கணவர் கொடுத்த தைரியம் : பாதையை மாற்றிய காஜல் அகர்வால்!!

காஜல் அகர்வால்..

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தனது நீண்டகால காதலர் கவுதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்ட பிறகு கதை தேர்வில் வித்தியாசம் காட்டி வருகிறார்.

கணவர், வேண்டாம் என்று ஒரு வார்த்தை சொன்னால் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிடுவேன் என்று காஜல் சமீபத்தில் தெரிவித்தார். காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு தவிர்த்து இந்தி படங்களிலும் நடித்தார். ஆனால் கோலிவுட், டோலிவுட்டை போன்று அவரால் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக முடியவில்லை.

இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். உமா என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் அந்த படத்தின் அனைத்து காட்சிகளும் மேற்கு வங்கம், கோல்கட்டாவில் படமாக்கப்படவிருக்கிறது.

உமா படத்திற்காக காஜலுக்கு ரூ. 2 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. காஜல் முதல் முறையாக ரூ. 2 கோடி சம்பளம் வாங்குகிறார். முன்னதாக கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான குயின் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான பாரீஸ் பாரீஸ் படத்தில் காஜல் நடித்தார்.

அவரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அந்த படம் இன்னும் ரிலீசாகவில்லை. இதையடுத்தே அவர் ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். பாரீஸ் பாரீஸ் படத்தை அடுத்து தன்னை தேடி வந்த 6 பட வாய்ப்புகளை ஏற்க மறுத்தார்.

அவை அனைத்துமே ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள். காஜல் தற்போது சிரஞ்சீவியுடன் சேர்ந்து ஆச்சார்யா தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். மேலும் நாகர்ஜுனா ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

அவர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடித்து வந்த இந்தியன் 2 பட வேலை பாதியில் நிற்கிறது. இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் எப்பொழுது துவங்கும் என்று தெரியவில்லை. இந்நிலையில் பாதையை மாற்றி கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

பால்கனியில் படுமோசமான ஆடை! தனுஷ்43 பட நடிகை மாளவிகா வெளியிட்ட புகைப்படங்கள்..!

மாளவிகா மோகனன்..

தமிழ் சினிமாவில் பேட்ட, மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மாளவிகா.

தி காட் பாதர் என்ற படத்தில் மலையாள நடிகையாக தமிழில் படம் வெளியாவதற்கு முன்பே பிரபலமாகினார்.

இதையடுத்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்தும் தனுஷின் 43வது படத்திலும் கமிட்டாகி நடிக்கவுள்ளார்.

தற்போது அவருடைய பிளாட்டின் பால்கனியில் படுமோசமான ஆடையுடன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

‘பீஸ்ட்’ படப்பிடிப்பிற்காக சென்னை வந்தார் பூஜா ஹெக்டே: வைரல் வீடியோ!

பூஜா ஹெக்டே..

தளபதி விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் ’பீஸ்ட்’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே.

மேலும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறும் என்றும் அதற்கான செட் அமைக்கும் பணியும் நடைபெற்றதாகவும் கூறப்பட்டது.

ஆனால் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு சில வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்புக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டதை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சென்னையில் நடைபெற உள்ள ’பீஸ்ட்’ படப்பிடிப்பிற்காக நாயகி நடிகை பூஜா ஹெக்டே சென்னை வந்துள்ளார்.

விமான நிலையத்தில் பூஜா ஹெக்டே நடந்து வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் ’பீஸ்ட்’ படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் வரும் வெள்ளி முதல் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

சிம்புவின் படத்தை புரமோஷன் செய்யும் சிவகார்த்திகேயன்!

சிம்புவின்..

சிம்பு நடித்த படத்தை புரமோஷன் செய்ய சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு ஹன்சிகா நடிப்பில் உருவான ’மஹா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்தது என்பதும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் டீஸர் நாளை அதாவது ஜூலை 2ஆம் தேதி வெளியாக இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ’மஹா’ படத்தின் டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுவார் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு சிவகார்த்திகேயன் ’மஹா’ படத்தின் டீஸரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட உள்ளார்.

