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

சார்பட்டா பரம்பரை பட நடிகையா இது?- மாடர்ன் உடையில் அடையாளமே தெரியலையே!!

துஷாரா விஜயன்..

பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா படத்தில் OTT தளத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

படம் வெளியாகிய நாள் முதல் படத்தை பற்றிய பேச்சு தான் சமூக வலைதளங்களில் அதிகமாக இருக்கிறது. அந்த அளவிற்கு படம் ரசிகர்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் நடித்த பெரிய நடிகரான ஆர்யா முதல் சின்ன சின்ன வேடத்தில் நடித்தவர்கள் என அனைவருக்குமே பெரிய பாராட்டு கிடைத்து வருகிறது.

சார்பட்டா படத்தில் நாயகியாக நடித்தவர் துஷாரா விஜயன். குடும்ப குத்துவிளக்காக தாவணியில் நடித்த அவர் நிஜத்தில் நிறைய மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷுட் எல்லாம் நடத்தியிருக்கிறார்.

அதில் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிகம் பரவ அட சார்பட்டா பரம்பரை பட நடிகையா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

அரைகுறை ஆடையில் பிரபல நடிகரின் பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட தொகுப்பாளினி பாவனா!!

பாவனா..

ஒரு சின்ன தொலைக்காட்சியில் தொகுப்பாளினி பணியை தொடர்ந்தவர் பாவனா.

அதன்பின் விஜய் டிவி வந்த அவர் நடனம், பாடல் என ஏகப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக இருந்து வந்தார்.

அவரும், சிவகார்த்திகேயனும் இணைந்து தொகுத்து வழங்கிய நடன நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய ரீச். அப்படியே பாவனா கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வழங்கும் பணியை தொடர்ந்தார்.

அண்மையில் IPL கிரிக்கெட் விளையாட்டை தொகுத்து வந்த அவர் தனது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என பாதியிலேயே துபாயில் இருந்து சென்னை திரும்பினார்.

அவ்வப்போது பிக்பாஸ் புகழ் சம்யுக்தாவுடன் இணைந்து பாடல்களுக்கு நடன ஆடி வீடியோ வெளியிடுவார்.

தற்போது அவர் தனியாக அரைகுறை ஆடையில் சார்பட்டா பரம்பரை படத்திற்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

தீவிர சிகிச்சை பிரிவில் வேனு அரவிந்த், கோமா நிலைக்கு சென்ற பரிதாபம்!!

வேனு அரவிந்த்..

சின்னத்திரை சீரியல்களில் செம்ம பேமஸான நடிகர் வேனு அரவிந்த்.

இவர் நடிப்பில் அலைகள், வாணி ராணி ஆகிய சீரியல்கள் செம்ம பேமஸ்.

இந்த நிலையில் சின்னத்திரை நடிகர் வேனு அரவிந்த் அப்பலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமா ஸ்டேஜில் இருக்கிறாராம்.

கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்திருக்கிறது. அதன் பின்பு மூளையில் கட்டி வந்ததாம். அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றியிருக்கிறார்கள்.

உடனேயே கோமாவில் ஆழ்ந்துவிட்டாராம். இதை அறிந்த பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

“நயன்தாரா பொண்ணு இல்ல, நயன்தாராவுக்கே அம்மா…” – அனிகாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்..!

அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா.

இந்நிலையில், கடற்கரையில் செம்ம க்யூட்டான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்துள்ளார்.

இதனைபார்த்த ரசிகர்கள், “இது நயன்தாராவுக்கு பொண்ணு இல்ல நயன்தாராவுக்கே அம்மா..” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

உடல் எடையை குறைத்து புகைப்படத்தை வெளியிட்ட சமீரா ரெட்டி.. இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்!!

சமீரா ரெட்டி..

இந்தி திரையுலகில் நடிகையாக இருந்து வந்த மும்பையை சேர்ந்த சமீரா ரெட்டி, 2008-ம் ஆண்டு வாரணம் ஆயிரம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார்.

பின்னர் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இரு குழந்தைகளுக்கு தாயான சமீரா ரெட்டி, பல மாதங்களாக எடை குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

சமூகவலைதளங்களில் தீவிரமாக இருக்கும் சமீரா, தனது எடை அதிகரிப்பு, மகப்பேறுக்கு பிந்தைய மனச்சோர்வு, கர்ப்பம் மற்றும் எடையிழப்பும், காதல் பற்றி தனது ரசிகர்களிடம் பதிவுகள் மூலம் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் ஒரே பிரேமில் தனது இரு போட்டோக்களை ஷேர் செய்துள்ள சமீரா “9 கிலோ குறைத்து விட்டேன், இறுதியாக கடின உழைப்பு பலனளிக்கிறது. 92 கிலோ உடல் எடையில் எனது எடை இழப்பு பயணத்தை துவக்கினேன்.

