இரண்டு வருடங்களில் 36 படம் நடித்த ஒரே நடிகை இவர்தான்.. அட, நம்ம உலக நாயகனுக்கு நெருக்கமானவர்!

கௌதமி…

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் இரண்டு வருடத்தில் 36 படங்களை நடித்து முடித்துக் கொடுத்த ஒரே நடிகை இவர்தான் என தயாரிப்பாளர்கள் இன்றுவரை அந்த நடிகையை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகின்றனர்.

இப்போதெல்லாம் ஒரு நடிகரோ அல்லது நடிகையோ ஒரு படத்தை முடித்துவிட்டு கொடுப்பதற்குள் அந்த தயாரிப்பாளருக்கு உயிர் போய் உயிர் வந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் பைவ் ஸ்டார் ஹோட்டல், பென்ஸ் கார் என செலவு பட்டை தீட்டுகிறார்கள்.

ஹீரோ மற்றும் ஹீரோயின் ஆகிய இருவருக்கும் வேண்டிய வசதிகளை செய்து தந்தே தயாரிப்பாளர்கள் ஒரு வழி ஆகி விடுவார்கள் போல. அப்படி அவர்களுக்கு பார்த்து பார்த்து செய்து கொடுத்தாலும் கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு பிரச்சினையை சொல்லி அந்த படத்தை இழுத்தடித்து விடுகிறார்கள்.

ஆனால் அப்போதெல்லாம் அப்படியில்லை. எந்த நடிகர் நடிகைக்கும் கேரவன் கிடையாது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், மரத்தடியில் உடை மாற்றிய காலமும் உண்டு. அப்படி அந்த காலங்களில் தயாரிப்பாளர்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டார் நடிகர் நடிகைகளில் மிக முக்கியமானவர் கௌதமி.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களில் 36 படங்களில் நடித்து முடித்தாராம். கால்ஷீட் பிரச்சனை என்ற ஒன்று கௌதமி சினிமா வாழ்க்கையில் வந்ததே கிடையாது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

இத்தனைக்கும் தென்னிந்திய சினிமாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்த கௌதமி ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் குறித்த தேதியில் படத்தை நடித்து கொடுத்து விடுவாராம். இதன் காரணமாகவே இன்று வரை தயாரிப்பாளர்கள் கொண்டாடும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

வெளிநாட்டில் நடுக்கடலில் தனது மனைவியை அழகாக புகைப்படம் எடுக்கும் தனுஷ்..!

நடிகர் தனுஷ்…

தமிழ் சினிமாவில் இவரெல்லாம் ஒரு நடிகரா, இதெல்லாம் ரசிக்கும் முகமா என நிறைய மோசமான விமர்சனங்களுக்கு ஆளானவர் நடிகர் தனுஷ்.

ஆனால் இப்போது அவரை கடுமையாக விமர்சனம் செய்தவர்கள் அனைவரும் அவரை பெரிய அளவில் பாராட்டி வருகிறார்கள், விருதெல்லாம் கொடுக்கிறார்கள்.

தமிழில் பல படங்கள் நடித்து சிறந்த நடிகன் என பெயர் பெற்ற தனுஷ் இப்போது பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் மாஸ் காட்டி வருகிறார்.

The Gray Man என்கிற ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் வெளிநாடு குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்கு அவர் எடுக்கும் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியாகி தான் வருகின்றன.

தற்போது நடுக்கடலில் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை அழகாக போட்டோ எடுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

வெறித்தமான அண்ணாத்த கெட்டப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், வெளியான செம மாஸ் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

ரஜினிகாந்த்…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

மேலும் இப்படத்தின் படக்குழுவினர்கள் ஒரு சிலருக்கு கொரோனா பரவியதால் அப்படத்தின் படப்பிடிப்பு பாதியிலே நிறுத்தப்பட்டது.

இதனிடையே சமீபத்தில் மீண்டும் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது, மேலும் இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகைப்படம் வெளியாகி இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் இருந்து புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், அதில் ரஜினி வெறித்தமான கெட்டப்பில் உள்ளார்.

யோகி பாபுவுடன் கிரிக்கெட் விளையாடிய பிரசாந்த்! மில்லியன் லைக்குகளை குவித்த வைரல் காட்சி!

பிரசாந்த்…

நடிகர் பிரசாந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

குறிப்பாக படப்பிடிப்பின் போது, இடைவேளை சமயத்தில் படக்குழுவில் உள்ளவர்களுடன் பிரசாந்த் மற்றும் யோகிபாபு கிரிக்கெட் விளையாடிய,

ஃபோட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.

பிரசாந்த், யோகிபாபு இருவருமே பந்துகளை சிக்சர், பவுண்டரி என அடித்து விளாசிய காட்சிகளும் அதிகம் பகிரப்பட்டு, ரசிக்கப்பட்டு வருகிறது.

அதிலும் மிக கச்சிதமாக பிரசாந்த் ஆஃப் ஸ்ப்பின்னரை போல் பந்து வீசுவது லைக்குகளை அள்ளி வருகிறது.

பிக்பாஸ் முகின் படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட்லுக் அறிவிப்பு!

முகின்….

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகின் ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் என்றும் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன் முகின் நடிக்கும் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டரை பிரபல மலையாள நடிகர் துல்கர் சல்மான் அவர்கள் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் முகின் நடிக்கும் முதல் திரைப்படத்திற்கு ’வேலன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை கவின் என்பவர் இயக்கி வருகிறார்.

