இவங்க அப்பா-மகனா? அண்ணன் தம்பியா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

விக்ரம் – துருவ் விக்ரம்…

விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சீயான் 60’ திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் கடந்த 17ஆம் தேதி விக்ரம் அவர்களுக்கு பிறந்தநாள் வந்த நிலையில் விவேக்கின் மறைவு காரணமாக அவர் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. அவரது ரசிகர்களும் அன்றையதினம் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துவதில் பிசியாக இருந்ததால் விக்ரமின் பிறந்தநாளை கண்டுகொள்ளவில்லை

இந்த நிலையில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் தற்போது தாமதமாக தனது தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் இருவருமே இளைஞர்கள் போல் இருப்பதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இருவரும் அண்ணன் தம்பியா? என்ற கேள்வியை ஆச்சரியமாக எழுப்பி வருகின்றனர். துருவ் விக்ரம் பதிவு செய்துள்ள இந்த புகைப்படத்திற்கு 3 லட்சத்திற்கும் மேல் லைக்ஸ்கள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அச்சுஅசலாக பார்ப்பதற்கு அண்ணன் தம்பி போலவே இருக்கிறது என்றும் பலர் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருவது விக்ரம் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.

இந்த நிலையில் இருவரும் இணைந்து நடித்து வரும் கார்த்திக் சுப்புராஜ் படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Dhruv (@dhruv.vikram)

நடிகர் விஜய்யுடன் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்.?

நடிகர் விஜய்…

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.

நடிகர் விஜய்யையும், பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரையும் புதிய படமொன்றில் நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் படத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்தை இயக்க அட்லீ இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் தற்போது நெல்சன் இயக்கும் ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.

அதேபோன்று நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ஆர்.ஆர்.ஆர். படத்தில் நடிக்கிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தில், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரகனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இணையத்தை கலக்கும் நிவேதா தாமஸ்…! – வைரல் போட்டோஸ்..!

நிவேதா தாமஸ்…

தென்னிந்திய நடிகையான நிவேதா தாமஸ், தமிழில் கடைசியாக ரஜினி நடித்த தர்பார் படத்தில் நடித்திருந்தார்.மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த நடிகை நிவேதா தாமஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘நவீன சரஸ்வதி சபதம்’ படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்தார்.

அதனைத்தொடர்ந்து, விஜய்யின் ‘ஜில்லா’, ’த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கான கமல்ஹாசனின் ‘பாபநாசம்’, ரஜினியின் ‘தர்பார்’ படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். தற்போது, ‘பிங்க்’ தெலுங்கு ரீமேக்கான ‘வக்கீல் சாப்’ப்பில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தமிழில் ரஜினி, கமல் படங்களில் அவர்களுக்கு மகளாக நடித்த நிவேதா தாமஸ் சமீப காலமாக கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார்.தமிழில் விஜய்யுடன் குருவி, ஜில்லா படங்களில் நடித்தவர் நிவேதா தாமஸ். மேலும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் மகளாகவும், பாபநாசம் படத்தில் கமல்ஹாசன் மகளாகவும் நடித்திருந்தார்.

மலையாளம், தெலுங்கு படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். ஆரம்பத்தில் கவர்ச்சியே காட்டாத நடிகை நிவேதா தாமஸ் தற்போது நாளுக்கு நாள் கவர்ச்சியில் அவருடைய ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

ஆரம்ப காலங்களில் இழுத்துப் போத்தி கொண்டு நடித்துக் கொண்டிருந்த இவர் தற்போது நிவேதா தாமஸா இது என அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு கவர்ச்சியில் கலக்கி வருகிறார்.

இவர் பிரபலமான நடிகையாக வலம் வருவது மட்டுமல்லாமல் தற்போது கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ள நடிகையும் இவர்தான் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பட வாய்ப்புகளில் எல்லாம் தன்னுடைய ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தை படைத்து வருகிறார் நிவேதா தாமஸ்.நடிகை நிவேதா தாமஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வி. நானி வில்லனாக நடித்த இந்த திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியானது கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நிவேதா தாமஸ் படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.மேலும் அவர் படத்தில் வரும் சாதாரண காட்சிகளில் கூட தன்னுடைய உடலின் அங்கங்கள் தெரியும்படி உடை அணிந்து அவருடைய ரசிகர்களின் கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுக்கும் வகையில் கவர்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் அனிருத்?

