டபுள் ஹீரோ படத்துக்கு ஓகேதான், ஆனால் ஒரு கண்டிஷன்.. இயக்குனர்களுக்கு செக் வைக்கும் விக்ரம்!!

சீயான் விக்ரம்…

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சீயான் விக்ரம் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் டபுள் ஹீரோ படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகிறார். ஆனாலும் அது ஒரு கண்டிஷன் வைத்துள்ளார் என்பது தான் முக்கியமான விஷயம்.

சேது படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் திரும்பிப் பார்க்க வைத்தவர் சீயான் விக்ரம். கிளாஸ் ஹீரோவாக வந்து பின்னர் மாஸ் ஹீரோவாக சாமி என்ற படத்தின் மூலம் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த விக்ரமுக்கு சமீபகாலமாக அவருடைய திரை வாழ்க்கை அவ்வளவு திருப்திகரமாக இல்லை என்பது அவரது வட்டாரங்களில் இருந்து வந்த செய்தி.

கடைசியாக விக்ரம் நடித்த சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்ததால் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார். இதன் காரணமாக எப்படியாவது வெற்றி படத்தை கொடுத்து இழந்த தன் மார்க்கெட்டை மீட்டுவிட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

அந்த வகையில் சீயான் 60, கோப்ரா, துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் தொடர் வெற்றிப் படங்களாக அமையும் என்கிறார்கள் விக்ரம் வட்டாரங்கள். விக்ரம் எப்போதுமே டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் நடிக்க விருப்பம் தெரிவித்தார்.

ஆனால் அதில் ஒரு கண்டிஷன் வைத்துள்ளாராம். அதாவது ஒருவருக்கு அதிக அளவில் முக்கியத்துவமும், இன்னொருவருக்கு ஏனோதானோ என கதை எழுதுவதும் இருக்கக் கூடாது. இருவருக்கும் சரிசமமான கதாபாத்திரம் அமைந்தால் கண்டிப்பாக நடிக்க தயார் எனவும் கூறி வருகிறாராம்.

உச்சத்தில் இருக்கும் நடிகர் சிங்கிள் ஹீரோவாக தான் நடிப்பேன் என அடம் பிடிக்காமல் சில கண்டிஷன்களுடன் டபுள் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்க முன் வந்திருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

டாக்டர் சோலோ ரிலீசுக்கு ஆசைப்பட்ட சிவகார்த்திகேயன்.. குறுக்கே கட்டையை போட்ட பிரபல நடிகர்.. ஏன் சார் இப்படி!

சிவகார்த்திகேயன்..

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் டாக்டர் திரைப்படம் மார்ச் 23-ம் தேதி வெளியாக இருந்த நிலையில் திடீரென படத்தின் ரிலீஸ் தேதியில் குளறுபடி ஏற்பட்டு ரம்ஜான் விடுமுறையை நோக்கி மாற்றி வைக்கப்பட்டது.

சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் டாக்டர். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு பிரியங்கா மோகன் என்பவர் அறிமுகமாக உள்ளார்.

தமிழுக்கு வரும் முன்னரே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகி உள்ள நிலையில் அடுத்தடுத்து சிவகார்த்திகேயனுடன் டாக்டர் மற்றும் டான் போன்ற படங்களில் பணியாற்றி வருகிறார். சிவகார்த்திகேயன் ராசிக்கு கீர்த்தி சுரேஷுக்கு எப்படி இருந்ததோ அதேபோல் தனக்கும் இருக்கும் என நம்புகிறாராம் பிரியங்கா.

இது ஒருபுறமிருக்க டாக்டர் படத்தின் ரிலிஸில் தற்போது பல குளறுபடிகள் நிகழ்ந்து வருவதாக கூறுகின்றனர். ரம்ஜான் விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே திரையரங்களில் அனுமதிக்கப்படுவதால் தியேட்டரில் வருமா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

அப்படியே வந்தாலும் சோலோவாக வந்தால் தப்பித்துக் கொள்ளலாம் என நினைத்த நிலையில் டாக்டர் படத்திற்கு ஆப்பு வைக்கும் விதமாக விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் கோடியில் ஒருவன் படமும் அதே தேதியில் வெளியாக உள்ளதாம்.

விஜய் ஆண்டனியின் படங்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. பிச்சைக்காரன் படத்திற்கு பிறகு குடும்ப ரசிகர்களை தனதாக்கிக் கொண்ட விஜய் ஆண்டனியின் படமும் சிவகார்த்திகேயன் படமும் ஒரே நாளில் வெளியாவதால் வசூலில் கண்டிப்பாக சொதப்பும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை மிஸ் செய்த இளம் நடிகர்.. படம் ஹிட்டானதும் வாழ்க்கையையே வெறுத்து விட்டாராம்..!

