திருமணத்திற்கு கண்டிஷன் போட்ட நடிகை டாப்சி – விரைவில் திருமணமா?

டாப்சி..

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தற்போது பல ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை டாப்சி.

இவர் சமீபத்தில் தனது திருமணம் குறித்து வெளிப்படையாக பேட்டி ஒன்று அளித்துள்ளார்.

அதில் ” எனது பெற்றோருக்கு பிடிக்காதவரை திருமணம் செய்து கொள்ள கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என்னை காதலிப்பவர்களிடம் இந்த நிபந்தனையை வெளிப்படையாகவே சொல்லி இருக்கிறேன்.

எனது திருமணம் குறித்து பெற்றோர் கவலைப்படுகின்றனர். விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படியும் வற்புறுத்துகின்றனர். திருமணம் செய்து கொள்ளாமல் இப்படியே இருந்து விடுவேனோ என்று அவர்களுக்கு வருத்தம் உள்ளது “. என டாப்சி கூறினார்.

இதனால் நடிகை டாப்சிக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தற்போதே பாலிவுட் திரையுலகில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

ரவுடி பேபியாக மாறிய நடிகை காஜல் அகர்வால் – வெளியான சூப்பர் தகவல்!

காஜல் அகர்வால்..

நடிகை காஜல் அகர்வாலின் கைவசம் பாரிஸ் பாரிஸ், கோஸ்டி, ஹேய் சினாமிகா, இந்தியன் 2, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஆச்சார்யா ஆகிய படங்கள் உள்ளன.

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால், ‘ரவுடி பேபி’ எனும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

ராஜா சரவணன் என்பவர் இப்படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார்.

மேலும் சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், லட்சுமி ராய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

செல்லதுரை ஒளிப்பதிவு செய்ய உள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்க உள்ளார்.

மேலும் இப்படத்தை அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி.பிள்ளை தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்கரையில் கிளாமர் ஆடை அணிந்து போஸ் கொடுத்த நடிகை பூஜா ஹெக்டே – வைரல் போட்டோ!

பூஜா ஹெக்டே..

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

முகமூடி படத்தின் தோல்வி காரணமாக பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் வராததால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

அதில் வெற்றியடைந்த நடிகை பூஜா ஹெக்டே, பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து, இன்று இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

மேலும் தற்போது மீண்டும் தமிழுக்கு வந்துள்ள நடிகை பூஜா ஹெக்டே, தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில், தொடர்ந்து புகைப்படங்களை பதிவு செய்யும் இவர், தற்போது கடற்கரையில் குட்டை ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் தற்போது வைரலாகி வரும் பூஜா ஹெக்டேவின் அந்த புகைப்படம் இதோ..

வெளியானது லேட்டஸ்ட் வலிமை புகைப்படம்.. ஸ்மார்ட் லுக்கில் தல அஜித் !!

வலிமை..

தல அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவருக்கென்று தமிழகத்தில் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

மேலும் அப்டேட் ஏதும் இல்லாமல் வருத்தத்தில் இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு, மிக விரைவில் இப்படத்தின் First லுக் ரிலீஸ் குறித்து அறிவிப்பு வரும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வலிமை படத்தில் எடுக்கப்பட்ட தல அஜித்தின் லேட்டஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

செம ஸ்மார்ட் லுக்கில் உள்ள தல அஜித்தின் புகைப்படத்தை பாருங்கள்..

சென்னை மருத்துவமனையில் மரணமடைந்த பிக் பாஸ் பிரபலம் – சோகத்தில் திரையுலகம்!

பிக்பாஸ் பிரபலம்..

சின்னத்திரை தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்று தான் தெலுங்கு பிக் பாஸ்.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின், முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் தான் நடிகரும், விமர்சகருமான கத்தி மகேஷ்.

நடிகர் கத்தி மகேஷுக்கு சில தினங்களுக்கு முன் காரில் சென்றுகொண்டிருந்த லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்த கத்தி மகேஷ் நேற்று இரவு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த தகவல் அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமல்லாமல், திரையுலகினரையும், சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

50 வயதிலும் தொடை தெரிய ஆட்டம் போட்ட ரம்யா கிருஷ்ணன்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ !

