முன்பெல்லாம் சினிமாவில் நடித்து முடித்து, வாய்ப்புகள் குறையும் போது சின்னத்திரைக்குள் நுழைவதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நடிகைகள். ஆனால் இப்போது முதலில் சீரியலில் அறிமுகமாகி, பின் சரியான வாய்ப்புகள் அமையும் போது சினிமாவில் நுழையும் ட்ரெண்ட் உருவாகியுள்ளது.
ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.
அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். விஜய் தேவரகொண்டா தயாரிப்பில் வெளியான படம் அது.
இதைத் தொடர்ந்து தமிழிலும் வெள்ளித்திரை வாய்ப்புகள் கதவைத் தட்டுவதாக பூரித்துச் சொல்கிறார் வாணி போஜன். தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றை ஏற்றுள்ளார்.
இவர் நடித்த மலேசியா To அம்னீஷியா படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சென்னையில் செட்டில் ஆகி ஏர் ஹோஸ்டஸாக பணியில் சேர்ந்தார். பின்னர் மாடலிங்கில் கால் பதித்தார்.
அடுத்து, டி.வி. சீரியல், இப்போது பல படங்களில் நடித்து வரும் இவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை வாட்டி வதைக்கிறார் வாணி போஜன்,
தற்போது நீண்ட நாட்கள் கழித்து ஒரு கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ஆள் நல்ல துரும்பாக உடல் இளைத்து சிக்குன்னு உடம்பை ரெடி பண்ணி சூப்பராக இருக்கிறார். அவரை பார்த்த ரசிகர்கள் “எந்த ஆங்கிள்-ல இருந்து பாத்தாலும் கும்முன்னு இருக்கீங்க..” என்று உருகி வருகிறார்கள்.
தெலுங்கில் பிரம்மாண்டமான தயாரிப்புகளில் ஒன்றாக உருவாகி வரும் படம் ‘சாகுந்தலம்’. குணசேகர் இயக்கி வரும் இப்படத்தின் கதாநாயகியாக சமந்தா நடித்து வருகிறார்.
காளிதாஸ் எழுதிய ‘சாகுந்தலா’வை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது. துஷ்யந்த் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன்,
அனுசுயா கதாபாத்திரத்தில், ‘அருவி’ படத்தில் நடித்த அதிதி பாலன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
தற்போது இப்படத்தில் கூடுதலாக ஒரு ஸ்டார் அட்ராக்ஷன் இணைக்கப்பட்டிருக்கிறார். தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா, ‘பரதா’ கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நேற்று முதல் அர்ஹா படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார். அடுத்த பத்து நாட்கள் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளும் படமாக்கப்பட உள்ளதாம்.
இதன் மூலம் அல்லு குடும்பத்தில் நான்காவது தலைமுறையிலும் நடிக்க வந்துவிட்டார்கள்.
அர்ஹா சினிமாவில் நடிக்க வந்துள்ளதற்கு தெலுங்குத் திரையுலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் தெய்வத்திரு மகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள் ஆகிய படங்களில் நடித்தவர் அமலாபால்.
அதன்பிறகு விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தில் இவர் நடித்து ரசிகர்களிடையே நன்கு பிரபலமடைந்தார். மலையாள நடிகையான அமலா பால் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வந்தார்.
ஆனால் அவருடைய கேரியர் உச்சத்தில் இருக்கும்போது அவர் எடுத்த ஒரு தவறான முடிவுதான் தற்போது அவரை பட வாய்ப்பு இல்லாமல் தடுமாற வைத்து வருகிறது.
மார்க்கெட் உள்ள போது இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து பின்னர் அவரை விவாகரத்து செய்து மீண்டும் சினிமாவில் ஜொலிக்கலாம் என நினைத்து கண்றாவியான கதாபாத்திரங்களில் நடித்து இருந்த நல்ல பெயரையும் கெடுத்துக் கொண்டார்.
தற்போது அதையெல்லாம் மீறி பட வாய்ப்புகளுக்காக உச்சக்கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தினமும் திணறடித்து வருகிறார் அமலா பால்.
சமீபத்தில் தெலுங்கில் அவர் நடித்து வரும் வெப்சீரிஸ் ஒன்றில் டிரைலர் வெளியீட்டு விழாவுக்கு வந்த அமலா பால் திணறத் திணற கவர்ச்சியை வாரி வழங்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி மன்னனாக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து படிப்படியாக தனது நடிப்பு மூலம் முன்னணி காமெடி நடிகராக உயர்ந்தவர்.
