தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பார்வதி நாயர். தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம் மூலம் அறிமுகமானார்.
அப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அறிமுகமான முதல் படமே வெற்றிப் பெற்றதால் தொடர்ந்து உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக,
எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். தற்போது ஆலம்பனா, ரூபம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மற்ற நடிகைகளைப் போல் பார்வதி நாயரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அடிக்கடி விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் பார்வதி, இன்ஸ்டாகிராம் லைவில் தனது ரசிகர்களுடன் உரையாடியும் வருகிறார்.
இந்நிலையில் ஷவரில் குளிப்பது போன்ற வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்வதி நாயர் வெளியிட்டுள்ளார். கருப்பு நிற உடையில் குளிப்பது போன்ற இந்த கவர்ச்சி வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
இருப்பினும் சிலர் பார்வதியை கலாய்த்து வருகின்றனர். மேலும் ரித்திகா சிங்கை காப்பி அடிக்கிறார்களா என கமெண்டுகளில் கேட்டு வருகின்றனர். சமீபத்தில் ரித்திகா சிங்கும் இதே போன்று குளக்கரையில் ஈரம் சொட்டும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் தான் நடிகை காஜல் அகர்வால், இவர் தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர்.
மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் கெளதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார், திருமணத்திற்கு பின்னரும் காஜல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஆச்சார்யா, இந்தியன் 2, பாரிஸ் பாரிஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் லைவ் டெலிகாஸ்ட் என்ற வெப் சீரிஸூம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் காஜல் அகர்வால் அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது செம ஸ்டைலிஷ் உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
பாகுபலி திரைப்படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான தெலுங்கு நடிகர் தான் பிரபாஸ், இவர் தொடர்ந்து பிரம்மாண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக சாஹா திரைப்படம் மிகவும் பிரம்மாண்டமாக வெளியானது, ஆனால் இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில் பிரபாஸ் அடுத்தடுத்து நான்கு மெகா பட்ஜெட் படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆம், இவர் நடித்து வந்த ராதே ஷ்யாம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாம். அதனை தொடர்ந்து அதிபுருஷ், சலார், Project K உள்ளிட்ட படங்களில் ஒரே சமயத்தில் நடிக்க உள்ளாராம்.
மேலும் இந்த நான்கு படங்களும் மெகா பட்ஜெட்டில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘அவன் இவன்’ படத்திற்கு பின், ஆர்யா – விஷால் இருவரும் மீண்டும் இணைந்து நடித்துள்ள, மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் ‘எனிமி’ படத்தின் டீசர் வெளியாகி… நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு,
ஆர்யாவின் கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் பெரிதாக பாராட்டப்பட்டது. இதனையடுத்து ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை 3, எனிமி ஆகிய படங்களின் அப்டேட்டுக்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.
இந்நிலையில் தன்னுடைய உயிர் நண்பரான விஷாலுடன் ஆர்யா இணைந்து நடித்து வரும் திரைப்படம் ‘எனிமி’. இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார்.
நடிகை மிருணாளினி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வினோத் தயாரிக்கிறார். மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
மிகப்பெரிய பட்ஜெட், விஷால் – ஆர்யா மீண்டும் ஒன்றிணைவது போன்ற விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்று மாலை ‘எனிமி’ படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.
அதன்படி தற்போது விஷால் மற்றும் ஆர்யா ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் டீசர் வெளியாகியுள்ளது. ஆர்யாவை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக வருகிறார் விஷால்.
ஹீரோ இவராக இருந்தாலும், வில்லனாக நடித்துள்ள ஆர்யா இவரை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒவ்வொரு காட்சிகளிலும் மிரட்டியுள்ளார். மேலும் உண்மையான எதிரி யார் தெரியுமா? என்பது போன்ற வசனங்களும் இடம்பெற்றுள்ளது.