அனிருத்…

கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், விரைவில் பாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது.

பின்னர் அடுத்ததடுத்த ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், டான் போன்ற படங்கள் உள்ளன.

இப்படி கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், விரைவில் பாலிவுட் படத்துக்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட்டில் தனுஷின் ராஞ்சனா, அத்ரங்கி ரே போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் எல் ராய், அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கர்ப்பமாக இருந்தபோது த.ற்.கொ.லை.க்.கு மு யன்றேன் – பிரபல நடிகை..!

சவுமியா சேத்…

க.ர்.ப்பமாக இருந்தபோது மன உ.ளை.ச்.ச.லா.ல் பல நாட்கள் சாப்பிடாமல் இருந்ததாக பிரபல நடிகை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். பராகான் இயக்கிய ஓம் சாந்தி ஓம் என்ற இந்திப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சவுமியா சேத்.

தொடர்ந்து படங்களில் நடித்த அவர் இந்தி சீரியல்களிலும் நடித்து இருக்கிறார். பின்னர் அருண் கபூர் என்பவரை திருமணம் செய்துக் கொ.ண்.டார். பின்னர் இருவருக்கும் க.ரு.த்.து வே.று.பா.டு ஏற்பட்டு வி.வா.க.ர.த்.து செ.ய்.து பி.ரி.ந்.த.னர்.

காதல், திருமண வாழ்க்கை குறித்து சவுமியா சேத் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது: “நான் கடந்த 2019-ம் ஆண்டு கணவரை வி.வா.க.ர.த்.து செ.ய்.தே.ன்.

தற்போது எனது குடும்பத்தினர் மற்றும் மூன்றரை வயது மகனுடன் அமெரிக்காவில் வசிக்கிறேன். ஏற்கனவே நான் க.ர்.ப்.ப.மாக இருந்தபோது ம.ன உ.ளை.ச்.ச.லா.ல் பல நாட்கள் சா.ப்.பி.டா.மல் இ.ரு.ந்தேன். எனது முகத்தை கண்ணாடியில் பார்க்கவே வெ.று.ப்.பாக இருந்தது.

த.ற்.கொ.லை செ.ய்.துக் கொ.ள்.ள மு.ய.ன்.றே.ன். ஆனால் எனது பெற்றோர் த.டு.த்துவி.ட்.டனர். எ.ன்.னுள் இருந்த த.ற்.கொ.லை உ.ண.ர்.வை.யும் மா.ற்.றி.னா.ர்கள். கு.ழ.ந்தைக்காக வாழ வேண்டும் என்ற எ.ண்.ணமும் உருவானது.

இந்தியாவுக்கு வர வேண்டும் என்ற ஆசை உள்ளது. இ.ரு.ப்பினும் கொ.ரோ.னா.வா.ல் வ.ர.மு.டி.யவில்லை. கா.த.லில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.

உச்சகட்ட கோபத்தில் பாபா பாஸ்கர், முக்கிய நிகழ்ச்சியில் சண்டையிட்டு கொண்ட குக் வித் கோமாளி பிரபலங்கள்..!

பாபா பாஸ்கர்…

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.

மேலும் கடைசியாக நடந்து முடிந்த குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவை பெற்று முடிவடைந்தது.

இதில் கனி குக் வித் கோமாளி சீசன் 2 டைட்டிலை தட்டி சென்றார். இந்நிலையில் விஜய் டிவி-யின் மற்றுமொரு முக்கிய நிகழ்ச்சி ஸ்டார்ட் மியூசிக் இதில் தற்போது குக் வித் கோமாளி பிரபலங்களான,

பாபா பாஸ்கர், அஸ்வின், கனி, வெங்கடேஷ் பட், ஷகீலா, மதுரை முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆம், கனி அசிங்கமாகிவிடும் என கூறியதால் பாபா பாஸ்கர் செம கோபமடைந்துள்ளார்.