ஒரு கட்டத்தில் இவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை இருந்தது. அந்த அளவிற்கு அனைத்து ஹீரோக்களும் இவரை தங்களது படங்களில் ஒப்பந்தம் செய்ய விரும்பினர்.
இவர் நடித்த 23ஆம் புலிகேசி குழந்தைகள் மத்தியில் பிரபலமாகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர் யார் என்று கேட்டால் யோசிக்காமல் வடிவேலு என கூறுவார்கள். அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்த காமெடி நடிகர் என்று கூறலாம்.
அதுமட்டுமின்றி இவர் இல்லாத மீம்ஸ்களே கிடையாது. இவரை வைத்து தான் மீம் கிரியேட்டர்ஸ்களுக்கு பொழப்பு ஓடுது என்று கூட கூறலாம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நேசமணி என்ற ஹேஷ்டேக் மிகப்பெரிய அளவில் வைரலானது.
விஜய், சூர்யா நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் படத்தில் வடிவேலு நேசமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கேரக்டரை மையமாக வைத்து உலக அளவில் நேசமணி ஹேஷ்டேக் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது மீண்டும் கமல்ஹாசன் நடிப்பில் உருவாக இருக்கும் விக்ரம் படத்தின் போஸ்டரை கேலி செய்து நேசமணி என்ற ஹேஷ்டேக் பரவி வருகிறது. விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள்.
அதேபோன்று வடிவேலு, ரமேஷ் கண்ணா மற்றும் சார்லி ஆகிய மூன்று பேர்களின் புகைப்படங்களை வைத்து மீண்டும் நேசமணி படம் என குறிப்பிட்டு இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அதிலும் முக்கியமாக குணச்சித்திர வேடங்களில் இவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே தொடர் வெற்றியை பெற்று வருகின்றனர்.
ஹீரோயினாக மட்டுமே நடிப்பேன் அடம் பிடிக்காமல் நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் வில்லி வேடத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தெலுங்கில் கிராக் என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அதில் வரலட்சுமியின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. நடித்தால் ஹீரோயின்தான் என்று பல நடிகைகள் தங்களுடைய கேரியரை காலி செய்து கொண்டிருக்கும் நேரத்தில்
நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் போதுமென நினைத்த வரலட்சுமி தற்போது கைவசம் நிறைய படங்களை வைத்து உற்சாகமாக வலம் வருகிறார். வரலட்சுமி எப்போதுமே தன்னுடைய உடல் எடையை பற்றி கவலைப்படாமல் இருப்பார்.
ஆனால் தற்போது தனக்கு பட வாய்ப்புகள் அதிகமாக வருகிறது என்பதை உணர்ந்து சமீபகாலமாக தீவிரமாக உடற்பயிற்சி செய்து வந்துள்ளார்.
தற்போது ஹைதராபாத் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னைக்கு வரும் வழியில் ஏர்போர்ட்டில் புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள டைரி படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான வம்சம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அருள்நிதி.
இதை தொடர்ந்து இவர் மௌனகுரு, டிமான்டி காலனி, ஆறாது சினம் உள்ளிட்ட பல வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தற்போது இவர் இயக்குனர் இன்னசி பாண்டியன் எழுதி இயக்கியுள்ள டைரி படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக நடித்துள்ளார் . பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ராண் எதான் யோகன் இசையமைத்துள்ளார் .
சமீபத்தில் டைரி படத்தின் மிரட்டலான மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது.
இதில் காட்சிகள் ஒவ்வொன்றும் பயமுறுத்தும் வகையில் உள்ளதால் நிச்சயம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டதால் திரையரங்கு திறக்கப்பட்டால் உடனடியாக ரிலீசாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நடிகர் விக்ரம் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர்.
இவரும் இவரின் மகன் துருவ் விக்ரமும் சேர்ந்து நடித்து வரும் திரைப்படம் சீயான் 60, இப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது, ஆம் அமைதியாக நடந்து வரும் இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாம்.
மேலும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு டார்ஜிலிங் செல்ல உள்ளார்களாம். சீயான் 60 படப்பிடிப்பு ஆகஸ்ட் இரண்டாவது வாரத்துடன் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது.