ஓப்பனா இருக்கலாம் அதுக்குன்னு இப்படியா ?? இணையத்தில் இளசுகளை ஈர்க்கும் ரேஷ்மா !!

நடிகை ரேஷ்மா…

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி க வர்ச்சியில் தற்போது க்யூனாக மாறி உள்ளார். இணையத்தில் இவர் பதிவிடும் போட்டோவில் க வர்ச்சி தாண்டவம் ஆடுகிறது. இவர் சன்டிவியில் சன் சிங்கர், கடிதம், என் இனிய தோழியே போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ளார்.

மேலும், வாணிராணி, மரகத வீணை, காயத்ரி போன்ற பல சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2014ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் புஷ்பா புருஷன் என்ற காமெடி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

இதில், புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் ரேஷ்மா பசுபுலேட்டி நடித்திருப்பார். இவரது கணவராக சூரி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படத்தை பார்த்த யாராலும் இந்த நகைச்சுவையை மறக்கவே முடியாது. அந்த அளவுக்கு பிரபலமானது. ரேஷ்மா முன்னதாக வாணி ராணி, வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்திருப்பார்.

ஆனால், அவர் புஷ்பா புருஷன் காமெடியில் தான் அதிக அளவில் பிரபலமானார். அந்த நகைச்சுவை மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்பு பிக் பாஸ் சீசன் 3 இல் நுழைய வாய்ப்பாக மாறியது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரேஷ்மா தன்னை யார் என்று அடையாளப்படுத்தி காட்டினார். தொடர்ந்து, தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகின்ற ரேஷ்மா, கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார்.

நடிகை, தொகுப்பாளினி, செய்திவாசிப்பாளர் என பன்முகத் தன்மைக் கொண்டவர் ரேஷ்மா. இவர் முதன் முதலில் சன்தொலைக்காட்சியில் வம்சம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் தனது அறிமுகத்தைக் கொடுத்தார்.

விமான பணிப்பெண்ணான இவர் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் அதை விட்டுவிட்டார்.இவருக்கு பெரும் பெயரை பெற்றுத்தந்தது வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் சூரியின் மனைவியாக நடித்து இருப்பார்.

இவர் முதன் முதலில் நடித்த திரைப்படம் இது என்றாலும் இதில் புஷ்பா கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. பட்டி தொட்டி எங்கும் புஷ்பா புருஷன் நீங்க தானே என்ற டையலாக் செம வைரலானது.

இந்த படத்தின் மூலம் இவருக்கு தனி ரசிகர் கூட்டம் உருவானது.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தனது வாழ்க்கையில் நிகழ்ந்த சோ கங்களை கூறி பெண்கள் மனதிலும் இடம்பிடித்தார் ரேஷ்மா.

அந்த வீட்டில் ஆறுவாரங்கள் மட்டுமே இருந்த இவர் பின்னர் வெளியேற்றப்பட்டார்.போட்டோஷூட் நடத்துவதில் மிகுந்த ஆர்வமாக இருக்கும் இவர், கிளாமர் குயினா மாறி வருகிறார் இணையத்தில் அவ்வப்போது க வர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை திணறடித்து வருகிறார்.

கொரோனா பரவல் எதிரொலி… ஓடிடி ரிலீசுக்கு தயாராகும் டாக்டர்?

டாக்டர்…

நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயன், யோகிபாபு, வினய், பிரியங்கா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டாக்டர். இளம் நடிகை பிரியங்கா மோகன் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள, இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை மார்ச் 26-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். இருப்பினும் சட்டசபை தேர்தல் காரணமாக படத்தின் ரிலீஸை தள்ளிவைத்தனர். இதையடுத்து ரம்ஜான் பண்டிகைக்கு இப்படம் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதால், திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் டாக்டர் படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்காக முன்னணி ஓடிடி நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். ரம்ஜான் பண்டிகைக்கு இப்படம் ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரபல இயக்குனருடன் 3-வது முறையாக இணையும் விஜய் சேதுபதி?

விஜய் சேதுபதி…

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய்சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாகி, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 என்று பல படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன.

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதும், இமேஜ் பார்க்காமல் வில்லன், திருநங்கை, முதியவர் தோற்றங்களில் நடிப்பதுமே அவரை பெரிய நடிகராக்கி உள்ளது. பிறமொழி படங்களிலும் வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். மணிகண்டன், விஜய் சேதுபதி

இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி காக்கா முட்டை படத்தின் மூலம் பிரபலமான, இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மணிகண்டன் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் மகனா இவர், இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்!!

