மிரட்டல் எஸ் ஜே சூர்யா, கலக்கல் நந்திதா, மாஸ்டர் பீஸ் செல்வராகவன்.. நெஞ்சம் மறப்பதில்லை விமர்சனம்..!

நெஞ்சம் மறப்பதில்லை…

கிட்டத்தட்ட 4 வருட காத்திருப்புக்குப் பிறகு செல்வராகவன் ரசிகர்களுக்கு ஃபுல் ட்ரீட்டாக வந்துள்ளது நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம். இதுவரை வந்த செல்வராகவன் படங்களில் இது தான் மாஸ்டர்பீஸ் எனும் அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

எஸ் ஜே சூர்யா, நந்திதா, ரெஜினா கெஸன்ட்ரா ஆகியோர் நடிப்பில் மிரட்டலாக வெளிவந்திருக்கும் திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. திரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படம் கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக பைனான்ஸ் பிரச்சனையில் மாட்டி சிக்கியது.

தற்போது ஒருவழியாக அதிலிருந்து மீண்டு இன்று வெளியாகியுள்ளது. நெஞ்சம் மறப்பதில்லை படம் வெளியாகப் போகிறது என்று அறிந்த உடனேயே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இரட்டிப்பானது.

இடையில் கூட படம் வெளிவருமா? வராதா? என்ற சிக்கல்களை சந்தித்து தற்போது ஒரு வழியாக திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாகிவிட்டது.

மேலும் ரசிகர்களும் முன்னணி நடிகர்களின் படங்களை போல கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு செல்ல ஆரம்பித்தனர். நீண்ட நாட்களுக்கு பிறகு திரையரங்கு உரிமையாளர்கள் முகத்தில் சந்தோஷத்தை பார்க்க முடிகிறது என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

இதுவரை படம் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் செல்வராகவன் படத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.

எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும், நந்திதா ஸ்வேதாவுக்கு அழுத்தமான வேடம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ரெஜினா கெஸன்ட்ரா படத்தின் தூணாக உள்ளார் எனவும் ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இப்போதைக்கு வலிமை அப்டேட் இல்லைனா என்ன, செம தெறி மாஸ் தகவல் இருக்கே- தல ரசிகர்களே இது தெரியுமா?

அஜித்…

அஜித் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாகவே வலிமை படத்தின் அப்டேட் கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் படக்குழுவோ விரைவில் என்கிறார்களே தவிர எப்போது என்று கூறவில்லை.

படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் போடும் அளவிற்கு ஒரு தகவல் வந்துள்ளது.

அது என்னவென்றால் வரும் மார்ச் 12ம் தேதி அஜித்தின் பில்லா திரைப்படத்தை ராக்கி சினிமாஸ் திரையிட இருக்கிறார்களாம்.

தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லன் விஜய் தானா?

தளபதி 65…

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை தொடர்ந்து உருவாகவுள்ள படம் தளபதி 65.

விஜய் நடிப்பில் உருவாகவுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹேக் டே கமிட்டாகியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் வில்லனாக நடிக்க அருண் விஜய் தேர்ந்தெடுத்துள்ளனர் என ஏற்கனவே கிசுகிசுக்கப்பட்டது.

அதனை உறுதி செய்யும் விதத்தில், அருண் விஜய்யின் அடுத்தடுத்த படங்களின், விக்கிபீடியா பட்டியலில் தளபதி 65 படமும் சேர்ந்துள்ளது.

இதனால் தளபதி 65 படத்தில் விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் தான் நடிக்க இருக்கிறார் என்று பெரிதும் கூறப்படுகிறது.

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களை வெளுத்து வாங்கிய சமுத்திரகனி.. உங்களையெல்லாம் திருத்த முடியாது!

சமுத்திரக்கனி…

அனுதினமும் நடக்கும் நிகழ்வுகளை மீம்ஸ் கிரியேட்டர்கள் தங்களது விமர்சனம் மூலம் மீமில் இருப்பவர்களை தூக்கி பேசுவார்கள் அல்லது சங்கடப் படுத்தவும் செய்வார்கள். அந்த வகையில் தற்போது சிக்கிக் கொண்டவர் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி.