ரம்யா கிருஷ்ணன்..

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார்.

80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது.

இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது. போதாக்குறைக்கு, Queen Web series Hit அடிக்க, அம்மணியை கையில் பிடிக்க முடியலையாம்.

இந்தநிலையில் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி உடைகளில் அவ்வப்போது வெளியிட்டு வரும் இவரின் லேட்டஸ்ட் Ramp walk video பார்த்த ரசிகர்கள், 50 வயதானாலும் இவரது அழகும்,

கட்டழகு கவர்ச்சியும், ஸ்டைலும் இன்னும் குறையவில்லை. ரம்யாகிருஷ்ணனுக்கு நிகர் ரம்யாகிருஷ்ணன்தான் என்று கருத்து பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

அர்ஜுன் ரெட்டி பட புகழ் ஷாலினி பாண்டேவா இது- உடல் எடை குறைத்து இப்படி ஆகிவிட்டாரே?

ஷாலினி பாண்டே..

தெலுங்கு சினிமாவில் வசூலிலும், வரவேற்பிலும் சக்கைபோடு போட்ட ஒரு திரைப்படம் என்றால் அது அர்ஜுன் ரெட்டி தான்.

இதில் நடித்த விஜய் தேவரகொண்டாவிற்கு மார்க்கெட் பெரிய அளவில் உள்ளது, ஆனால் நாயகியாக நடித்த ஷாலினி பாண்டேவிற்கு அடுத்தடுத்து சரியான பாதை அமையவில்லை.

அவர் தமிழ், தெலுங்கு என இரண்டிலும் சில படங்கள் நடித்தாலும் எதுவும் கைகொடுக்கவில்லை.

தற்போது ஷாலினி பாண்டேவின் ஒரு புகைப்படம் வெளியாக அதைப்பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

பப்ளியான முகம், சிரித்தால் அழகான குழி என இருந்த ஷாலினி பாண்டே இப்போது சுத்தமாக தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருக்கிறார்.

அவரது லேட்டஸ்ட் புகைப்படம் பார்த்த ரசிகர்கள் அட இவரா அவர் இந்த லுக் இவருக்கு செட் ஆகவில்லை, பப்ளி ஷாலினி பாண்டே தான் அழகு என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..

கடற்கரையில் மார்டன் உடையில் ஷிவானி நாராயணன்.. இணையத்தில் மிகவும் வைரலாகும் புகைப்படங்கள் !!

ஷிவானி நாராயணன்…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையானவர் இளம் நடிகை ஷிவானி நாராயணன்.

அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் கதாநாயகியாக நடித்து வந்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 4வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு, ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார்.

தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் ஷிவானி.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் மார்டன் உடையில் கலக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஷிவானி வெளியிட்டுள்ள இப்புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் வெறித்தனமான First லுக்!!

விக்ரம் First லுக்..

உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.

வெற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வருகிறார்.அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

ஏற்கனவே இப்படத்திலிருந்து செம மாசான டைட்டில் வீடியோ ஒன்று வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இப்படத்தின் First லுக் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர்.

அதன்படி தற்போது வெறித்தனமான விக்ரம் படத்தின் First லுக் வெளியாகியுள்ளது.

இந்த First லுக் மூலம் இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தனுஷின் D43 படத்திலிருந்து வெளியான லேட்டஸ்ட் புகைப்படம் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு!

D43..

தனுஷ், தற்போது ஹைதராபாத்தில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘D43’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் முதல் முறையாக தனுஷுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

மேலும் சத்யஜோதி நிறுவனம் தயாரித்துவரும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.

இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் இப்படத்திலிருந்து இயக்குனர் கார்த்திக் நரேன் விலகி விட்டதாக வதந்திகள் வெளியாகின.

இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கார்த்திக் நரேன் மற்றும் நடிகர் தனுஷ் இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதன்முலம் சமூக வலைத்தளத்தில் பரவிய அணைத்து வதந்திகளுக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதோ அந்த புகைப்படம்..