மேலும் ’மஹா’ படத்தின் நாயகியான ஹன்சிகாவுக்கு இது ஐம்பதாவது படம் என்பதும் இந்த படத்தின் இசையமைப்பாளரான ஜிப்ரானுக்கு இந்த படம் 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்பு, ஹன்சிகா, ஸ்ரீகாந்த், சனம்ஷெட்டி, தம்பி ராமையா, கருணாகரன், விஷ்ணு மஞ்சு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு மதி ஒளிப்பதிவும் ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தை யூ.ஆர்.ஜமீல் என்பவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்கா மீது தீரா ஆசையில் 2 தமிழ் நடிகர்கள்.. ஜோடி சேர்க்கச் சொல்லி அடம் பிடிக்கிறார்களாம்!!

அனுஷ்கா..

வயதானாலும் ஒரு சில நடிகைகளுக்கு இளம் நடிகர்கள் மத்தியில் ஒரு க்ரேஸ் இருக்கும். அந்த நடிகைகளுக்கு வயது அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை என ஜோடி போட துடிப்பார்கள். அப்படித்தான் அனுஷ்காவுடன் ஜோடி போட 2 தமிழ் நடிகர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அனுஷ்கா தமிழ், தெலுங்கில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர். அதுவும் அவரது இளமைக் காலங்களில் அவரைப் பார்த்தால் பிடிக்கவில்லை என்று சொல்ல வார்த்தையே வராது. அந்த அளவுக்கு பார்த்தவுடனே பத்திக்கும் தோற்றம்.

ஆனால் சமீப காலமாக உடல் எடைகூடி கொஞ்சம் பார்ப்பதற்கு வயதான ஆண்டி போல் ஆகிவிட்டார். இருந்தாலும் உடல் எடை கூடுவதற்கு முன்னர் வரை அழகாக இருந்த அனுஷ்காவுடன் அப்பவே நடிக்க வேண்டும் என தீர்மானமாக இருந்தார்களாம் இரண்டு நடிகர்கள்.

அவர்களில் ஒருவர் இசை அமைப்பாளராக இருந்து நடிகரானவர். இன்னொருவர் தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக படங்கள் கைவசம் வைத்திருக்கும் நடிகர். இந்த இரண்டு நடிகர்களின் பெயரும் ஒரே வார்த்தையில் தான் தொடங்கும். அது கூட அந்த டாப் நடிகரின் பெயரில்தான் ஆரம்பிக்கும்.

இவர்கள் இருவரும் சினிமாவுக்கு வந்து கொஞ்சம் பிரபலமான நடிகர்களாக வலம் வரும்போதே அனுஷ்காவுடன் நடிக்க ஆர்வம் காட்டினார்களாம். அப்போது அனுஷ்கா வேற லெவல் அழகில் இருந்தார். இருந்தாலும் தற்போது அனுஷ்கா எப்படி இருந்தாலும் பரவாயில்லை அவருடன் நடிக்க வேண்டும் என மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் இந்த நடிகர்கள்.

அதேநேரம் தற்போது அனுஷ்கா மார்க்கெட் இல்லாமல் தடுமாறும் நிலையில் காய் கனியும் தருணத்தில் உள்ளது. இதன் காரணமாக தன்னிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் அனுஷ்காவை ஜோடியாக்குங்கள் என கோரிக்கை வைக்கிறார்களாம்.

தமிழே தெரியாமல் கொடிகட்டி பறக்கும் விஜய் டிவி ஆங்கர்.. இவங்களுக்கு குரு நம்ம மா.கா.பா தானாம்!

பிரியங்கா..

தமிழே தெரியாமல் வந்து தமிழின் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளரானவர். இத்தகைய சிறப்பை பெறும் “ஆங்கர்” யார் தெரியுமா அவர் வேறு யாருமல்ல விஜய் டிவியின் “பிரியங்கா”தான்.

இவர் அம்மா அப்பாவின் சொந்த ஊர் மகாராஷ்ட்ரா தானாம். பிறப்புக்கு ஓர் இடம் பிழைக்க ஓர் இடமென பொதுவான இந்தியர்களின் தத்துவமே வாழ்வானது இவர்களுக்கும். மராட்டியத்திலிருந்து கர்நாடகத்திற்கு நகற்றியது பிரியங்கா குடும்பத்தினரையும் கூட.

