ரோஜா சீரியல் நடிகருக்கு என்ன ஆனது – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சிப்பு சூர்யன்…

சன் டிவியின் TRPயில் உச்சத்தில் இருக்கும் ஒரே சீரியல் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள ரோஜா சீரியல்.

தொடர்ந்து பல வாரங்களாக TRP ரேட்டிங்கில் அனைத்து தொலைக்காட்சிகளின் சீரியல்களையும் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் உள்ளது ரோஜா.

இந்த சீரியல் மூலம் தற்போது சின்னத்திரையில் பல ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்திருப்பவர் ரோஜா சீரியல் கதாநாயகன் நடிகர் சிப்பு சூர்யன்.

இந்நிலையில் சிப்பு சூர்யன் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் சமூக வலைத்தளத்தில் உலவருகிறது. இதில் சிப்பு சூர்யனுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், கூடிய விரைவில் அவர் மீண்டுவருவார் என்று நபர் ஒருவர் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், அதிர்ச்சியில் இந்த பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

 

படத்தில் மட்டும் பேசுற ஹீரோ( விஜய், ரஜினி ) நா இல்ல.. நிஜத்திலும் பொளந்து கட்டிய சித்தார்த்!

நடிகர் சித்தார்த்…

நடிகர் சித்தார்த் ஒரு காலத்தில் ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்தார். அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் வெற்றி படங்கள் எதுவும் அமையாததால் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு தனக்குத் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக கூறி வந்தார்.

சமீபகாலமாக சித்தர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தியாவில் நடக்கும் ஆட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றி தைரியமாக தன் கருத்துக்களை முன்வைத்து வந்தார்.

இதனால் பல அரசியல்வாதிகளுக்கு எதிரியாக மாறினார் நடிகர் சித்தார்த். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தைரியமாக தன் கருத்துக்களை முன்வைத்த சித்தார்த்துக்கு மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் பல உயிர்கள் பறிபோயுள்ளன.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த ஒரு ஆக்ஸிஜன் கட்டுப்பாடும் இல்லை, எனவும் தவறான கருத்துகளை பறப்புவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

இதனை மேற்கோள்காட்டி சித்தார்த் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பொய் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவரது கன்னத்தில் அறையப்படும் என வெளிப்படையாக கூறியிருந்தார்.

இதனால் கோபமடைந்த பாஜகவினர் அவரது அலைபேசி எண்ணை சமூகவலைதளத்தில் பரப்பி விட அவருக்கு 500 க்கும் மேற்பட்ட அலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. மேலும் குடும்பத்தினரையும் இழிவாகப் பேசியுள்ளனர்.

இதனுடைய ஆதாரங்களை தற்போது போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் சித்தார்த்துக்கு ஆதரவாக இந்திய அளவில் ஹஷ்டாக் ( #IstandwithSiddarth ) டிரென்ட் செய்தனர் நெட்டிசன்கள்.

விஜய் மற்றும் ரஜினி படத்துக்கு அரசை எதிர்த்து வசனம் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர், ஆனால் களத்தில் இறங்கி சண்டை செய்யும் சம்பவம் சித்தார்த்துக்கு தற்போது எளிதாகிவிட்டது.

பாத்ரூமை வீடியோவாக வெளியிட்ட பிக்பாஸ் அர்ச்சனா.. கேவலப்படுத்திய ரசிகர்களுக்கு கொடுத்த செம பதிலடி!

அர்ச்சனா…

ஊரடங்கு சமயத்தில் நடிகர் நடிகைகள் மட்டுமல்லாமல் தொகுப்பாளர்களும் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி ஆளுக்கொரு யூடியூப் சேனலை ஆரம்பித்து நன்றாக கல்லா கட்டி வருகின்றனர்.

அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ராணி போல் தொகுப்பாளினியாக இருந்தவரை பிக்பாஸ் நிகழ்ச்சி அழைத்துச்சென்று கேவலபடுத்தி விட்டது விஜய் டிவி. அதை மறைக்க அப்படியே அவருக்கு தொகுப்பாளர் வேலையையும் போட்டுக் கொடுத்தது.

பெயர் புகழுக்காக ஆசைப்பட்டு சென்று பின்னர் பல்பு வாங்கிக் கொண்டு வந்த பிக்பாஸ் அர்ச்சனா தன்னுடைய மகளுடன் சேர்ந்து வாவ் லைஃப் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேனலை தொடங்கி அதில் தன்னுடைய வீட்டை பற்றி ஒவ்வொரு வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

கெட்டதிலும் ஒரு நல்லது என்பதைப் போல அர்ச்சனாவை திட்டுவதற்காகவே அந்த வீடியோவை பல பேர் பார்த்து வருகின்றனர். இதனால் எவன் திட்டினால் எனக்கென்ன என்று வீடியோவை வெளியிட்டு மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை பிடித்து வருகிறார் அர்ச்சனா.

