கொரோனாவால் தளபதி 65 படத்திற்கு வந்த புதிய பாதிப்பு, அதிர்ச்சியில் ரசிகர்கள்! என்ன தெரியுமா?

தளபதி 65…

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வந்தார்.

மேலும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்த வந்த நிலையில், அதனை முடித்துவிட்டு தற்போது படக்குழுவினர் சென்னை திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தளபதி 65 படத்தின் வெளியீட்டு தள்ளிப்போகும் என்பதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர். மேலும் இப்படத்தின் கதாநாயகியான நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா இருப்பது சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த படத்தில் கொடூரமான வில்லனாக நடிக்கும் முக்கிய நடிகர்!

அண்ணாத்த…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் முக்கிய திரைப்படம் தான் அண்ணாத்த, இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

மேலும் சில காரணங்களால் அண்ணாத்த ஷூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்டு வேகமாக இப்படத்தை முடிக்கும் பணியில் உள்ளனர்.

இந்நிலையில் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் ஒரு மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருவது நாம் அனைவரும் அறிந்த விஷயம். அந்த வகையில் தற்போது இப்படத்தில் வில்லனாக நடித்து வரும் ஜெகபதி பாபு, அண்ணாத்த படத்தின் வில்லன் கதாபாத்திரம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

ஆம், அந்த கதாபாத்திரம் பார்ப்பதற்கு கொடூரமாக இருக்கும் என்றும், அரவிந்த சமேதா படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரத்தை முறியடிக்கும் வகையில் இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Jaggu Bhai (@iamjaggubhai_)

விஜய் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியில் கலக்க வரும் நடிகை ரம்யா கிருஷ்ணன்- எந்த நிகழ்ச்சி தெரியுமா?

ரம்யா கிருஷ்ணன்…

நடிகை ரம்யா கிருஷ்ணனை மக்கள் ராஜ மாதாவாக தான் பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு பாகுபலி படம் மூலம் மக்களின் மனதில் அழமாக இடம் பிடித்துவிட்டார்.

அவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். இதற்கு இடையில் விளம்பரங்களும் நடித்துள்ளார்.

தற்போது இவரைப் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது விஜய் தொலைக்காட்சியில் 4 சீசனிலும் வந்த பிக்பாஸ் பிரபலங்கள் பலர் ஜோடியாக நடனம் ஆட இருக்கிறார்கள்.

அந்த நிகழ்ச்சிக்கு BB Jodigal என பெயர் வைத்துள்ளனர், அண்மையில் நிகழ்ச்சியின் புரொமோ வெளியாக யார் யார் கலந்து கொள்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.

இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொள்ள இருக்கிறாராம் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

ராம் சரண்-ஷங்கர் இணையும் படத்திற்கு இசையமைப்பாளர் இவர்தானா?

இசையமைப்பாளர்…

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கொரோனா நேரத்தில் படங்கள் அதிகம் கமிட்டாகி வருகிறார்.

நடிகர்களிடம் தனது கதையை கூறி வருகிறார் என்பது நன்றாகவே தெரிகிறது. அப்படி அதிரடியாக வந்த தகவல் தெலுங்கு சினிமாவின் டாப் நடிகரான ராம் சரணுடன் இணையும் படம்.

ஷங்கர் முதல் முறையாக ராம் சரணை வைத்து படம் இயக்குகிறார், இந்த தகவல் வந்ததே தவிர மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் என எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்த நேரத்தில் தான் படத்தை பற்றிய ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது ஷங்கர்-ராம் சரண் இணையும் படத்திற்கு தமன் இசையமைப்பாளராக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

தீடீரென நடிகை திரிஷா எடுத்த அதிரடி முடிவு – ஷாக்கான ரசிகர்கள்!!

நடிகை திரிஷா…

தமிழ், தெலுங்கு என பல திரையுலகில், பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து, கடந்த 17 ஆண்டுகளாக முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை திரிஷா.

நடிகை திரிஷாவின் கைவசம் கர்ஜனை, சதுரங்க வேட்டை 2, ராங்கி, சுகர், 1818, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் உள்ளன. நடிகை த்ரிஷாவின் நடிப்பில் சமிபதியோல் ‘பரமபதம் விளையாட்டு’ எனும் படம் ஓடிடி-யில் வெளியானது.

இப்படத்தின் டைட்டில் கார்டில் திரிஷா என்பதற்கு பதிலாக ‘த்ர்ஷா’ என்று போட்டு போடப்பட்டுள்ளது. இதை வைத்து நடிகை திரிஷா பெயர் மாற்றம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்த குழப்பத்திற்கு பதிலளித்த நடிகை திரிஷா ” நான் பெயர் மாற்றம் செய்யவில்லை. அதற்கு தற்போது எந்தவித அவசியமில்லை. ‘திரிஷா’ என்ற அழகான பெயர் இருக்கும்போது, அந்த பெயரை ஏன் மாற்ற வேண்டும்? வதந்திகளை என் ரசிகர்கள் நம்ப மாட்டார்கள் ” என்று அவர் கூறியுள்ளார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சித்து-ஸ்ரேயா ஜோடியாக போட்ட ஆட்டம்..!

சித்து-ஸ்ரேயா…

தளபதி 65 பட கதாநாயகி பூஜா ஹெக்டேவிற்கு கொரோனா – ரசிகர்கள் ஷாக்!!