உதயநிதி ஸ்டாலின் மகன்..

தமிழ் சினிமாவில் பிரபலங்களின் வாரிசுகள் பலர் நடிக்க வந்துகொண்டிருக்கிறார்கள். அப்படி அரசியல், சினிமா என இரண்டிலும் பிரபலமான கலைஞர் அவர்களின் பேரன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தவர் உதயநிதி ஸ்டாலின்.

முதலில் விநியோகஸ்தர், தயாரிப்பாளர் என சினிமாவில் களமிறங்கிய உதயநிதி பின் நடிகராக தன்னை வளர்த்துக் கொண்டார்.

முதல் படத்தில் இருந்து இறுதியாக அவர் நடித்துள்ள படம் வரை அவரது வளர்ச்சியில் நிறைய வித்தியாசத்தை காணலாம். அதாவது நடிப்பு, நடனம் என எல்லாவற்றிலும் தன்னை உயர்த்தி இருக்கிறார்.

தற்போது அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார். இந்த நேரத்தில் தான் உதயநிதியின் மகனின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதைப்பார்த்த ரசிகர்கள் உதயநிதி மகனா இவ்வளவு பெரியவனாக வளர்ந்திருக்கிறார் என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமணம் – நடிகர், நடிகைகள் நேரில் வாழ்த்து!!

எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமண வரவேற்பு..

திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திரைப்பட நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் – ஷீலா தம்பதியின் மகள் ஐஸ்வர்யா. விஸ்காம் மாணவியான இவருக்கும், தொழிலதிபர் என்.ஏ.சுதாகர், சீனா தம்பதியின் மகன் அகுல் சுதாகருக்கும் நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர்கள் சரத்குமார், விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, டி.ராஜேந்தர், நாசர், ராதாரவி, அருண்விஜய், ஆனந்தராஜ், பிரசன்னா, பரத், மனோபாலா, இளவரசு,

மயில்சாமி, ரமேஷ் கண்ணா, கருணாஸ், ஆர்.பாண்டியராஜன், சூரி, பூச்சி முருகன், வெற்றி, மாரிமுத்து, ராஜேஷ், போஸ் வெங்கட், வையாபுரி, சாம்ஸ், சென்ராயன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் நடிகைகள் சினேகா, தேவதர்ஷினி, குட்டிபத்மினி, சந்தியா, சாந்தினி,

இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், வி.சேகர், சித்ரா லட்சுமணன், ஆர்.பாண்டிராஜ், மோகன்ராஜா, ஜெகன், பிரேம்குமார்,

தயாரிப்பாளர்கள் எடிட்டர் மோகன், டி.சிவா, தனஞ்செயன், அழகன் தமிழ்மணி, இசையமைப்பாளர் தேவா, பாடகர் மனோ, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தன், நக்கீரன் கோபால் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

விழாவுக்கு வந்தவர்களை எம்.எஸ்.பாஸ்கர், ஷீலா பாஸ்கர், என்.ஏ.சுதாகர், சீனா சுதாகர், ஆதித்யா பாஸ்கர், அக்சய் சுதாகர் ஆகியோர் வரவேற்றனர்.

வலிமை படத்தின் ஆக்ஷன் காட்சிகள் எங்கு படமாக உள்ளனர் தெரியுமா? வெளியான வலிமை படத்தின் புதிய அப்டேட்.!

வலிமை…

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய வெற்றியடைந்துள்ளது.

அதனை தொடர்ந்து தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வந்தார், இறுதிக்கட்ட காட்சிகளுடன் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.

இந்நிலையில் தற்போது வலிமை படத்தின் படக்குழுவினர் இப்படத்தின் மீதம் உள்ள ஆக்ஷன் காட்சிகளுக்காக ஸ்பெயின் நாடு செல்ல உள்ளனர். மேலும் அந்த ஆக்ஷன் காட்சிகளை அங்கு தான் படம்பிடிக்க வேண்டும் என வினோத் உறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

வரும் மே 1 ஆம் தேதி தல அஜித்தின் 50 வது பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தின் முதல் பார்வை வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கவர்ச்சி உடையில் அதகளம் பண்ணும் ப்ரியா பவானி ஷங்கர்..! – உருகும் ரசிகர்கள்..!