கர்நாடகத்தை நோக்கி நகர்ந்தது பிரியங்காவின் குடும்பம். 1990ல் பிறந்த பிரியங்கா என்கிற “பிரியங்கா தேஷ்பாண்டே” தன் பள்ளிப்படிப்பை அங்கேயே தொடர்ந்தார். அவரின் 14ஆம் வயதில் பள்ளிப்பருவத்திலேயே தந்தைய இழந்த பிரியங்காவிற்கு எல்லாமே அவர் தாய் தானாம்.

தந்தையின் இறப்போடு சென்னைக்கு வந்தது பிரியங்கா குடும்பம் அவரது அம்மா ஒரு சிவில் என்ஜினீயர் என்பதால் படித்த பட்டம் பிழைப்பை தேடி தந்தது. பள்ளிப்படிப்பை முடித்த பிரியங்கா தன் கல்லூரி படிப்பை சென்னை எத்திராஜில் படித்தார். விசுவல் கம்யூனிகேசன் முடித்த பிரியங்காவிற்கு “விமான பணிப்பெண்” வேலை தான் கனவு.

ஐ.பி.எல் ப்ரமோட்டராக அவதாரமெடுத்த பிரியங்காவிற்கு மைக் கைக்கு எட்ட வில்லை. அப்போது ஏற்ற சபதம் தான் இப்போது அவரை மைக்கில் மாஸ் காட்ட வைக்கிறது.

கனத்த குரல் கடும் சிரிப்பென கலகலப்பாக்கும் பிரியங்கா முதலில் அறிமுகமானது சன் டிவியல் தான் பிறகு விஜய் டிவியில் வாய்ப்பு வரவே சன் டிவிக்கு டாட்டா காட்டினார். விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய பிரியங்காவிற்கு மாகாபா ஆனந்தின் சப்போர்ட் எப்போதும் உண்டாம்.

இப்படியாக படிப்படியாக உயர்ந்த பிரியங்கா தேஷ்பாண்டே 2018ல் சிறந்த தமிழ் நிகழ்ச்சி தொகுப்பாளருக்கான விருதை வென்றெடுத்தார்.

விஜய் சேதுபதியுடன் ஜோடி போடும் தமன்னா.. சின்னத்திரையில் கல்லா கட்ட போகும் மாஸ்டர் பவானி!

விஜய் சேதுபதியுடன்..

தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என அனைத்து வேடங்களிலும் பட்டையை கிளப்பி வரும் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி ரியாலிட்டி ஷோ ஒன்றை தொகுத்து வழங்கவுள்ளார்.

சர்வதேச அளவில் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோதான் ‘மாஸ்டர் செஃப்’. ஏற்கனவே வட இந்திய சேனல்களில் ஒளிப்பரப்பாகி மிகப்பெரிய ஹிட்டடித்துவிட்ட நிலையில், தற்போது தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் தயாரிக்கப்படுகிறது.

முதற்கட்டமாக தமிழ் மற்றும் தெலுங்கில் ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியை தமிழில் விஜய் சேதுபதியும், தெலுங்கில் நடிகை தமன்னாவும் தொகுத்து வழங்க உள்ளனர். சமீபத்தில் இதற்கான போட்டோஷூட் நடைபெற்றது. அப்போது இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

மாஸ்டர் செஃப் தமிழ் மற்றும் மாஸ்டர் செஃப் தெலுங்கு ஆகிய நிகழ்ச்சிக்கான முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. விரைவில் இதனுடைய ஒளிப்பரப்பு குறித்த விபரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ளதால் ரசிகர்களிடம் இந்நிகழ்ச்சிக்கு தனி கவனம் கிடைத்துள்ளது.

தனது அசாத்திய நடிப்பு மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் சேதுபதி தொகுப்பாளராகவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கலாம். நீங்க கலக்குங்க பாஸ்.

படுக்கையில் விளையாடும் ஜனனி – ஜனனியின் ஆட்டத்தை பார்த்து Tempt ஆன ரசிகர்கள் !

ஜனனி ஐயர்..