கோபி சுந்தர் இசையில் கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் சரத்குமார் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை கலைமகன் என்பவர் ஸ்கைமேன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் தோற்றத்தில் களமிறங்கும் கார்த்தி.. வயதான கெட்டப்பில் தீயாய் பரவும் சர்தார் பட மோஷன் போஸ்டர்!

சர்தார் பட மோஷன் போஸ்டர்…

ஒரு காலத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் தனக்கு பிடித்த நடிகர்கள் நடித்தால் உடனே ஓடிப்போய் தியேட்டருக்கு சென்று படம் பார்த்து விடுவார்கள். ஆனால் சமீபகாலமாக ரசிகர்கள் உஷாராக உள்ளதால் நடிகர்கள் என்ன செய்வது என தெரியாமல் வித்தியாச வித்தியாசமான கெட்டப்புகளில் படங்களை நடித்து வருகின்றனர்.

நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சுல்தான் திரைப்படம் தெலுங்கு படங்கள் போல் இருப்பதால் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தது. அதனால் கார்த்திக் தனது அடுத்தடுத்த படங்களில் வித்தியாசமான கதைகளை மையமாக வைத்து நடிக்க முடிவெடுத்துள்ளார்.

அந்தவகையில் இரும்புத்திரை மற்றும் ஹீரோ போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடம் ஆதரவு பெற்ற பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் தற்போது கார்த்திக் சர்தார் என படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் போஸ்டரில் கார்த்தி ஒரு வயதான தோற்றத்தில் நடித்துள்ளது போல் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கார்த்திக் இதுவரை எந்த படத்தில் வயதான கெட்டப் நடிக்கவில்லை என்பதால் வயதான கெட்டப்பில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

முதலில் திருக்குறள் மூலம் தொடங்கிய படத்தின் போஸ்டரில் இறுதியாக கார்த்திக் டீசர்ட்டில் ஹிந்தி எழுத்து இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் சைனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளும் இடம் பெற்றுள்ளதால் இப்படத்தில் வடமாநிலங்களில் நடக்கும் சம்பவங்களும் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண் பேயாக நடித்துள்ள நிக்கி கல்ராணி.. அரண்மனை 3-க்கு ஆப்பு வைக்கும் சிவா நடிப்பில் இடியட் பட டிரைலர்..!

இடியட் ட்ரெய்லர்…

தமிழ் சினிமா ரசிகர்கள் பொருத்தவரை எப்போதுமே மாஸ் நடிகர்களுக்கு ஆதரவு இருக்குதோ இல்லையோ எப்போதுமே காமெடி நடிகர்களுக்கு ஆதரவு இருக்கும். அப்படி ரசிகர்கள் மத்தியில் பேராதரவு பெற்றவர் தான் நடிகர் சிவா.

இவரது நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களுமே காமெடியில் பட்டையை கிளப்பிய ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றுள்ளது. தொடர்ந்து காமெடி படத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வரும் நடிகர் சிவா.

அடுத்ததாக பேய் மையமாக வைத்து ஒரு காமெடி படத்தில் நடித்துள்ளார் அந்த படம்தான் இடியட். சமீபகாலமாக இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் இப்படத்தில் நிக்கி கல்ராணி ஒரு ஆண் பேயாக நடித்துள்ளது போல் சித்தரித்து உள்ளனர். வித்யாசமான கவுண்டர்கள் மூலம் காமெடியில் கலக்கி உள்ளார் நடிகர் சிவா. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

ஷூட்டிங் ஸ்பாட்டில் விவேக் அடிக்கும் லூட்டிகள்.. மாஸாக வெளிவந்த வீடியோ!

விவேக்…

ஷூட்டிங் ஸ்பாட்டில் விவேக் அடிக்கும் லூட்டியான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ரசிகர்களை திணற வைத்த ராய் லக்ஷ்மி .. அலறும் இன்ஸ்டாகிராம்..! வைரல் வீடியோ !

ராய்லட்சுமி…

தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலங்கள் அடிக்கும் லூட்டிகளை அப்லோட் செய்து ரசிகர்களை குஷி படுத்தியுள்ளனர்.

அதிலும் முக்கியமாக பார்வதி நாயர், கீர்த்தி சுரேஷ், ராய்லட்சுமி, பிக் பாஸ் அபிராமி போன்ற பிரபலங்களின் வீடியோ இடம் பெற்றுள்ளன.

டூ பீஸில் டான்ஸ் ஆடும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் அலற விட்டுள்ளார் ராய்லட்சுமி.

ஓடிடியில் வெளியாகும் அருண் விஜய் படம்!

அருண் விஜய் படம்…

அஜித்துடன் நடித்த என்னை அறிந்தால் படத்திற்கு முன்பே 2012ல் அருண் விஜய் நாயகனாக நடித்த படம் வா டீல்.

அவருடன் கார்த்திகா நாயர், வம்சி கிருஷ்ணா என பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை சிவஞானம் இயக்கியிருந்தார். 2014ல் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம் திட்டமிட்டபடி வெளியாகவில்லை.

கடந்த 7 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இப்படத்தை தற்போது தூசி தட்டியிருக்கிறது பெதர் டச் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து வா டீல் படத்தை தயாரித்த ஜே.எஸ்.கே. பட நிறுவனம்.

அதோடு, லாக்டவுன் நேரத்தில் தியேட்டரில் வெளியிட்டு ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்பதற்காக, ஓடிடி தளத்திலேயே படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.