கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம்..!

கீர்த்தி சுரேஷ்..

ரசிகர்கள் மத்தியில் தேவதை போன்று வலம் வரும் நடிகைகள் மிகக் குறைவு. அதில் மிக முக்கிய இடம் கீர்த்தி சுரேஷுக்கு உண்டு. ஆரம்பத்திலேயே ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வைத்தவர்.

ஆனால் யார் பேச்சைக் கேட்டுக் கொண்டு உடல் எடையை குறைத்தார் என்பதுதான் தெரியவில்லை. அவர் மட்டும் கையில் சிக்கினால் ரசிகர்கள் கைமா செய்து விடுவார்கள். கீர்த்தி சுரேஷிடம் எதை ரசிகர்கள் ரசித்தார்களோ அதையே இழந்து நிற்கிறார்.

இதனால் தற்போது பட வாய்ப்புகளும் பெரிய அளவில் இல்லை. தெரியாத்தனமாக கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்த நடிகையர் திலகம் என்ற படம் வெற்றியடைந்து விட்டது.

அதனைத் தொடர்ந்து தலை கீழாகத்தான் குதிப்பேன் என தொடர்ந்து சோலோ ஹீரோயின் படங்களில் நடித்தார். அதன்பிறகு அவர் நடித்த பென்குயின், மிஸ் இந்தியா போன்ற சோலோ ஹீரோயின் படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஓடிடி நிறுவனத்திற்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக குட்லக் சகி என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படமும் கதாநாயகியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம்தான்.

இந்த படமாவது தியேட்டரில் வெளியாகி தனக்கு ஒரு நல்ல ரீ-என்ட்ரி கொடுக்கும் படமாக இருக்கும் என நம்பிக்கொண்டிருந்த கீர்த்தி சுரேஷ் தலையில் இடியை இறக்கும் விதமாக இந்த படமும் ஓடிடிக்கு சென்று விட்டதாம்.

இந்நிலையில் கருப்பு புடவையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் எடுத்து வெளியிட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.. 

சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் எப்போது?- வெளிவந்த தகவல்!

வாடிவாசல்..

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை தொடர்ந்து அவரது ரசிகர்கள் ஆவலாக பார்க்க காத்திருக்கும் ஒரு படம் என்றால் அது வாடிவாசல் படம் தான்.

வெற்றிமாறன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஓரளவிற்கு முடிந்துவிட்டது. 40 பேர் கொண்ட ஒரு காட்சி மட்டும் மீதம் உள்ளதாகவும்

அது கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் எடுத்துவிடுவோம் என வெற்றிமாறன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

வரும் செப்டம்பர் மாதம் அப்பட படப்பிடிப்பு நடக்கும் என தயாரிப்பு குழு அறிவித்தனர்.

இந்த நிலையில் எல்லோரும் எதிர்ப்பார்க்கும் வாடிவாசல் படத்தின் ஃபஸ்ட் லுக் நாளை மாலை 5.30 மணிக்கு வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் தானு டுவிட் செய்துள்ளார்.

கிளாமர் உடையில் நாயுடன் குதித்து விளையாடும் சமந்தா.. லைக்குகளை குவிக்கும் வைரல் வீடியோ!

சமந்தா..

சமந்தா தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

பேமிலி மேன் வெப் சீரிஸ் இரண்டாம் பாகத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் தடம் பதித்து வெற்றி பெற்றுள்ளார் சமந்தா.

தற்போது சகுந்தலம், காத்துவாக்குல இரண்டு காதல் உள்ளிட்ட படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சமந்தா.

சமந்தா தற்போது குடும்பத்துடன் நேரம் செலவிடுவது, உடற்பயிற்சி செய்வது உள்ளிட்ட பலவற்றிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

சமந்தா அடிக்கடி போட்டோஷூட் எடுத்து படங்களை பகிர்வார். சமூக வலைத்தளத்தில் சமந்தா வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும்.

இந்நிலையில் சமந்தா, செல்ல நாய்க்குட்டியுடன் துள்ளி குதித்து பலூன் விளையாடும் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ பதிவு செய்த ஒரு சில மணி நேரத்திலேயே பல லட்சம் லைக்குகள் குவித்துள்ளது.

படப்பிடிப்பை முடித்த நடிகை பூஜா ஹெக்டே.. வெளியான பீஸ்ட் படத்தின் அப்டேட்!!

பூஜா ஹெக்டே..

நடிகர் விஜய்யின் 65வது படம் பீஸ்ட். நெல்சன் இயக்கும் இப்படத்தில், முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

மேலும் அபர்ணா தாஸ், யோகி பாபு, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடன காட்சிகள் எடுக்கப்படவுள்ளதாக ஏற்கனவே சில தகவல்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னையில் பீஸ்ட் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை முடித்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, வேறொரு படத்தின் படப்பிடிப்புக்காக மும்பைக்கு சென்றுள்ளார்.