பொதுவாகவே நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைப்பதே கடினம், அதிலும் ஹீரோயின் கதாபாத்திரம் என்றால் தவம் கிடைக்கணும். அப்படி முட்டி மோதி பாலாவின் கண்களில் பட்டு அவன் இவன் படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தவர் ஜனனி ஐயர்.

அவன் இவன் திரைப்படம் அவருக்கு முதல் திரைப்படமாக இருந்தாலும் தனது நடிப்புத் திறமையால் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்றவர். அவன் இவன் திரைப்படத்தை தொடர்ந்து பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன் மற்றும் விதி மதி உல்டா போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் இவர் நடித்த படங்களில் தெகிடி படத்தை தவிர எதுவும் ஓடவில்லை. இந்த திரைப்படங்களில் நடித்த பின்னர் சரிவர திரை வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் அமைதியாக இருந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்சியில் கலந்து கொண்டார்.

அதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து இறுதி வரை பிக்பாஸ் இருந்ததன் குணத்திற்கு மேலும் ரசிகர்கள் அதிகரித்தனர். இவரின் புதிய படத்தை இயக்குனர் சந்தீப் என்பவர் இயக்குவதாகவும் இந்த படத்தின் கதையானது த்ரில்லர் கதை என்றும்,

இந்த படத்தில் கதாநாயனாக அசோக் செல்வன் நடிக்க விருப்பதாகவும் தகவல் வந்தது. அசோக் செல்வன் மற்றும் ஜனனி ஏற்கனவே தெகிடி திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது திரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கும் பகீரா என்னும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஜனனி. தற்போது Bed – இல் செம்ம ஹாட் ஆக உடைகளை மாற்றியவாரு video ஒன்றை வெளியிட, ஸ்தம்பித்து போன இளைஞர்கள், Tempt ஆகி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Janani (@jananihere_)

“தலைவர் செம்ம மாஸ்” ரீலீஸ் தேதியோடு அண்ணாத்த படத்தின் மாஸ் போஸ்டர் வெளியீடு !

அண்ணாத்த..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டிருந்த நிலையில் சன் பிக்சர்ஸ் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் மாஸ்ஸான லுக்கில் ரஜினியை பின்புறத்தில் காட்டியுள்ளனர். மேலும் அண்ணாத்த (04.11.2021) தீபாவளி அன்று ரிலீஸ் ஆகும் என்றும், பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

 

இளசுகளை கிறங்கடிக்கும் கஸ்தூரி .. 47 வயதிலும் மாடர்ன் உடையில் ஒரு மார்க்கமா இருக்கீங்க!

கஸ்தூரி..

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகைகளுள் ஒருவர் கஸ்தூரி. இவர் அன்றைய கால நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த கஸ்தூரி தற்போது ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

சமீபகாலமாக இவர் நடிக்கும் படங்களுக்கு பெரிய அளவு வரவேற்பு இல்லாவிட்டாலும் சமூக வலைதள பக்கத்தில் இவர் எப்போதும் ஆக்டிவாக ரசிகருடன் உரையாடுவது பல இயக்குனர்களும் கஸ்தூரிக்கு தங்களது படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றனர்.

என்னதான் கஸ்தூரி படங்களில் நடித்தாலும் அவ்வப்போது சமூகம் சம்பந்தப்பட்ட விஷயத்திற்கும், தனது மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவதாலும் பலராலும் பல விமர்சனங்களுக்கு உள்ளானார்.

ஆனால் அதைப் பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தற்போதுவரை தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவருகிறார். இவரது நடிப்பில் தற்போது உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் தமிழரசன் மற்றும் உன் காதல் இருந்தால் இந்த 2 திரைப்படத்திலும் கஸ்தூரிக்கு முக்கியமான கதாபாத்திரத்தில் கொடுத்துள்ளதாக இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

கஸ்தூரி எப்போதும் அவரது சமூக வலைதள பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிடுவதே வாடிக்கையாக வைத்திருப்பார் தற்போது அதேபோல் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அப்போவே படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வயசிலும் நீங்க அழகாகத்தான் இருக்கிறீர்கள், லுக்கிங் சோ க்யூட் மற்றும் வாவ் என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..