கீர்த்தி சுரேஷ்க்கு என்னதான் ஆனது படபிடிப்பில் நடந்த அசம்பாவிதம்.!

கீர்த்தி சுரேஷ்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ்,மலையாளம், தெலுங்கு என்று தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

அந்தவகையில் இவர் அண்ணாத்த மற்றும் சாணி காகிதம் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் அண்ணாத்த திரைப்படத்தில் 8 பேருக்கு கொரோனா தோற்று உறுதியாகிருந்தது தற்போது தான் மீண்டும் அண்ணாத்த திரைப்படத்தின் ஷூட்டிங் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் தெலுங்கில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு சர்க்காரு வாரி பட்டார் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த தெலுங்கு திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இரண்டாவது கொரோனா அலை வேகமாக பரவுவதால் இத்திரைப்படத்தின் நடிக்கும் அனைவருக்கும் கோரானா பரிசோதனை எடுக்கப்பட்டு பிறகு படபிடிப்பின் செட்டிலேயே இருந்து வந்தார்கள்.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடித்து வரும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. எனவே படக்குழுவினர்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள் இந்நிலையில் இத்திரைப்படத்தின் சூட்டிங் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் கீர்த்தி ரேஷ்க்குஷுக்கு என்ன ஆச்சு பத்திரமா தான இருக்காங்க என்று சோஷியல் மீடியா மூலம் பல கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

மறைந்த நடிகர் விவேக் கடைசியாக நடித்த படத்தின் படப்பிடிப்பு இதுதானா?- வீடியோவுடன் இதோ!

நடிகர் விவேக்..

நடிகர் விவேக் சிரிப்பு, சிந்தனை, சமூக அக்கறை என இவர் பெயர் சொன்னதும் இதுபோன்ற விஷயங்கள் தான் முதலில் நியாபகம் வரும்.

எல்லோரும் விரும்பிய அப்துல் கலாம் அய்யாவின் கனவை நினைவாக்க அயராது உழைத்தார். 30 லட்சத்திற்கும் மேல் செடிகள் நட்ட விவேக்கிற்கு 1 கோடி வரை மரங்கள் வளர்க்க வேண்டும் என்பது ஆசை.

ஆனால் அது நடக்கவில்லை, அவர் மறைவால் தற்போது அவரது கனவை தங்களது கனவாக மக்கள் கொண்டுள்ளனர். பலர் விவேக் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மரக்கன்றுகள் நட்டு வருகிறார்கள்.

கமல்ஹாசன் அவர்களுடன் மட்டும் நடிக்கவில்லை என்கிற வருத்தம் அவருக்கு இருந்தது, ஆனால் அதுவும் இந்தியன் 2வில் நடக்க இருந்தது, அது முழுமை அடையாமலேயே விவேக் மறைந்துவிட்டார்.

தற்போது விவேக் அவர்கள் கடைசியாக கலந்துகொண்ட படப்பிடிப்பின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அவரது கடைசி வீடியோ,

பிக் பாஸ் நடிகரின் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் – யாருடைய படத்தில் தெரியுமா?

சிவகார்த்திகேயன்….

தமிழ் திரையுலகில் தற்போது ரஜினி, கமல், அஜித், விஜய் வரிசையில் இடம்பிடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் தற்போது டாக்டர் எனும் திரைப்படம் உருவாகி வெளியாக காத்துருக்கிறது. மேலும் அயலான், டான் எனும் இரு படங்கள் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

தமிழ் சின்னத்திரையில் தற்போது நம்பர் 1 நிகழ்ச்சியாக விளங்கி வருவது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ்.

இதிலிருந்து பல பிரபலங்கள் தற்போது தமிழ் திரையுலகில் படங்கள் நடித்து வருகின்றனர். அதில் பிக் பாஸ் சீசன் 3 மூலம் பிரபலமாகி திரைப்படங்கள் நடித்து வருபவர் நடிகர் கவின்.

இந்நிலையில் கவின் நடித்துள்ள லிப்ட் எனும் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவல் இருவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சப்ரைசாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜா ராணி 2 சீரியல் நாயகன் சித்துவிற்கு திருமணம் எப்போது தெரியுமா?