பிரியா பவானி ஷங்கர்…

சினிமா உலகில் நடிகர் நடிகைகளாக வருவதற்கு முன்பாக வேறு ஏதோ ஒரு வேலையை பார்த்து வருவது வழக்கம் அப்படி சினிமா வாடையே இல்லாமல் எங்கேயோ ஒரு மூலையில் செய்தி வாசிப்பாளராக தனது புதிய பயணத்தை தொடங்கினார் பிரியா பவானி ஷங்கர் அதன்பின்பு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதனை ஏற்று சீரியலில் தந்து சிறந்த பங்களிப்பை கொடுத்திரந்த இவருக்கு திடீரென மேயாத மான் என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அவருக்கே ஆச்சரியத்தை கொடுத்தாலும் அதனை ஏற்று அந்த திரைப்படத்தில் தனது சிறந்த பங்களிப்பை கொடுத்ததன் மூலம் முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை அழகாக கொள்ளையடித்தார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான பிரியா பவானி சங்கர், முதன்முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்கிறாராம். சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமான நடிகை பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன. நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது, அதர்வாவுடன் குருதி ஆட்டம், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை, ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓமணப்பெண்ணே போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யின் 33-வது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

என்னதான் கை நிறைய படங்கள், முன்னணி நடிகர்களின் படங்கள் என பிரியா நடித்து வந்தாலும் இதுவரை ஒரு துளி கவர்ச்சி கூட காட்டாமல் நடித்து தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை பெற்றுஇருந்தார். ஆனால், தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார்.

தளபதி 65 படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் செய்யவிருக்கும் ஸ்பெஷல் விஷயம், என்ன தெரியுமா?

சிவகார்த்திகேயன்….

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் பல தடைகளுடன் வெளியாகிய போதும் கூட பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது. மேலும் மாஸ்டர் ரூ.250 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்ததாக கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் சிவாகார்த்திகேயன் கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

35 வயதில் உயிர்விட்ட இளம் நடிகர்.. அதிர்ச்சியில் சினிமா பிரபலங்கள்!!

டி எஸ் மஞ்சுநாத்…

சினிமா பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதேபோல் சமீபத்தில் டாக்டர் விவேக் கொரோனா தடுப்பூசியை போட்டு மறு நாள் உயிரிழந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது.

அதேபோல் தற்போது கன்னட சினிமாவின் பிரபலமான டி எஸ் மஞ்சுநாத் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தயாரிப்பாளராக சினிமாவில் வாழ்க்கையைத் தொடங்கி பின் அவர் தயாரிக்கும் படங்களில் அவரே நடிகராகவும் நடித்து படங்களை வெளியிட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு இருப்பதாக பாசிட்டிவ் என்று தெரிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர் ரசிகர்கள் மட்டும் கன்னட சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருவதால் சினிமா துறை மீண்டும் மூடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாம்.

தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் சூட்டிங் நடக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட 200 பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை செய்து இருக்க வேண்டும். அது முடியாத காரணத்தினால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட உள்ளன.

தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை கட்டுப்படுத்தி மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் முயற்சிகளை செய்து வருகின்றது. இரண்டாவது அலை மிக மோசமாக இருப்பதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரித்து வருகின்றது மத்திய அரசு.

Enjaami பாடல் புகழ் தீ இந்த இசையமைப்பாளரின் மகளா? இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

பாடகி தீ…

சமீபத்தில் குக்கூ குக்கூ என்ற பாடல் செம வைரலானது அனைவருக்குமே தெரியும். இந்திய அளவில் ட்ரண்ட் ஆன அந்த பாடலில் நடித்திருந்தவர் தீ(Dhee). இவர் வெளிநாடுகளில் பட்டப்படிப்பை முடித்தவர்.

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் இவர் பாடிய காட்டுப்பயலே பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டார். ஆனால் அதுவரை ரசிகர்களுக்கு இவர் ஒரு வடமாநில பாடகி என்பது போன்ற பிம்பம் தான் ஏற்பட்டது.

தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தோஷ் நாராயணன் மகள் இந்த பிரபல பாடகி தீ என்பது பலருக்கும் தெரியாத செய்தி தான்.

சமீபத்தில் வெளியான என்ஜாய் எஞ்சாமி என்ற பாடலின் வெளியீட்டு விழாவில்தான் அவர் சந்தோஷ் நாராயணன் மகள் என்பதே பலருக்கும் தெரியும்.

கதைக்கு அதிக வலுவுள்ள திரைப்படங்களுக்கு பல இயக்குனர்களின் முதல் சாய்ஸாக இருக்கும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மட்டுமே. சமீபத்தில் வெளிவந்த கர்ணன் படமே அதற்கு பறைசாற்றும் விதமாக அமைந்தது.

அது மட்டுமில்லாமல் பல படங்களிலும் சந்தோஷ் நாராயணன் இசை வெகுவாக கவர்ந்தது. தற்போது தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர்.