பூஜா ஹெக்டே…

நெல்சன் திலீப்புகுமார் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் பூஜா ஹெக்டே முதல் முறையாக இணைந்து நடித்து வரும் படம் தளபதி 65.

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் ஜீவா நடிப்பில் மிஸ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன்பின் பெரிதும் தமிழில் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்தார்.

அதில் வெற்றியடைந்த நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்து, இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாகியுள்ளார்.

தற்போது தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 65 படத்தில் கதாநாயகியாக நடித்து நடித்து வரும் பூஜா ஹெக்டேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என அவரே அறிவித்துள்ளார்.

அந்த பதிவில் ” நான் என்னை தனிமைப்படுத்தி கொண்டேன், என்ன சமீபத்தில் சந்தித்த அனைவரும் டெஸ்ட் எடுத்துக்கொள்ளுங்கள், அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள் ” என தெரிவித்துள்ளார்.

கல்யாணம் ஆகியும் Glamour குறையாத மனிஷா யாதவ் புகைப்படங்கள்..!

மனிஷா யாதவ்…

அடிப்படையில் மாடலிங் பெண்ணான மனிஷா யாதவ் 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது கதாபாத்திரம் சர்ச்சையை கிளப்பும் வகையில் அமைந்தது.

அதனைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஆதலால் காதல் செய்வீர் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. இதனால் கவனிக்கப்படும் நாயகியான மனிஷா யாதவ் தொடர்ந்து சில படங்களில் ஒப்பந்தமானார்.

அப்படி ஒப்பந்தமான ஜன்னல் ஓரம், பட்டைய கெளப்பணும் பாண்டியா போன்ற படங்கள் மோசமான தோல்வியை தழுவியதால் தன்னுடைய பாதையை கிளாமர் பக்கம் திரும்பினார்.

கிளாமர் பக்கம் சென்றவருக்கு த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற முதல் படமே தாறுமாறு வெற்றியை பெற்றது. இருந்தாலும் அதில் மனிஷா யாதவுக்கு படுகேவலமான கதாபாத்திரமாக வடிவமைக்கப்பட்டதால் படம் வெற்றியடைந்தாலும் இவரது கதாபாத்திரம் வரவேற்பை பெறவில்லை.

அதனைத் தொடர்ந்து வெளியான ஒரு குப்பை கதை படத்திலும் இவருக்கு ரசிகர்கள் வெறுக்கும் கதாபாத்திரமாகவே அமைந்தது. இதனால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன மனிஷா யாதவ் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வமாக உள்ளார்.

பட வாய்ப்புகளை பெற முதற்கட்டமாக தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அள்ளி வீசி வருகிறார். அதிலும் இந்த முறையை அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் எல்லாம் கவர்ச்சியின் உச்சகட்டம் தான்.

தொடையழகி ரம்பாவை மிஞ்சிய பிக் பாஸ் ஷிவானி.. கதறும் இணையதளம்!!

ஷிவானி….

பிக்பாஸ் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் ஷிவானி. அதற்கு முன்னதாக விஜய் டிவியில் பிரபல சீரியல் நிகழ்ச்சியான பகல் நிலவு என்ற சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதற்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம், ஜீ தமிழில் இரட்டை ரோஜா போன்ற சீரியல்கள் மூலம் பிரபலமானார்.

அதற்குப் பின்னர் தான் விஜய் டிவியின் பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து 98 நாட்கள் தாக்குப் பிடித்தார் சிவானி.

மாலத்தீவில் தற்போது குஜாலாக கழித்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்.

அதிலும் முக்கியமாக ரம்பாவை மிஞ்சும் அளவிற்கு தொடை தெரிவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஷிவானிக்கு தற்போது வரை அது ஒரு கனவாக தான் இருக்கிறதாம்.

கிங்காங் ஸ்டைலில் வெளியான கபி ட்ரைலர்.. மீண்டும் பேராசையில் தேனாண்டாள் பிலிம்ஸ்!!

கபி ட்ரைலர்…

தளபதி விஜய்யை வைத்து மெர்சல் படத்தை எடுத்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதன்பிறகு மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கியுள்ளது. இது யாருக்கு சந்தோசமாக இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு குஷியாக இருக்கும்.

அதற்கு காரணம் மெர்சல் படத்தால் தான் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பட தயாரிப்பை நிறுத்தி விட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியான நிலையில் தற்போது மீண்டும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஒரு அனிமேஷன் படத்தை எடுக்க உள்ளது தளபதி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடப்போவதாக குறிப்பிட்டிருந்தனர்.

ஹாலிவுட்டில் மனிதக் குரங்கை வைத்து கிங்காங் போன்ற பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில் முதன் முதலில் இந்தியாவில் அதுவும் தமிழில் கபி என்ற படத்தை மனிதக் குரங்கை வைத்து உருவாக்கியுள்ளனர்.

முழுக்க முழுக்க அனிமேஷன் தரத்தில் உருவாக உள்ள கபி திரைப்படத்தின் முதல் பார்வை வீடியோவை வெளியிட்டுள்ளனர். ஆனால் இதில் கிராபிக்ஸ் கொஞ்சம் சொதப்பலாக இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இருந்தாலும் இந்திய சினிமாவில் முதல் முயற்சி எடுக்கும் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து பல்வேறு சிக்கல்களில் மாட்டிக் கொண்ட தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் பெரிய பட்ஜெட்டை கையில் எடுப்பது சரி இல்லை என்ற கருத்துக்களே அதிகமாக வந்து கொண்டிருக்கின்றன.