எம்ஜிஆர் வேடத்தில் அஜித்… வைரலாகும் பிறந்தநாள் போஸ்டர்!

அஜித்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் எம்ஜிஆர் வேடத்தில் இருக்கும் போஸ்டரை ஒட்டி இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் ரசிகர்கள் பலரும் அஜித்தின் பிறந்த நாளை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அஜித்தின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து தற்போது போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அந்த வகையில் மதுரையில் அஜித்தை எம்ஜிஆர் ஆக சித்தரித்து பொன்மனச் செம்மலை என கூறி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

இந்த போஸ்டரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இணையத்தை பற்ற வைத்த தளபதி 65 பட கதாநாயகி பூஜா ஹெக்டே – அதுவும் இப்படியொரு புகைப்படத்தின் மூலமா!

பூஜா ஹெக்டே…

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பின் பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

அதில் வெற்றியடைந்த நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்து, இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாகியுள்ளார்.

மேலும் தற்போது மீண்டும் தமிழில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் மேலாடை மட்டும் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை பற்ற வைத்துள்ளார் நடிகை பூஜா ஹெக்டே.

 

View this post on Instagram

 

A post shared by Pooja Hegde (@hegdepooja)

தெறி, மாரி புகழ் நடிகர் செல்லத்துரை ம.ர.ணம்..சோகத்தில் திரையுலகத்தினர்!!

செல்லத்துரை மரணம்…

மாரி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை அவர்கள் ம.ர.ணம் அ.டை.ந்துள்ளார்.

தனுஷின் மாரி படத்தில் நடித்ததால், மாரி செல்லதுரை என்று அழைக்கப்படும் செல்லதுரை தமிழ்த் திரைத்துறையில் ஒரு மூத்த நடிகர்.

நயன்தாரா நடித்த அறம் திரைப்படம் உட்பட பல படங்களில் உணர்ச்சி பூர்வமாக நடித்த செல்லதுரை, ‘அப்படியா விசயம்’ என்று பேசும் வசனம் மீம்ஸ்களுக்கு மத்தியில் பிரபலம்.

இந்நிலையில் நேற்று மாலை பாத்ரூமுக்கு சென்ற இவர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் கதவை உடைத்துக்கொண்டு பார்த்தபோது, செல்லதுரை இயற்கையாக ம.ர.ணம் அடைந்தது தெரியவந்தது.

அவருக்கு வயது 84. இதனை அடுத்து அவரது இறுதி அ.ஞ்.சலி மற்றும் நல்லடக்கம் இன்று மதியம் 2 மணி அளவில் சென்னையில் நடக்கத் தொடங்குகிறது.

ஒளிப்பதிவாளர் கே.வி. ஆனந்த் மரணம்- அதிர்ச்சியில் பிரபலங்கள் போட்ட பதிவு!

கே.வி. ஆனந்த்…

ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் களமிறங்கி பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் கே.வி. ஆனந்த்.

அதன்பிறகு அயன், கவண் போன்ற படங்களின் மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார், அதில் சாதனையும் செய்தார்.

அடுத்தடுத்தும் நிறைய படைப்புகள் இவரிடம் இருந்து எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இன்று நம்மைவிட்டு பிரிந்துவிட்டார்.

அனைவரையும் சிரிக்க வைத்த குக் வித் கோமாளி செட் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா – வீடியோ!

குக் வித் கோமாளி…

சின்னத்திரையில் சமீபத்தில் பெரிதளவில் கொண்டாடப்பட்ட ஒரே நிகழ்ச்சி விஜய் டிவியின் குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சியின் கடைசி எபிசோட், தி பைனல் சில வாரங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது.

இதில் இயக்குனர் திருவின் மனைவியும், இயக்குனர் அகத்தியனின் மகளுமான கனி என்பவர் டைட்டில் வின்னர் ஆனார்.

இந்த பைனல் எபிசோடிற்கு பிறகு மீண்டும் குக் வித் கோமாளி செட் Mr. அண்ட் Mrs சின்னத்திரை நிகழ்ச்சிக்காக திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது அனைவரையும் சிரிக்க வைத்த குக் வித் கோமாளி செட் வெளிச்சம் இல்லாமல் களையிழந்து போய் இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இதனை சிலர் கண்கலங்கி வருத்தத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகின்றனர்.

முதன் முறையாக வெளியான இயக்குனர் ஏ.எல். விஜய் மகளின் அழகிய புகைப்படம் !

ஏ.எல்.விஜய் மகள்…

தமிழ் சினிமாவில் வெற்றிப்படங்கள் கொடுத்து முன்னிலையில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் ஏ.எல்.விஜய்.