வருத்தப்படாத வாலிபர் சங்கம்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியைப் பற்றி சொல்லி தெரிய வேண்டுமா என்ன. சிவகார்த்திகேயனை ஸ்டார் ஆக்கிய திரைப்படம் அது.

ஆரம்பம் முதல் கடைசி வரை சிவகார்த்திகேயன் புகுந்து விளையாடியிருப்பார். சிவகார்த்திகேயனை பிடிக்காதவர்களுக்கு கூட வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் ஃபேவரைட் படமாக அமைந்தது தான் படத்தின் வெற்றி.

அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனை வசூல் நடிகராக மாற்றியதும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம்தான். மேலும் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கூட்டணியில் காமெடி காட்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

போதாக்குறைக்கு வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் இயக்குனர் ராஜேஷ் எழுதிய வசனங்கள் ஒவ்வொன்றும் முத்து முத்தாக அமைந்தது படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது. இன்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் டயலாக்குகள் பேசப்படாத இடமே கிடையாது.

அந்தளவுக்கு வரவேற்பைப் பெற்ற வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கதையை இயக்குனர் பொன்ராம் முதன்முதலில் நடிகர் ஜெய்யிடம்தான் கூறினாராம். ஆனால் அந்த படத்தில் ஜெய் நடிக்க மறுத்து விட்டாராம்.

அதற்கு காரணம் முதலில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி சீரியஸான காட்சியாக அமைக்கப்பட்டதாம். ஆனால் சிவகார்த்திகேயன் ஹீரோ என்று முடிவு செய்த உடன் கண்டிப்பாக சீரியஸ் காட்சிகள் வேலைக்கு ஆகாது என கிளைமாக்சை மாற்றியதாக பொன்ராம் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

இனிமேல் பெரிய நடிகரை வைத்து படமே கிடையாது.. பிகில் படத்தால் நொந்துபோன ஏஜிஎஸ் நிறுவனம்..!

ஏஜிஎஸ் நிறுவனம்…

மினிமம் பட்ஜெட்டில் படம் தயாரித்து நல்ல லாபம் பார்த்துக் கொண்டிருந்த ஏஜிஎஸ் நிறுவனம் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை ஒரே ஒரு பெரிய படத்தை எடுத்து வீணாய் போய் விட்டதாம்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியாகும் அனைத்து படங்களுமே தரமாக இருக்கும் என்ற எண்ணம் மக்கள் மனதில் உண்டு. அந்த அளவுக்கு உண்மையாலுமே தரமான படங்களை கொடுத்துள்ளனர்.

பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ என்பதெல்லாம் இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்களை எடுத்து வந்தனர். அவர்கள் முதன் முதலில் மிகப்பெரிய பட்ஜெட் போட்டு எடுத்த படம் பிகில் தான்.

ஏஜிஎஸ் நிறுவனம் விஜய்யை வைத்து படம் தயாரிக்க முடிவு செய்ததில் தவறில்லை. ஆனால் இயக்குனராக அட்லீயை தேர்வு செய்தது தான் அவர்களுக்கு ஆபத்தாக முடிந்துள்ளது. அட்லீயை பற்றி ஆரம்பத்திலிருந்தே குறித்த பட்ஜெட்டில் படம் செய்ய மாட்டார் என்ற தகவல் கோலிவுட் வட்டாரங்களில் அதிகமாக பரவி வந்தது.

ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விஜய் சொல்லிவிட்டார் என்பதற்காக அட்லீயை உள்ளே இழுத்து தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டது ஏஜிஎஸ் நிறுவனம். உண்மையாலுமே பிகில் படத்தை வாங்கி விநியோகம் செய்து அனைவருக்குமே பெரிய லாபம் கிடைத்துள்ளது. ஆனால் அட்லீயால் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஏகப்பட்ட நஷ்டம் என்பதை வெளியில் சொல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.

இதன் காரணமாக இன்னும் சில வருடங்களுக்கு பெரிய நடிகர்களின் படங்களை தயாரிக்காமல், கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து சின்ன சின்ன பட்ஜெட்டில் படங்களை தயாரிக்கலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

மச்சான் தயவில் மலையேற போகும் புகழ்.. குக் வித் கோமாளி கூட்டணியில் உருவாகும் புதிய படம், அஷ்வின் வீடியோ!

புகழ்…

விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளியின் மூலம் அஸ்வின் நடிகராகும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

இந்த புதிய படத்தில் அஸ்வினுடன் இணைந்து புகழ் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

ஆடை மாற்றும் போட்டி.. தெறி மாஸ்ஸாக வீடியோ வெளியிட்ட 8 பிரபல நடிகைகள்..!

நடிகைகள்…

நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டு ஆடை மாற்றுவது போன்ற வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் முக்கியமாக கீர்த்தி சுரேஷ், சமந்தா, ஷெரின், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே, தமன்னா போன்ற முன்னணி நடிகைகள் இடம் பிடித்துள்ளனர்.