ஏனென்றால் நாவலைத் தழுவி, நெசவுத் தொழிலை மையப்படுத்தி, வெற்றிமாறன் இயக்கிய சமுத்திரக்கனி நடித்த ‘சங்கத்தலைவன்’ படம் சென்ற வாரம் ரிலீஸானது. பொதுவாக சமுத்திரக்கனியின் படங்கள் எல்லாம் நீண்ட வசனங்கள் உடன் கூடிய கருத்துக்கள் பொதிந்த பிரச்சார படமாகவே இருக்கும்.

ஆகையால் இதைக் குறிவைத்து மீம்ஸ் நாயகர்கள் சமுத்திரக்கனிக்கு எதிராக எக்கச்சக்கமான மீம்ஸ்களை உருவாக்கி, அதை தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சமுத்திரக்கனி பேட்டி ஒன்றின் மூலம் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.

அதில் சமுத்திரக்கனி, ‘படங்களில் கருத்து கூறுவது அட்வைஸ் கிடையாது. ஒரு அக்கறைதான் நடிக்கிறேன் என்பது அர்த்தம். எங்கேயும் ஒருத்தன் நான் கூறும் கருத்துக்களை முனைப்புடன் ஏற்கத் தயாராக இருப்பவனுக்கு கூறுகிறேன் என்று நினைத்துக் கொள்கிறேன்.

மீம்ஸ் போடுரவனுக்கு நான் சொல்லலை. என்னுடைய கருத்துக்களை ஏற்க வேண்டாம். நான் என்னை நேசிக்கின்ற ரசிகர்களுக்காக கருத்து சொல்லிக் கொண்டே இருப்பேன். இப்படி போன்ற படங்களை எல்லாம் எடுத்து நான் கோடிகோடியாக சம்பாதிக்க நினைக்கவில்லை.

இதனால் எனக்கு நஷ்டம் தான், ஆனால் அதை நான் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறேன். ஏனென்றால் இவ்வளவு எல்லாம் எனக்கு கொடுத்த சமூகத்திற்கு நான் ஓடி ஓடி சம்பாதித்து நல்ல படைப்பை கொடுத்திருக்கிறேன்’ என்ற மனத் திருப்தி கிடைக்கும். என்றாவது ஒரு நாள் திருந்துவாய் மாறுவாய் என்ற நம்பிக்கையில் அன்று வரை காத்திருக்கிறேன்’ என்று அந்தப் பேட்டியில் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களை வறுத்து எடுத்துள்ளார் சமுத்திரக்கனி.

தனுஷ் மீது அதிருப்தியில் கார்த்திக் சுப்புராஜ்.. பத்து பைசாவுக்கு கூட மதிக்கல என புலம்பல்!!

கார்த்திக் சுப்பராஜ்…

தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தால் இருவருக்குள்ளும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறுகின்றனர். இதன் காரணமாக தனுஷ் நடவடிக்கைகள் எதுவுமே கார்த்திக் சுப்புராஜுக்கு திருப்தியளிக்கும் வகையில் இல்லையாம்.

மாஸ்டர் பட வெளியீட்டின்போது தனுஷ் ஜகமே தந்திரம் படமும் இதே போல் தியேட்டர்களில் கொண்டாடப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் ஜகமே தந்திரம் படத்தின் தயாரிப்பாளர் ஒய் நாட் ஸ்டூடியோஸ் சசிகாந்த் நெட்பிளிக்ஸ் தளத்தில் விலை பேசி முடித்துவிட்டார்.

இது தனுஷுக்கே தெரியாதாம். இதைக் கேள்விப்பட்ட தனுஷ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தின் மூலமாக ஜகமே தந்திரம் படத்தின் மீது அதிருப்தியில் இருப்பதை வெளிக்காட்டினார். இதன் காரணமாக தற்போது வரை ஜகமே தந்திரம் படத்தின் டீசரை தனுஷ் பகிர்ந்து கொள்ளவில்லை.

தனுஷ் மற்றும் தயாரிப்பாளருக்கு இடையே உள்ள பஞ்சாயத்தால் தனுஷ் நடந்து கொள்ளும் விதம் கார்த்திக் சுப்புராஜுக்கு திருப்தி அளிக்கவில்லையாம். என்னதான் சண்டையாக இருந்தாலும் ஜகமே தந்திரம் படத்தின் டீசரை கூட பகிர்ந்து கொள்ளவில்லையே என வருத்தப்படுகிறாராம்.