அந்த வகையில் சமீபத்தில் வீட்டிலுள்ள ஒவ்வொரு அறைகளையும் ஒவ்வொரு வீடியோவாக வெளியிட்டு வந்த அர்ச்சனா அவருடைய பாத்ரூமையும் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். சும்மா இருப்பார்களா நம்ம நெட்டிசன்கள். கமெண்டில் புகுந்து விளையாடி வருகின்றனர்.

இதைப்பார்த்து கடுப்பாகாமல் அர்ச்சனா தன்னுடைய அமைதியான பாணியில் அவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

யார் என்ன பேசினாலும் நாங்கள்தான் ட்ரெண்டிங் நம்பர் ஒன் என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் நீங்கள் திட்டினாலும் எனக்கு நல்ல வருமானம்தான் என சொல்லாமல் சொல்லியுள்ளார் பிக்பாஸ் அர்ச்சனா.

நம்ம விஜய் டிவி அறந்தாங்கி நிஷாவா இது? என்ன இப்படி உடலை குறைத்து ஒன்லி ஆயிட்டாங்க!

நிஷா…

விஜய் டிவியில் காமெடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. சமீபத்தில் விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆனால் நிகழ்ச்சியில் கிடைத்த நல்ல பெயரை பிக் பாஸ் வீட்டுக்குள் கெடுத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அந்த அளவுக்கு அர்ச்சனாவுடன் சேர்ந்த இவரது பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. அதன் பிறகு பெரிதாக வெளியில் தலை காட்டாமல் சுற்றி வந்த அறந்தாங்கி நிஷா தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிவிட்டார்.

அந்த புகைப்படங்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சேனல்களில் மிக முக்கியமானவை விஜய் டிவி.

அதில் தன்னுடைய காமெடி பேச்சுக்களால் அனைவரையும் கவர்ந்தவர் தான் அறந்தாங்கி நிஷா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பல்வேறு காமெடி நிகழ்ச்சிகளிலும், பண்டிகை நாட்களில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய காமெடியால் அனைவரையும் கவர்ந்தவர்.

தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் சினிமாவிலும் அடுத்தடுத்த அவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஏற்கனவே சுந்தர் சி இயக்கிய கலகலப்பு 2 படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அடுத்த கோவை சரளாவாக மாறவேண்டும் என்பதுதான் அறந்தாங்கி நிஷாவின் நீண்ட நாள் ஆசையாம். அதற்காக தற்போது பட வேட்டையை தொடங்கியுள்ளார். இவருடைய காமெடி திறமைக்கு கண்டிப்பாக சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என பலரும் கூறிவருகின்றனர்.

சகலமும் தெரிய போஸ் கொடுத்த மாஸ்டர் பட சுரேகா வாணி.. 42 வயதிலும் ஒரு மார்க்கமா இருக்கியேமா!

சுரேகா வாணி..

தமிழ் சினிமாவை பொருத்தவரை நடிகைகளையும் தாண்டி துணை நடிகைகள் அல்லது துணை கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் பெரிதும் பரபரப்பாக பேசப்படுவார்கள்.

அதேபோல் தமிழ் சினிமாவில் உத்தமபுத்திரன் திரைப்படத்தில் அறிமுகமானவர், நடிகை சுரேகா வாணி.

இதனைத்தொடர்ந்து எதிர்நீச்சல், மெர்சல், காதலில் சொதப்புவது எப்படி போன்ற படங்களில் நடித்து இருந்தார். இவர் தெய்வத்திருமகள் படத்தில் எம்.எஸ். பாஸ்கர் அவர்களின் மனைவியாக நடித்து இருப்பார். இந்த கேரக்டர் பெரிதும் பேசப்பட்டது.

ஆந்திராவை பிறப்பிடமாகக் கொண்ட இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் துணை நடிகை வேடத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில்கூட மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். சுரேகா வாணி நடித்திருந்த அருமையான காட்சி படத்தில் இடம்பெறவில்லை என்பது வருத்தமான விஷயம்.

ஆனால் அதன் பிறகு விடுபட்ட காட்சிகள் என அமேசான் தளம் வெளியிட்டதற்கு பிறகு சுரேகா வாணிக்கு ரசிகர்கள் ஏராளம் ஆகிவிட்டனர்.

ஒரு காட்சி என்றாலும் தரமான காட்சியானது. சுரேகா வாணி தற்போது பல படங்களில் குணச்சித்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவருக்கு அடிக்கடி வெளிநாடு செல்லும் பழக்கம் உள்ளது.

இளமை ஊஞ்சலாடும் வயதில் முன்னழகு தெரிவது போன்று சைடு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

குக் வித் கோமாளி ரசிகர்களுக்கு காத்திருக்கும் செம சப்ரைஸ் – என்ன தெரியுமா?

குக் வித் கோமாளி…

சின்னத்திரையில் சமீபத்தில் பெரிதளவில் கொண்டாடப்பட்ட ஒரே நிகழ்ச்சி விஜய் டிவியின் குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சியின் கடைசி எபிசோட், தி பைனல் சில வாரங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது.