கிரீடம், தெய்வ திருமகள், தலைவா, மதராசப்பட்டினம் என இவரது வெற்றிப்படங்கள் அனைத்தும் இப்போதும் ரசிகர்களின் பேவரெட் படங்களில் இடம்பெற்றுள்ளது.

பாலிவுட் நாயகி கங்கனாவை வைத்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தை தலைவி என்கிற பெயரில் எடுத்து வருகிறார்.

சொந்த வாழ்க்கையில் நடிகை அமலாபாவை விவாகரத்து செய்த ஏ.எல்.

விஜய் 2019ம் ஆண்டு ஐஸ்வர்யா என்கிற மருத்துவரை திருமணம் செய்துகொண்டார்.

58 வயதில் புதிய கெட்டப்பில் நடிகை ராதிகா – அசந்துபோன ரசிகர்கள்!!

நடிகை ராதிகா…

பாரதி ராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா.

இதன்பின் ரஜினி, கமல், பாக்கியராஜ், மோகன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி நடிகையானார்.

மேலும் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

வெள்ளித்திரையில் கலக்கி வந்த நடிகை ராதிகா, சின்னத்திரையில் சித்தி, செல்லமே, வாணி ராணி என பல வெற்றி சீரியல்கள் கொடுத்தார்.

ஆனால் தீடீரென இனி நான் சீரியல்களில் நடிக்க மாட்டேன் என்று ரசிகர்களுக்கு அதிர்த்தியளிக்கும் தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் தனது 58 வயத்தில் ஷார்ட் ஹேர் கட் செய்து புகைப்படத்தை வெளியிட்ட ரசிகர்களை அசரவைத்துள்ளார்.

பயமுறுத்தும் கொரோனா, பிரபலங்கள் வெளியிட்ட வீடியோ.. ஆக்சிஜன் இல்லாதால் துவம்சமான மருத்துவமனை!!

சினிமா பிரபலங்கள்…

கொரோனாவால் மக்கள் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில், சினிமா பிரபலங்கள் ஆறுதல் அளிக்கும் விதமாக சில பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

இதில் நகுல், பிரியங்கா சோப்ரா மற்றும் வேதிகா இடம் பெற்றுள்ளன. ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததால் மக்கள் கோபத்தில் மருத்துவமனையை அடித்து நொறுக்கிய வீடியோ பதற வைத்துள்ளது.

தனுஷ் ஆசைப்பட்ட வேலை எது தெரியுமா? கனவு நாசமா போனதற்கு காரணம் இவர்தான்!

தனுஷ்…

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களின் பட்டியலில் இருப்பவர் நடிகர் தனுஷ். ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் பல தடங்கல்கள், பல தோல்விகளைச் சந்தித்தாலும் அதன் பிறகு சுதாரித்துக் கொண்டதால் தற்போது சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டி வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றுவருகின்றனர். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்திற்கு இவரது நடிப்பைப் பார்த்து தேசிய விருது கிடைத்தது.

இப்படி தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் விருதுகளும் மற்றொரு பக்கம் வசூலும் வாரி குவித்து வரும் தனுஷ் சினிமாவில் வருவதற்கு முன்பு சமையல் துறையில் சம்பந்தபட்ட கேட்டரிங் படித்து பட்டம் பெற வேண்டுமென ஆசைப்பட்டு உள்ளார்.

ஆனால் இவருடைய அண்ணன் செல்வராகவன் சும்மா இருக்காமல் தம்பி நீ சினிமாவில் வா நான் உன்னை தேற்றி விடுகிறேன் என கூறி நம்பிக்கை கொடுத்து சினிமாவுக்கு அழைத்து வந்துள்ளார்.

இப்போது சந்தோசமாக இருக்கும் தனுஷ் ஆரம்ப காலத்தில் சினிமாவிற்கு வந்தபோது என்னுடைய கனவு போனதற்கு காரணம் என் அண்ணன் தான் எனவும் கூறியுள்ளார்.

தற்போது சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பெற்றுள்ளதால் அந்த கனவை பற்றி கவலைப்படாமல் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

விஜய் சேதுபதிக்காக ‘விடுதலை’ படத்தில் அதிரடி மாற்றம் செய்த தயாரிப்பாளர்!!

விஜய் சேதுபதி…

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடிக்கும் விடுதலை படத்தில், விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் அடுத்ததாக சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் இணைந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ஆரம்பத்தில் ‘விடுதலை’ படத்தை தமிழில் மட்டுமே வெளியிட திட்டமிட்டிருந்த தயாரிப்பாளர், விஜய் சேதுபதியின் வருகையாலும், அவருக்கு தெலுங்கு, இந்தி போன்ற திரையுலகில் இருக்கும் மார்க்கெட் காரணமாக பான் இந்தியா படமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்.

அதன்படி தமிழில் உருவாகி உள்ள இப்படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.