பிக்பாஸ் ரைசாவா இது? பியூட்டி பார்லரால் அலங்கோலமாக மாறிய முகம்!

நடிகை ரைசா…

சமீபத்தில் பியூட்டி பார்லர் சென்று பேஷியல் பண்ணதால் தன்னுடைய முகம் அலங்கோலமாக மாறியிருப்பதை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார் நடிகை ரைசா.

பிரபல ரிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. என்னதான் நான்கு சீசன்களை கடந்தாலும் ரசிகர்களுக்கு பிடித்தமான சீசன் என்றால் அது முதல் சீசன் தான்.

இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலரும் தமிழ் சினிமாவில் நடிகர்- நடிகைகளாக வாய்ப்புகளை பெற்றார்கள், அதில் நடிகை ரைசாவும் ஒருவர்.

இந்நிலையில் நடிகை ரைசா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் ரைசாவின் கண்களுக்கு கீழ் வீக்கம் இருப்பதை கண்டு பலரும் ஷாக் ஆனார்கள்.

இதுகுறித்து தெரிவித்துள்ள ரைசா, சமீபத்தில் சாதாரண பேஷியல் போடுவதற்காக பைரவி செந்தில் என்பவரை சந்தித்ததாகவும், அப்போது அவர் தான் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் எனக்கு தேவையில்லாத விஷயங்களை செய்ததால் இப்படி ஆகிவிட்டது எனக்கூறி புலம்பியுள்ளார்.

இதன்பின்னர் தான் அவரிடம் பேச நினைத்தால், சந்திக்க மறுப்பதாகவும், ஊழியர்களிடம் கேட்டால் கூட அவர் வெளியூரில் இருக்கிறார் என்று சொல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பதிவிட்ட சில மணி நேரம் கழித்து மற்றொரு வீடியோவில் நடிகை ரைசாவின் காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துள்ளதை காண முடிகிறது.

கமல் ஹாசனுக்கு விஜய் சேதுபதி வில்லனா? அவரே கூறிய தகவல்..!

விஜய் சேதுபதி…

மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி அதன்பின் கைதி, மாஸ்டர் என இரு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

இவர் இயக்கத்தில் தற்போது கமல் ஹாசன் நடிக்க விக்ரம் எனும் படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் கமல் ஹாசனுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் விஜய் சேதுபதி செய்தியாளர்களை சமீபத்தில் சந்தித்தார்.

அப்போது ‘விக்ரம்’ படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி, ” இந்த படத்தில் வில்லனாக நடிக்க என்னை அணுகினார்கள் என்றார்.

ஆனால் ‘விக்ரம்’ படத்தில் நடிக்கிறேனா என்பதை வெளிப்படையாக சொல்ல முடியாது. பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. உறுதியானால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் ” என கூறியுள்ளாராம்.

“ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..” – VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் – குழம்பிய ரசிகர்கள்..!

மகேஸ்வரி …

அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆன மகேஸ்வரி தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தமிழ் சினிமா ரசிகர்களிடையே பேமஸ் ஆனார்.

இதையடுத்து படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் தேடி வர அதை சரியான சமயத்தில் பயன்படுத்திக்கொண்டார். சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து தனது வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்தார்.

இதையடுத்து திருமணம் செய்துகொண்டு ஒரு மகனையும் பெற்றெடுத்தார். இருந்தும் தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் சமீப நாட்களாக இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் வித விதமான போட்டோ ஷூட் நடத்தி ட்ரெண்டாகி வருகிறார்.

33 வயதாகும் மகேஸ்வரியின் கவர்ச்சியை ரசிப்பதற்கென்றே தனி கூட்டம் உருவாகி விட்டது. தன் ரசிகர்களை திருப்தி படுத்த தற்போது கருப்பு வெள்ளை கவர்ச்சியில் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி. சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி.

சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது ஸ்ட்ரெய்ட்டன் செய்த முடியுடன் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ட்ரான்ஸ் படத்துல வரும் நஸ்ரியா-ன்னு நெனசிட்டோம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

விஜய்யை தொடர்ந்து முன்னணி நடிகருக்கு ஜோடியான நடிகை பூஜா ஹேக் டே – யார் தெரியுமா?

பூஜா ஹேக்டே…

நெல்சன் திலீப்புகுமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் தளபதி 65. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருபவர் தான் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை பூஜா ஹேக் டே.

இவர் தெலுங்கில் வெளியான பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஆனால் தமிழில் வெளியான முகமூடி படம் தான் இவருக்கு அறிமுக திரைப்படம்.

இந்நிலையில் தளபதி 65 படத்தை தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளாராம் நடிகை பூஜா ஹேக் டே.

ஆம் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் கிராமத்து கதைக்களம் கொண்ட படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹேக் டே நடிக்க பெரிதும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது என்று..