சித்து..

விஜய் தொலைக்காட்சியில் அண்மையில் தொடங்கப்பட்ட ஒரு புது சீரியல் என்றால் அது ராஜா ராணி 2 தான். Diya Aur Baati Hum என்கிற ஹிந்தி சீரியலின் ரீமேக் இது.

இதில் நாயகனாக திருமணம் சீரியல் மூலம் பிரபலமான சித்து என்பவரை முக்கிய நாயகனாக நடித்து வருகிறார்.

அவருக்கு ஜோடியாக எல்லோருக்கும் பரீட்சயப்பட்ட ஆல்யா மானசா நாயகியாக நடித்து வருகிறார்.

அண்மையில் நடந்த விஜய் டெலி விருதில் சித்து அறிமுகமாக நாயகன் என்கிற விருதும், ஆல்யாவிற்கு சிறந்த மறுமகள் என்கிற விருதும் கிடைத்தது.

சித்து திருமணம் சீரியலில் தன்னுடன் நடித்த ஸ்ரேயா என்பவரை காதலிப்பது எல்லோருக்கும் தெரியும்.

இவர்களது திருமணம் எப்போது என்று கேட்டால் சித்து, திருமணம் பொறுமையாக செய்து கொள்கிறோம், நாங்கள் இன்னும் கொஞ்சம் காதலித்து கொள்கிறோம் என கூறியுள்ளார்.

கனி வீட்டுக்கு சென்று ‘காரக்குழம்பு’ சாம்பிட்ட சிம்பு: வைரல் புகைப்படம்!!

சிம்பு…

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான கனியின் வீட்டுக்கு சிம்பு, ரக்‌ஷன் மற்றும் மகத் சென்று கார குழம்பு சாப்பிட்டதன் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

கடந்த சில மாதங்களாக விஜய் டிவியில் ’குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகியது. இந்த நிகழ்ச்சிக்கு லட்சக்கணக்கானோர் ரசிகர்கள் ஆக மாறினார் என்பதும்,

சமையல் நிகழ்ச்சி என்பதையும் தாண்டி இந்த நிகழ்ச்சியில் இருந்த நகைச்சுவை அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ‘குக்’களும் கோமாளிகளும் நான்ஸ்டாப் காமெடி செய்தனர் என்பதே இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம்

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் கனி டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார் என்பது தெரிந்தது.

அவருக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேயின்போது சிறப்பு விருந்தினராக சிம்பு வந்து இருந்தார் என்பதும் அப்போது கனியிடம் உங்கள் கார குழம்பை சாப்பிட நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்று கூறியதும் தெரிந்தது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சிம்பு, மகத் மற்றும் ரக்‌ஷன் ஆகிய மூவரும் கனியின் வீட்டிற்கு சென்று அவருடைய காரக்குழம்பை ரசித்து சாப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து கனியின் கணவர் இயக்குனர் திரு தனது டுவிட்டரில் ’சிம்பு, மகத் மற்றும் ரக்‌ஷன் ஆகிய மூவரும் தங்களுடைய வீட்டுக்கு வருகை தந்தமைக்கு நன்றி என்றும் அவர்களது வருகை மிகுந்த ஆச்சரியம் அளித்தது என்றும் கனியின் காரக்குழம்பை அவர்கள் சாப்பிட்டு ரசித்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இனி எனக்கு யார் இருக்கா..முதன் முறையாக தன் சோகத்தை வெளிப்படுத்திய செல் முருகன்!!

செல் முருகன்….

இனி எனக்கு யார் இருக்கா.முதன் முறையாக தன் சோகத்தை வெளிப்படுத்திய செல் முருகன்.

அஜித்தின் வலிமை பட கதையே இதுதானா, முக்கியமான இடத்தில் பதிவு செய்துள்ள தகவல்!!

வலிமை…

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் முதன்முதலாக நடித்த திரைப்படம் நேர்கொண்ட பார்வை. போனி கபூர் தயாரித்த இப்படம் ஹிந்தியில் வெற்றியடைந்த பிங்க் என்கிற படத்தின் ரீமேக்.

