இணையத்தில் வைரலாகும் நடிகை தமன்னாவின் வீடியோ – என்ன செய்துள்ளார் தெரியுமா?

தமன்னா…

கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான தமன்னாவிற்கு கல்லூரி பட ம் தனி அங்கீகாரத்தை தேடி தந்தது.

இதனை அடுத்து தனுஷ், சூர்யா, விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து, தற்போது முன்னணி நடிகையாகியுள்ளார்.

நடிகையாக மட்டுமல்லாமல் உலகப் புகழ்பெற்ற மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தெலுங்கில் தொகுத்து வழங்க உள்ளார்.

நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாவதுண்டு.

அந்த வகையில் தற்போது நடிகை தமன்னா நடமாடி அசத்தியுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

 

View this post on Instagram

 

A post shared by Tamannaah Bhatia (@tamannaahspeaks)

தொகுப்பாளினி அர்ச்சனாவிற்கு மூளை பக்கத்தில் பிரச்சனை- திடீரென நடக்கும் ஆபரேஷன், அவரே வெளியிட்ட தகவல்!!

அர்ச்சனா..

தொகுப்பாளினிகளில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒருவர் அர்ச்சனா. இவர் பணிபுரியாத முன்னணி தொலைக்காட்சியே இல்லை என்று கூறலாம்.

சன், விஜய், ஜீ என எல்லா தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி வருகிறார்.

ஜீ தமிழில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கிவந்த அவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் விஜய் டிவிக்கு வந்தார்.

அந்நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து விஜய்யிலேயே நிறைய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குகிறார்.

அவர் இப்போது Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இந்த நிலையில் அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு அதிர்ச்சி பதிவை போட்டுள்ளார்.

அதாவது அவரின் மூளை பக்கத்தில் சில பிரச்சனை இருப்பதாகவும் அதனால் அறுவை சிகிச்சை செய்ய இருப்பதாகவும் பதிவு செய்துள்ளார்.

அறுவை சிகிச்சைக்கு பின் எனது நிலைமை எப்படி இருக்கும் என தனது மகள் அறிவிப்பாள் என கூறியுள்ளார்.

நல்ல பெண்ணாக மாறிய ஷாலு ஷம்மு.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

ஷாலு ஷம்மு..

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக அறிமுகமானவர்தான் ஷாலு ஷம்மு.

அதனை தொடர்ந்து ஒரு சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தார்.

இருப்பினும் டிக் டாக் வீடியோக்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். பின்னர்,

இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் தாராளமாக கவர்ச்சி காட்டி இளைஞர்களை உசுப்பேற்றினார்.

அதோடு மட்டுமல்லாமல் எல்லைமீறிய ஆடையணிந்து போட்டோஷூட் நடத்தி இணையத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

தனது ஆண் நண்பருடன் நெருக்கமான சால்சா நடனம் என பல சர்ச்சைகளில் ஷாலு ஷம்மு சிக்கி இருந்தார்.

இருப்பினும் சோசியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வதற்கு மட்டும் மறக்கவே இல்லை.

இப்படி தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை மட்டும் வெளியிட்டு வந்த ஷாலு தற்போது முதன் முறையாக அடக்க ஒடுக்கமாக புடவையில் போட்டோ போட்டுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இந்த அடக்க ஒடுக்கம் கூட நல்லதான் இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..

டைட்டான உடையில் அந்தரத்தில் தலைகீழாக தொங்கியபடி மிரள வைக்கும் புகைப்படம் வெளியிட்ட ஷிவானி.. வியர்த்து விறுவிறுத்துப் போன ரசிகர்கள்!

ஷிவானி நாராயணன்..

ஷிவானி நாராயணன் சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயினாக நடித்து பெரிய அளவில் பாப்புலர் ஆனவர்.

அவர் இன்ஸ்டகிராமில் வெளியிடும் போடோக்கள் மற்றும் டான்ஸ் வீடியோக்களை பார்ப்பதற்கென்றே அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஷிவானி கவர்ச்சியான டான்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வர, அதை பார்ப்பதற்கென்றே ஒரு பெரிய கூட்டம் காத்து கிடந்தது.

இந்நிலையில் தற்போது ஷிவானி தலைகீழாக தொங்கி யோகா செய்யும் போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.

அதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார். ஏற்கனவே சமந்தா உள்ளிட்ட பல நடிகைகள் இப்படி யோகா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஷிவானியின் போட்டோக்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.

யூடியூப் நடிகை தேஜூ அஷ்வினிக்கு குவியும் பட வாய்ப்புகள்.. அடுத்த கிரஸ் இவங்கதான்!

தேஜூ அஸ்வினி…

யூட்யூபில் புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் தேஜூ அஸ்வினி. இவர் சமீபத்தில் சந்தானம் நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற பாரிஸ் ஜெயராஜ் என்ற படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதுமட்டுமில்லாமல் சந்தானத்துடன் சேர்ந்து இவர் ஆடிய வலி மாங்கா வலிப் என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக இவருக்கு ஒரு நல்ல வரவேற்ப்பை சினிமாவில் ஏற்படுத்திக் கொடுத்தது.

சமீபகாலமாக யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் புகழ் பெறுபவர்கள் சினிமாவில் ஈசியாக படவாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

அதிலும் இவருக்கு வேற லெவல் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின் என்பவர் ஹீரோவாக அறிமுகமாகும் என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.

இந்த பட அறிவிப்பு வெளியாவதற்கு உள்ளேயே அவருக்கு இன்னும் சில பட வாய்ப்புகள் வந்து கொண்டிருப்பதாக கூறுகின்றனர்.

