அழகிய உடையில் போஸ் கொடுத்துள்ள சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

சமந்தா..

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கு பெரியளவிலான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை உண்டாக்கிய The Family Man வெப் சீரிஸில் சமந்தாவின் கதாபத்திரம் பெரியளவில் பேசப்பட்டது.

மேலும் தற்போது தெலுங்கில் ‘சகுந்தலம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு ‘சகுந்தலம்’ படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா, தற்போது மிகவும் அழகிய உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

பெரியளவில் எதிர்பார்க்கப்படும் இந்த திகில் படத்திலும் விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் உள்ளவர் தான் விஜய் சேதுபதி.

இவர் நடிப்பில் கடைசியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது, அதனை தொடர்ந்து வரிசையாக இவரின் பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் வரிசையாக எல்லா திரைப்படங்களிலும் சிறிய கதாபாத்திரமாக இருந்தலும் கூட நடித்து வரும் விஜய் சேதுபதி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் ஆண்ட்ரியா நடிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிசாசு 2 படத்திலும் விஜய் சேதுபதி நடித்துள்ளாராம்.

தனுஷ் நடிக்கும் D43 படத்தின் First லுக் எப்போது தெரியுமா – வெளியான அதிகாரப்பூர்வமான தகவல்!!

D43..

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் D43.

இப்படத்தில் தனுஷுடன் இணைந்து முதல் முறையாக இளம் நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த இப்படத்தின் First லுக் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படத்தின் First லுக், இன்று காலை 11 மணிக்கு அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர்.

7 வருடம் கழித்து மீண்டும் நடிகை த்ரிஷா எடுத்துள்ள முடிவு – என்னவென்று தெரியுமா?

த்ரிஷா..

நடிகை த்ரிஷா கிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வருக்கிறார்.

சூர்யா நடிப்பில் வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா.

இதனை தொடர்ந்து, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாகியுள்ளார்.

இவர் நடிப்பில் உருவான ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் தயாராகி, வெளிவராமல் இருக்கிறது.

இதுமட்மின்றி, பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் த்ரிஷா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை த்ரிஷா 7 வருடம் கழித்து மீண்டும் கன்னடத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து வெளியான முக்கிய அப்டேட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

ஆர்.ஆர்.ஆர்..

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ஆர்.ஆர்.ஆர்.

ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மேலும் வருகிற அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி 5 மொழிகளில் பிரம்மாண்டமாக, இப்படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் தீம் பாடல் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு அப்பாடல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீரவாணி இசையில் நட்பை மையாமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை 5 மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் பாடி உள்ளனர்.

அதன்படி தமிழில் அனிருத்தும், தெலுங்கில் ஹேமசந்திராவும், மலையாளத்தில் விஜய் ஏசுதாஸும், கன்னடத்தில் யசின் நசிரும், இந்தியில் அமித் திரிவேதியும் பாடி உள்ளனர்.

திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்று காதலனை பிரிகிறாரா நடிகை எமி ஜாக்சன்- வெளிவந்த ஆதாரம்!!

எமி ஜாக்சன்..

ஆர்யாவுடன் மதராசப்பட்டினம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார் எமி ஜாக்சன்.

அப்படத்திற்கு பிறகு தெறி, ஐ, 2.0 என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.

பிறகு காதலர் ஜார்ஜ் பனாயிடோ என்பவருடன் நிச்சயதார்த்தம் மட்டும் செய்துகொண்டார்.

அவர்களுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை ஆனால் எமி ஜாக்சன் கடந்த 2019ம் ஆண்டு குழந்தை பெற்றார்.

தற்போது என்னவென்றால் காதலர் ஜார்ஜ் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார்.

இதனால் இருவரும் பிரிந்துவிட்டதாக ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இறுக்கமான உடையில் தனது புகைப்படங்களை வெளியிட்ட ரம்யா பாண்டியன்!

ரம்யா பாண்டியன்..

குரு சோமசுந்தரம் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜோக்கர்,

இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.

அதன்பின் எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்த ரம்யா பாண்டியன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

இவர் ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானதை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பைனல்ஸ் வரை சென்றார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரம்யா பாண்டியன்,

தற்போது இறுக்கமான உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

கர்ப்பமாக இருப்பதால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா வெண்பா?

வெண்பா..

பாரதி கண்ணம்மா இந்த சீரியல் மக்கள் மனதில் நன்றாக பதிந்துவிட்டது. இதில் நடிக்கும் கலைஞர்களும் மக்களுக்கு அவர்களது குடும்பத்தில் ஒருவர் போல் ஆகிவிட்டனர்.

இந்த சீரியல் வெண்பா என்ற வில்லியால் தான் இவ்வளவு நாள் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது.

இதனால் உடனே அனைவரின் கேள்வியும் சீரியலில் இருந்து நின்றுவிடுவாரா என்பது தான். அந்த கேள்விக்கும் அவரே பதில் கொடுத்துவிட்டார்.

நான் சீரியலில் இருந்து நிற்கப்போவதில்லை, தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் அவரது ரசிகர்களோ இந்த நேரத்தில் அதுவும் கொரோனா காலத்தில் நீங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு வீட்டில் இருங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சில ரசிகர்கள் அட நம்ம வெண்பா சீரியலில் தொடர்ந்து வருவார் என ஜாலியாக உள்ளனர்.

எல்லோரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த நவரசா டிரைலர் இதோ!!

நவரசா..

தமிழ் சினிமாவில் இப்போது திரையரங்கில் வெளியாக படங்கள் உருவாவதை விட OTT ரிலீஸ் படங்கள் தான் அதிகம் வருகின்றன.

அப்படி OTT தளத்தில் வெளியாக உருவாகி வந்த படம் நவரசா. ரசிகர்கள் ரசிக்கும் பல இயக்குனர்கள், நடிகர்கள் இதில் உள்ளனர்.

எனவே இந்த நவரசா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.

தற்போது நவரசா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது,

அஞ்சலியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வியப்படைந்த ரசிகர்கள் !!

அஞ்சலி..

நடிகை அஞ்சலிக்கு தமிழில் படவாய்ப்புகள் இல்லை என்றாலும் தெலுங்கு, கன்னடத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோ, வீடியோக்களை பதிவிடுவார்.

தற்போது தலைகீழாக தான் தொங்கியபடி யோகாசனம் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி உள்ளார்.

அஞ்சலி வெளியிட்டுள்ள அந்த போட்டோக்களுக்கு ரசிகர்கள் ஆச்சர்யம் கலந்த கமெண்டுகளை கொடுத்து வருகிறார்கள்.