இப்படத்தை தொடர்ந்து அஜித் தனது அடுத்த பட வாய்ப்பையும் வினோத்திற்கே கொடுத்துவிட்டார். தற்போது வலிமை என்கிற பெயரில் படம் உருவாகி வருகிறது.

வேகமாக தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்குள் ஏகப்பட்ட கொரோனா பிரச்சனை. தற்போது ஒருவழியாக படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடக்கின்றன.

அஜித்தும் டப்பிங் வேலையை முடித்துவிட்டார் என்கின்றனர். தற்போது என்ன தகவல் என்றால் இப்படம் இளம் வயதில் அஜித் பைக் ரேஸ் வீரராக இருப்பதாகவும்,

அப்போது சிலரின் சதியால் அதை விட்டு விலகி பின்னர் போலீஸாக மாறி அவர்களை பழிவாங்குவது போன்ற கதை என IMBD பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்,

மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் தொடங்கியது Mr & Mrs சின்னத்திரை- யாரெல்லாம் உள்ளார் தெரியுமா?

Mr & Mrs சின்னத்திரை…

விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் நிகழ்ச்சிகள் உள்ளது. அதில் ஒன்று தான் Mr & Mrs சின்னத்திரை.

இதில் பிரபலங்கள் தங்களது நிஜ ஜோடிகளுடன் கலந்துகொண்டு கலக்குவார்கள். நிகழ்ச்சி ஆரம்பம் முதல் இறுதி வரை மிகவும் கலகலப்பாக இருக்கும்.

கொடுக்கப்படும் டாஸ்க், அதில் கலாட்டா செய்யும் பிரபலங்கள் என நிறைய ஜாலியாக இருக்கும்.

இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் தொடங்கிவிட்டது, இந்த முறை மாகாபா ஆனந்துடன் இணைந்து அர்ச்சனாவும் தொகுத்து வழங்க இருக்கிறார.

நிகழ்ச்சியின் புரொமோ அண்மையில் வெளியாகியுள்ளது. அதில் ரசிகர்களுக்கு பிறகு நிறைய பிரபலங்கள் இருக்கிறார்கள்.

நடிகை சமந்தாவின் லேட்டஸ் லுக்… இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை சமந்தா…

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து “காத்து வாக்குல ரெண்டு காதல்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்தத் திரைப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க இருக்கிறார். இதனால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் அதிக எதிர்ப்பார்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாவில் லேட்டஸ் போட்டோ ஷுட் புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு இருக்கிறார்.

அதுவும் இளம் மஞ்சள் கலந்த பச்சைநிற உடை அணிந்து கொண்டு இருக்கும் நடிகை சமந்தா கொடுக்கும் கேஷுவல் லுக்கிற்கு நெட்டிசன்கள் பலரும் லைக்குகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.

16 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட நடிகை சமந்தா தொடர்ந்து தனது இன்ஸ்டாவில் வொர்க் அவுட் புகைப்படங்கள் மற்றும் யோகா புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதோடு பேஷன் உடையணிந்த புகைப்படங்களையும் இவர் பதிவிட்டு வருகிறார்.

இவை அனைத்திற்கும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் மஞ்சள் உடையணிந்த நடிகை சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

பல மாதங்களுக்கு பிறகு ஒன்றான பாரதி-கண்ணம்மா- சீரியல் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அழகிய புகைப்படம்!!

பாரதி கண்ணம்மா…

விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக விருது விழா நடந்தது.

மக்கள் கொண்டாடும் அளவிற்கு நிறைய கொண்டாட்டமான விஷயங்கள் எல்லாம் நடந்தது. அதில் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த பல பிரபலங்களுக்கு விருதுகள் கிடைத்தது.

இந்த தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியல் பிரபலங்களுக்கும் நிறைய விருதுகள் கிடைத்தது.

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள் தங்களது விருதுகளோடு புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அதேபோல் பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சீரியல் லுக்கில் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு அவர்கள் ஒன்றாக இணைந்து எடுத்த இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.