தற்போது அதிலிருந்து 9 கிலோ எடை குறைந்து 83 கிலோவில் உள்ளேன். இன்னும் 8 கிலோவை குறைக்க வேண்டும். எனது இலக்கை அடைவதற்கான ஒரே வழி நிலையான கவனம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் பாக்சிங் செய்ய துவங்கி இருப்பதாகவும், அது மிகவும் வேடிக்கையாக இருப்பதாகவும் சமீரா கூறி உள்ளார். தான் பாக்சிங் செய்யும் வீடியோவை விரைவில் ஷேர் செய்வதாகவும்,

உங்களுக்காக எதை செய்தாலும் அதை தொடர்ந்து செய்யுங்கள் மிக முக்கியமாக எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் என்று கூறி உள்ளார்.

கடற்கரையில் மேக்கப் இல்லாமல் சுற்றிய நடிகை தன்ஷிகா!!

தன்ஷிகா…

திரையரங்குகளில் படங்கள் வெளியாவதில்லை, பலரும் படப்பிடிப்பு இல்லாமல் மற்ற வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

நடிகைகள் பலர் போட்டோ ஷுட்டில் அதிக கவனம் செலுத்து கின்றனர்.

அப்படி கருப்பன், கபாலி, பேராண்மை, அரவான், பரதேசி என தொடர்ந்து நல்ல கதையுள்ள படங்களில் நடித்துவந்த சாய் தன்ஷிகா புதிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

கடற்கரையில் சுத்தமாக மேக்கப் இல்லாமல் அழகிய போட்டோ ஷுட் நடத்தியிருக்கிறார்.

பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான தனுஷின் 43 பட ஃபஸ்ட் லுக்!!

தனுஷின் 43..

நடிகர் தனுஷ் அடுத்தடுத்து தரமான படங்கள் நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார். கடைசியாக தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படம் வெளியாகி இருந்தது.

ரிலீஸிற்கு முன் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படம் சரியான விமர்சனங்களை பெறவில்லை. ஆனால் தனுஷின் ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள்.

இன்று நடிகர் தனுஷிற்கு பிறந்தநாள், காலை முதல் அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க இருக்கும் தனுஷின் 43வது படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு மாறன் என பெயர் வைத்துள்ளனர். இதோ வெளியான ஃபஸ்ட் லுக்,

காருக்குள் நடிகை நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ !

நிவேதா பெத்துராஜ்..

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி,

பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.

அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.

அடிக்கடி கவர்ச்சி படங்களை இறக்கி ரசிகர்களுக்கு சூடேத்தி விடுவார். இந்நிலையில்,

காருக்குள் அமர்ந்து கொண்டு இளநீர் அருந்தும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

”எல்லாரும் அனிமல்ஸ் தான்” என ராதிகா ஆப்தே பகிர்ந்த அதிர்ச்சிப் படம்!!

ராதிகா ஆப்தே..

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்த ‘கபாலி’ படத்தில் ரஜினி ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் ஹிந்தி நடிகை ராதிகா ஆப்தே.

அவ்வப்போது அவரது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சிகரமான, கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி தருவார்.

அந்த விதத்தில் பூங்கா போன்ற ஒரு இடத்தில் நடைபாதையில் வைக்கப்பட்டுள்ள ஒரு தவளை சிலைக்குப் பக்கத்தில், அந்த தவளை போலவே அமர்ந்து ஒரு புகைப்படத்தை எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

அரை குறை மேலாடையுடன், கீழாடை இருக்கிறதா இல்லையா என்று சந்தேகப்படும் அளவிற்கு கால்களை மடித்து அவர் அமர்ந்திருக்கும் தோற்றம் கண்டிப்பாக அதிர்ச்சியோ அதிர்ச்சிதான்.

அந்த புகைப்படத்தைப் பதிவிட்டு, “எல்லோருமே மிருகங்கள்தான். நான் தவளை போலவே இருக்கிறேன். நீங்கள் எந்த மிருகம் ?,” என அவர் கேள்வியும் கேட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..