விமானநிலையத்தில் இருந்து, நடிகை பூஜா ஹெக்டே புகைப்படங்களை தற்போது வெளியாகியுள்ளது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் Caravan-ல் வளைந்து நெளிந்து ஆடும் வீடியோவை வெளியிட்ட சமந்தா !!

சமந்தா..

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

பானா காத்தாடி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்.

சமந்தா ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார். அதில் கணவருக்கு தெரியாமல், கல்லூரி கால காதலனுடன் உடலுறவு வைத்திருப்பது போன்ற கதாபாத்திரத்தில் சமந்தா துணிச்சலுடன் நடித்திருந்தார்.

அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில், Hot புகைப்படங்களை, வீடியோக்களை அப்லோடு செய்யும் இவர், தற்போது Familyman 2 Series-ன் ஷூட்டிங் ஸ்பாட்டில் Caravan-ல் Dance ஆடுவது போல Video ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் பிரமாண்ட படைப்பான ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது !!

ஆர்.ஆர்.ஆர்..

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் தேஜா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட நிறைவடையும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் மற்றும் வியாபாரங்கள் நடந்து வருவது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன

இந்த படத்தை அடுத்தாண்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் படக்குழுவினர் ஆர்.ஆர்.ஆர் படத்தின் மேக்கிங் இன்று காலை 11 மணிக்கு வெயிட்டுள்ளனர்.

பாலிவுட் பிரபலங்களான அஜய்தேவ்கான், ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் பிரபலமான ஒலிவியா மோரீஸ் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை பென்மூவிஸ் மற்றும் லைகா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகுபலி, பாகுபலி 2 படங்களுக்கு பின்னர் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல இந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.. செம ஸ்டைலிஷ் உடையில் அவர் கொடுத்த போஸ்!

அனிகா..

தல அஜித் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில், அவரின் மகளாக நடித்து அறிமுகமானவர் அனிகா.

இவர் அப்படத்தை தொடர்ந்து நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

மேலும் அஜித்தின் மகளாக மீண்டும் அவர் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தின் மூலம் அனிகா பெரியளவில் பேசப்பட்டார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருந்து அனிகா, அடிக்கடி தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அவர் செம ஸ்டைலிஷ் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..

ராட்சசன் 2 திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவா? வெளியான புதிய தகவல்!!

ராட்சசன் 2..

விஷ்ணு விஷால் நடிப்பில் ராம்குமார் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்த ராட்சசன் படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பு கிடைத்தது.

தமிழில் ஹிட்டான இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்தனர், தெலுங்கு ரீமேக்கில் பெல்லம்கொண்டா சீனிவாஸ் நடித்திருந்தார்.

ராட்சசுடு என்ற பெயரில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான இப்படம் அங்கு மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில், ராட்சசுடு படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். முதல் பாகத்தை இயக்கிய ரமேஷ் வர்மா, இந்த படத்தையும் இயக்க உள்ளார்.

சமீபத்தில் விஜய் சேதுபதியை சந்தித்து கதை சொன்ன ரமேஷ் வர்மா. அது ராட்சசுடு 2-ம் பாகத்துக்கான கதையாக இருக்கலாம் எனவும், அதனால் இப்படத்தில் விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் கார் உடன் செல்பி எடுத்த தளபதி விஜய்.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!

தளபதி விஜய்..

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் விஜய் கடந்த 2012-ல் தான் வாங்கிய காருக்கு வரி ஏய்ப்பு செய்யாமல் முறையாக வரி நிலையிலும் சில நாட்களுக்கு முன்பு சென்னை உயர்நி.திமன்றம் அவருக்கு அ.ப.ரா.தம் வி.தித்தது.

மேலும் நுழைவு வரி கட்ட விலக்கு கேட்டதால் இந்த வ.ழ.க்கில் விஜய்க்கு அ.ப.ரா.தம் விதிக்கப்பட்டுள்ளது, இந்த விஷயம் கடந்த இரண்டு நாட்களாக பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.

இதனிடையே தற்போது தளபதி விஜய்யின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக ரோல்ஸ் ராய்ஸ் காருடன் விஜய் செல்பி எடுத்துக்கொண்டது போல எடிட் செய்த புகைபடத்தை இணையத்தில் வைரலாகி உள்ளனர்.

ரம்யா கிருஷ்ணன் மற்றும் வனிதா இடையே வெடித்த மோதல்! வெளியான பரபரப்பான ப்ரோமோ!

ரம்யா கிருஷ்ணன் – வனிதா..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிக்கும் பெரியளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ஜோடிகள்.

இதில் பிரபல பிக்பாஸ் நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு தங்களின் நடன திறமையை காண்பித்து போட்டிபோட்டு வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் இதில் போட்டியாளராக இருந்த வனிதா இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தது பெரியளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வனிதா “தன்னை யாருடனும் ஒப்பிட வேண்டாம்” என கூறியுள்ளார்.

இதனால் ஆவேசமடைந்த ரம்யா கிருஷ்ணன் “போட்டியாளர்களிடையே எப்படி ஒப்பிடாமல் இருக்க முடியும்” என சொல்லியுள்ளார்,

பின்னர் வனிதா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.