இந்த பைனல் நிகழ்ச்சியில் அதிக மதிப்பெண்களை பெற்று குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டில் வின்னர் ஆக கனி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பைனல் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் எப்போது குக் வித் கோமாளி ஆரம்பிக்கும் என்று ரசிகர்கள் பலரும் கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

இந்நிலையில் ரசிகர்களை ஷாக் கொடுக்கும் வகையில் குக் வித் கோமாளி சீசன் 2 கொண்டாடட்டம் நிகழ்ச்சி நடந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சி கூடிய விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது

கொரோனா 2வது அலை – ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய நடிகர்!

அர்ஜுன் கவுடா…

கொரோனா பரவல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் திரையுலகத்தைச் சேர்ந்த சில பிரபலங்கள் சமூக சேவைகளைச் செய்து வருகிறார்கள்.

‘யுவரத்னா, ருஸ்தம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள கன்னட நடிகர் அர்ஜுன் கவுடா மக்களுக்கு உதவுவதற்காக தற்போது ஆம்புலன்ஸ் டிரைவராக மாறியுள்ளார்.

‘புரொஜக்ட் ஸ்மைல் டிரஸ்ட்’ என்ற அமைப்புடன் இணைந்து நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார்.

இதுகுறித்து கூறிய அர்ஜுன் கவுடா, “நான் உரிய பயிற்சி எடுத்தும், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளேன். உங்கள் வாழ்த்துகளால் நிறைத்துவிட்டீர்கள். மக்களுக்கு இப்படி சேவை செய்வதில் நான் பெருமை கொள்கிறேன்,” என்றார்.

தல அஜித்தின் வலிமை படம் ஓடிடியில் வெளியாகுமா? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தகவல்!

வலிமை…

எச். வினோத் மற்றும் தல அஜித் கூட்டணியில் உருவாகி சூப்பர்ஹிட்டான திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இந்த வெற்றியை தொடர்ந்து மீண்டும் இந்த கூட்டணி வலிமை படத்திற்காக இணைந்தது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பில், கடைசியாக ஒரு சண்டை காட்சி மட்டும் படமாக்க மீதமுள்ளது என்று தெரிவிக்கின்றனர்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக மீண்டும் காட்டுப்பாட்டுகள் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வலிமை படம் ஓடிடியில் வெளிவர வாய்ப்புகள் இருக்கிறதா என்று ரசிகர் ஒருவர் பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான சித்ரா லக்ஷ்மணனிடம் கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்த அவர், வலிமை படத்திற்கு மிகப்பெரிய அளவில் மார்க்கெட் இருக்கிறது. அதுமட்டுமின்றி இப்படம் தியேட்டரிலும்,

ஓடிடியில் சூப்பராக ஓடும் என்று தயாரிப்பாளர் அறிவார். அப்படி இருக்கும் பொழுது எப்படி ஓடிடியில் மட்டும் வலிமை ரிலீசாகும் என்று பதிலளித்துள்ளார்.

மாலத்தீவில் மோசமாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் நடிகை..!

ஷிவானி…

விஜய் டிவியின் மூலம் திரையுலகிறகு அறிமுகமானவர் தான் ஷிவானி. இவர் விஜய் டிவியில் பகல் நிலவு சீரியல் மூலம் நடிக்க தொடங்கினார்.

அதற்கு பின்பு கடைக்குட்டி சிங்கம் தொடரில் நடித்தார். பின்பு ஜீ தமிழ் தொடரில் இரட்டை ரோஜா என பல சீரியல் தொடரில் நடித்துள்ளார் ஷிவானி.

அதற்கு பிறகு இவருக்கு விஜய் டிவியில் இருந்து பிக்பாஸ் என்ற நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து அதில் மிகவும் பிரபலமாகி மக்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 98 நாட்கள் தாக்குப் பிடித்தார் ஷிவானி.

மாலத்தீவில் தற்போது மிகவும் படுமோசமாக எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்.

அதிலும் முக்கியமாக ரம்பாவை மிஞ்சும் அளவிற்கு தொடை தெரிவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அவர் பக்கம் திருப்பியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஷிவானிக்கு தற்போது வரை அது ஒரு கனவாக தான் இருக்கிறதாம்.

வெள்ளை நிற உடையில் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட தொகுப்பாளினி டிடி, ட்ரெண்டிங் புகைப்படங்கள்!

திவ்யதர்ஷினி…

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பல வருடங்களாக இருந்து வருபவர் தான் திவ்யதர்ஷினி என்கிற டிடி.

மேலும் இவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது, அந்த அளவிற்கு இவர் பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இதனிடையே அண்மை காலமாக இவரை பல நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை,

அதற்கு பதிலாக இவர் விருது வழங்கு விழாக்களை மட்டுமே தொகுத்து வழங்கி வருகிறார்.

கடைசியாக டிடி விஜய் டெலீவிஸின் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது வெள்ளை நிற உடையில் டிடி-யின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.