வரும் காலத்தில் பிரியா பவானி சங்கர் ரேஞ்சுக்கு அஸ்வினி வருவார் என இப்போதே கொலிவுட்டில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. தேஜூ அஸ்வினி,

அஸ்வின் படம் மூலம் அறிமுகமானாலும் அவருக்கு சில முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகள் வேண்டும் என எதிர்பார்க்கிறாராம். அதுமட்டுமில்லாமல் கிளாமர் காட்டுவதற்கும் எந்த தயக்கமும் இல்லை என தூதுவிட்டுள்ளாராம் அஸ்வினி.

அமீர்கானுடன் மூன்றாவது திருமணமா? திருமணத்தை பற்றி ஓப்பனாக கூறிய நடிகை!!

அமீர்கானுடன்..

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் தான் அமீர்கான் சமீபத்தில் தனது இரண்டாவது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.

இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தங்கல் படத்தில் தனக்கு மகளாக நடித்த பாத்திமா சனா சாய்க்கை,

அமீர்கான் மூன்றாவது திருமணம் செய்ய உள்ளதாகவும், இதன் காரணமாகவே விவாகரத்து செய்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பாலிவுட் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா வட்டாரமே இதை பற்றி தான் பேசி கொண்டிருக்கிறது. இந்நிலையில், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை பாத்திமா சனா சாய்க் வதந்தி குறித்து பேசியுள்ளார்.

அதில், “முன்பெல்லாம் இதுபோன்ற செய்திகள் வரும்போது தனக்கு கஷ்டமாக இருக்கும். இப்போது அப்படி இல்லை. காரணம் வதந்திகள் அளவுக்கதிகமாக பரவுவது வழக்கமாகி விட்டது.

இதை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இந்த பிரச்சனையை கண்டுக்கொள்ளாமல் அப்டியே விட்டுவிட்டால் அதுவே தானாக அடங்கி விடும்” என கூலாக பதிலளித்துள்ளார்.

பாகுபலி பாணியில் வெளியாகும் துருவ நட்சத்திரம்!!

துருவ நட்சத்திரம்..

2017-ம் ஆண்டில் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், ரிது வர்மா, பார்த்திபன், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் என பலரது நடிப்பில் தொடங்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம்.

2018ஆம் ஆண்டிலேயே திரைக்கு வரவேண்டிய இப்படம் பின்னர் 2019ல் வெளியாக இருப்பதாக சொல்லப்பட்டது. அப்போதும் வெளியாகவில்லை.

இந்த நிலையில், தற்போது துருவ நட்சத்திரம் படத்தை வெளியிடும் வேலைகளில் படக்குழு இறங்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதோடு, படத்தின் மொத்த நீளம் நான்கறை மணிநேரம் இருப்பதால் பாகுபலி படத்தைப்

போன்று இரண்டு பாகங்களாக இப்படத்தை வெளியிடவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.

பிக்பாஸ் ஓவியாவின் லேட்டஸ்ட் போட்டோஸ் , என்ன செய்து கொண்டு இருக்கிறார் பாருங்க!!

ஓவியா..

தமிழில் களவாணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஓவியா, திரைப்படங்களில் நடித்ததை விட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரிய அளவில் பிரபலமானார்.

பிக்பாஸ் சீசன் 1-ல் கலந்து கொண்ட ஓவியாவிற்கு அதிகப்படியான ரசிகர்கள் குவிந்தனர் என்றே கூறலாம்.

மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படங்கள் எதுவும் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனால் அதிகமான திரைப்படங்களில் நடிகை ஓவியாவை பார்க்கமுடியவில்லை.

இந்நிலையில் தற்போது ஓவியா அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு ஸ்டோரிஸ் போட்டுள்ளார்.

மேலும் அந்த ஸ்டோரிஸில் தான் நடித்த படத்தின் பாடல்களை பார்த்து வருகிறார், இதோ அவரின் போட்டோஸ்

முதல் முறையாக இப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் நடிக்கின்றாரா நடிகை காஜல் அகர்வால் – எந்த படத்தில் தெரியுமா?

காஜல் அகர்வால்…

பேய்களை மையமாக வைத்து தயாராகும் திகில் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

நயன்தாரா, த்ரிஷா, ஹன்சிகா, ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகைகள் பேயாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது முன்னணி நடிகை காஜல் அகர்வாலும் புதிய படத்தில் பேயாக நடிக்கிறாராம்.

கோஷ்டி என்று பெயர் வைத்துள்ள இப்படத்தை கல்யாண் இயக்குகிறார். இவர் குலேபகாவலி, ஜாக்போட் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, உள்ளிட்ட முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். விரைவில் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என்று தகவல் கூறப்படுகிறது.

மீண்டும் ஒரு சாதனை படைத்த ‘ரவுடி பேபி’ பாடல்.. என்ன தெரியுமா!

‘ரவுடி பேபி’..

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி, நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மாரி 2’.

யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் ‘ரவுடி பேபி’ பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.

இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.

Youtubeபில் வெளியிடப்பட்ட ரவுடி பேபி பாடலின் வீடியோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைத்த வந்தது.

இந்நிலையில், ரவுடி பேபி பாடல் வீடியோ Youtubeபில் 5 மில்லியன் லைக்குகளை பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

தென்னிந்திய அளவில் வெளியான பாடல்களில் 5 மில்லியன் லைக்குகளை பெற்ற முதல் பாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.