இதோ அந்த பரபரப்பான ப்ரோமோ புகைப்படங்கள்.

அஜித்தின் ‘வலிமை’ படத்துக்கு வந்த புது சிக்கல்..!

வலிமை…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தில் நடிக்கிறார்.

அஜித் – எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். வில்லனாக கார்த்திகேயா நடிக்கிறார்.

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சியுள்ளது. அதனை ஸ்பெயின் நாட்டில் படமாக்க திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் தற்போது உலகமெங்கிலும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவிக் கொண்டிருப்பதால் ஸ்பெயினுக்கு சென்று படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைக்கவில்லையாம்.

இதனால் அந்த சண்டைக் காட்சியை இந்தியாவிலேயே படமாக்கலாமா? என்று வலிமை படக்குழு யோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் வலிமை படத்தின் ரிலீசும் தீபாவளிக்கு தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது.

கர்ணன் பட நடிகையின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

ரஜிஷா விஜயன்…

அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற கர்ணன் படத்தில் ரஜிஷா விஜயன் கதாநாயகியாக நடித்து இருந்தார்.

மலையாளத்தில் கடந்த 2016ல் வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற படத்தின் மூலம் அறிமுகமான ரஜிஷா விஜயன், தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்றார்.

இவர், அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற கர்ணன் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி மலையாளத்தில் அவர் நடிப்பில் உருவாகி இருந்த ‘கோ கோ’ படம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி திரையரங்குகளில் வெளியானது.

நல்ல வரவேற்பை பெற்றுவந்த இப்படம், தற்போது திரையரங்குகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக ரஜிஷா தெரிவித்துள்ளார்.

விரைவில் இப்படம் ஓடிடி-யில் வெளியிடப்படும் எனவும் அவர் கூறி உள்ளார். படக்குழுவின் இந்த முடிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தொகுப்பாளர் மாகாபா ஆனந்திற்கு 15வது திருமண நாள்- கேக் வெட்டி கொண்டாடிய பிரபலம்!!

மாகாபா ஆனந்த்…

பெண் தொகுப்பாளினி நிறைய பேர் இருக்கிறார்கள். தங்களது திறமையை காட்டி வெற்றியடைந்துள்ளனர்.

இப்போது தொகுப்பாளர்களில் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்று வருபவர் மாகாபா ஆனந்த். இவர் நிகழ்ச்சி எப்போதுமே படு கலகலப்பாக இருக்கும்.

விஜய் டெலி அவார்ட்ஸில் சிறந்த தொகுப்பாளருக்கான விருது பெற்றார். சூப்பர் சிங்கர், முரட்டு சிங்கிள்ஸ் என நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் அவர்,

விரைவில் Mr&Mrs சின்னத்திரை நிகழ்ச்சியை அர்ச்சனாவுடன் இணைந்து தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்த நிலையில் தொகுப்பாளர் மாகாபா தனது 15வது திருமண நாளை கேக் வெட்டி கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.

விஜய் 65 வது படத்தில் இணைந்தாரா நடிகர் சிவகார்த்திகேயன்.! சூப்பர் தகவல் இதோ.!

தளபதி 65…

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றிகளை கொடுத்து தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை படைத்துள்ளார் டாப் நடிகர் விஜய்.

இவரின் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து. தனது 65வது திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

முதல்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடத்தப்பட்ட இருந்த நிலையில் அதை தொடர்ந்து தற்போது அடுத்த கட்ட படபிடிப்பு ஜார்ஜியாவில் படக்குழு படத்தை எடுத்து வருகிறது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் அபர்ணா தாஸ் போன்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் இவரது இசையில் ஏற்கனவே மாஸ்டர் படம் வேற லெவல் ஹிட் அடித்ததால் தற்போது இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு வேற லெவல் எதிரி உள்ளது. இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா பணியாற்றுகிறார்.

மேலும் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி உள்ளார். இதன்மூலம் விஜய் படத்தில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் இணைகிறார். சிவகார்த்திகேயன் இதற்கு முன்பு டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற பல்வேறு படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.