எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது லுக் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

எதற்கும் துணிந்தவன்..

பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது சூர்யா நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

நேற்று மாலை இப்படத்தின் First லுக் வெளியாகி, சமூக வலைத்தளத்தில் ட்ரெண்ட் ஆனது.

அதனை தொடர்ந்து நேற்றிரவு இப்படத்தின் Second லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, எதற்கும் துணிந்தவன் படத்தின் மூன்றாவது லுக் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

திருமண கோலத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி – கண்களை கொள்ளைகொள்ளும் அழகிய புகைப்படம்!!

ரோஷினி ஹரிப்ரியன்..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய, முன்னணி சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலுக்கு என்றே, ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளதை அனைவரும் அறிவோம்.

மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது டாப்பில் இருப்பதும் பாரதி கண்ணம்மா தான்.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி ஹரிப்ரியன், தற்போது ரசிகர்கள் மனதை கண்ணம்மா கதாபாத்திரத்தின் மூலம் கவர்ந்துள்ளார்.

அதே போல் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்தும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது திருமண கோலத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.. 

எனிமி படத்தின் டீசர் எப்போது தெரியுமா – வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு!!

எனிமி..

பாலா இயக்கத்தில் ஆர்யா, விஷால் நடிப்பில் வெளியான திரைப்படம் அவன் இவன்.

இப்படத்திற்கு பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து ‘எனிமி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார்.

இதில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்நிலையில், எனிமி படத்தின் டீசரை நாளை மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

நடிகை பிரியாமணியின் திருமணம் செல்லாது- அவரது கணவரின் முதல் மனைவி பகீர் தகவல்!!

பிரியாமணியின்..

தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து தேசிய விருது எல்லாம் வாங்கி சாதித்தவர் நடிகை பிரியாமணி. இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.

கொஞ்சம் மார்க்கெட் குறையவே பட வாய்ப்புகள் அவ்வளவாக வருவதில்லை. எனவே இவர் முஸ்தப்பா ராஜ் என்பவரை காதலித்து 2017ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இருவரும் எடுக்கும் புகைப்படங்களை பிரியாமணி ஷேர் செய்த வண்ணம் இருந்தார். இப்போது என்னவென்றால் முஸ்தப்பா ராஜின் முதல் மனைவி ஆயிஷா, நடிகை பிரியாமணியின் திருமணம் செல்லாது.

இன்னும் எனது கணவரிடம் இருந்து நான் விவாகரத்து பெறவில்லை, விவாகரத்துக்கு நீதிமன்றனத்தை கூட நாங்கள் நாடவில்லை என கூறுகிறார்.

ஆனால் முஸ்தப்பா தரப்பில் அவர் கூறுவது அனைத்தும் பொய், விவாகரத்து பெற்றுவிட்டோம் என கூறி வருகிறார்.

யூடியூப்பில் மிக பெரிய சாதனையை படைத்த குக் வித் கோமாளி அஷ்வின்.. குவியும் வாழ்த்துக்கள்!

அஷ்வின்..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 2.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்து மூன்றாவது இடத்தை பிடித்தது மட்டுமின்றி ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானவர் தான் அஷ்வின்.

மேலும் அஷ்வின் விரைவில் தமிழ் சினிமாவிற்கு என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

இந்நிலையில் அஷ்வின் மற்றும் ரெபா மோனிகா நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ஆல்பம் சாங் தான் குட்டி பட்டாஸ்.

சென்சேஷனல் ஹிட்டான இப்பாடல் தற்போது யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதனால் அஷ்வினின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

பிரபல கிரிக்கெட் வீரருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை சன்னி லியோன்..!

சன்னி லியோன்..

ஸ்ரீசாந்த், சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

ஏற்கனவே 2 இந்தி படங்களில் நடித்துள்ள அவர், தற்போது புதிதாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அவர் சிபிஐ அதிகாரியாக நடிப்பதாகவும், இப்படத்துக்கு பட்டா என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் ஸ்ரீசாந்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் முன்னணி நடிகை சன்னி லியோன் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீசாந்தும் சன்னி லியோனும் முதன்முறையாக ஜோடி சேர்ந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கவுதம் மேனன் மற்றும் சிம்புவின் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!

நதிகளிலே நீராடும் சூரியன்..

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்றது.

அதனைத்தொடந்து சிம்பு, கவுதம் மேனன் கூட்டணியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ‘அச்சம் என்பது மடமையடா’ என்ற திரைப்படம் வெளியானது.

இப்படமும் சூப்பர் ஹிட்டானது. இவர்கள் மூன்றாவது முறையாக கூட்டணி அமைக்க உள்ள படம் ‘நதிகளிலே நீராடும் சூரியன்’.

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி வருகிற ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

மேலும் ஓரிரு மாதங்களில் படப்பிடிப்பை முடித்து இந்தாண்டு இறுதியில் படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சூர்யா நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ செம மாஸ் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியானது !!

எதற்கும் துணிந்தவன் டீஸர்..

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் சூர்யா 40.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துகின்றனர்.

இப்படத்தின் First லுக் போஸ்டர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என சன் பிச்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.

அதன்படி தற்போது அப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகியுள்ளது, இப்படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என தலைப்பிடப்பட்டுள்ளது.

செம மாஸ் டீஸர் இதோ..

வெளியானது எதற்கும் துணிந்தவன் படத்தின் இரண்டாவது போஸ்டர், வெறித்தனமான லுக்!

எதற்கும் துணிந்தவன்..

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரியங்கா அருள் மோகன், சரண்யா பொன்வண்ணன் மற்றும் சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டாவது லுக் வெளியாகியுள்ளது.

இதோ அந்த போஸ்டர்..

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் அரண்மனை 3 படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியானது..!

அரண்மனை 3..

மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்ற திகில் திரைப்படங்களில் ஒன்று அரண்மனை.

இதன் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. ஆனால், இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் சுந்தர். சி இப்படத்தின் மூன்றாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார்.

இதில் சுந்தர்.சி, ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா, விவேக், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் First லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தற்போது இப்படத்திலிருந்து சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.