மேலும் தனுஷ் தியேட்டரில் வெளியாகும் கர்ணன் படத்திற்கு நாளுக்கு நாள் அப்டேட் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில் ஜகமே தந்திரம் படத்தை பத்து பைசாவுக்கு கூட மதிக்கவில்லை என தன்னுடைய நண்பர்கள் வட்டாரத்தில் புலம்பித் தள்ளுகிறாராம்.

மேலும் தனுஷ் இப்படி செய்வார் என எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இருந்தாலும் முதலில் கர்ணன் படம் தான் ரிலீஸ் என்பதால் அதில் கவனம் செலுத்துவதாக தனுஷ் வட்டாரங்களிலிருந்து கார்த்திக் சுப்புராஜுக்கு செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதனால் ஜகமே தந்திரம் ரிலீஸின்போது கண்டிப்பாக தனுஷ் உதவி செய்வார் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ்.

ஹாலிவுட் படத்திற்காக நடிகர் தனுஷின் புதிய கெட்டப், வெளியான புதிய புகைப்படம்..!

நடிகர் தனுஷ்…

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகராகவும் விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம், பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து நடிகர் தனுஷ் தற்போது ஹாலிவுட் படத்தின் ஷூட்டிற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது அவர் நடிக்கும் ஹாலிவுட் திரைப்படமான The Grayman படத்திலிருந்து அவரின் புதிய கெட்டப் புகைப்படம் வெளியாகியுள்ளது

நடிகர் கார்த்திக்காக சிம்பு செய்துள்ள சூப்பர் விஷயம்..! கொண்டாட்டத்தில் இரு தரப்பு ரசிகர்கள்..!!

கார்த்தி-சிம்பு…

நடிகர் கார்த்தி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர், இவர் தொடர்ந்து மிக சிறந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி திரைப்படம் மிக பெரிய வெற்றியடைந்தது.

இந்நிலையில் தற்போது அவர் நடிப்பில் இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் சுல்தான். இப்படத்தின் டீஸர் மற்றும் பாடல் வெளியாகி ட்ரெண்டானது.

இதனிடையே இப்படத்தில் இருந்து இன்று வெளியாகவுள்ள “யாரையும் எவ்வளவு அழகா பார்க்கல” என்ற பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதியின்’’ யாதும் ஊரே யாவரும் கேளீர்’’ பட டீசர் ரிலீஸ் !

யாதும் ஊரே யாவரும் கேளீர்…

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள யாதும் ஊரே யாவரும் கேளீர் படத்தின் டீசர் ரிலீசாகியுள்ளது.

இனிமேல் என் படத்தில் இந்த வி.ஷ.யம் இருக்கக் கூடாது.. இ.ய.க்குனர்களுக்கு க.ட்.டளையிட்ட ர.ஜி.னி.!!

ரஜினி…..

அ.ர.சியல் மற்றும் உ.ட.ல்.நி.லை ச.ர்.ச்.சைக்கு பிறகு தற்போது ரஜினிகாந்த் அடுத்தடுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க முடிவு செ.ய்.து.ள்.ளார். அந்த வகையில் ஏற்கனவே நடித்து பா.தி.யி.ல் நிற்கும் அண்ணாத்த படத்தை விரைவில் முடித்துக் கொடுக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து இளம் இயக்குனர்கள் பலரிடமும் ரஜினி கதை கே.ட்.டு வருவதாக தெரிகிறது. அதில் கண்ணும் கண்ணும் கொ.ள்.ளை.ய.டித்.தால் பட இயக்குனர் தேசிங்கு பெ.ரி.ய.சாமி மற்றும் பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் முதல் வரிசையில் உ.ள்.ளா.ர்களாம்.

அதுமட்டுமில்லாமல் ரஜினி இனி வருடத்திற்கு 2 படம் நடிக்க வேண்டும் என உறுதி எ.டு.த்.துள்ளார். அதற்குத் தகுந்த மாதிரி சு.று.சு.றுப்.பாக வேலை செய்யும் இ.ளை.ஞ.ர் கூ.ட்.ட.த்தை தேடிச் செல்கிறார் ரஜினிகாந்த்.

அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் ச.மீ.ப.கா.லமாக தன்னுடைய படங்களில் சில வி.ஷ.ய.ங்.களை தூ.க்.கி.யா.க வேண்டும் எனவும், இல்லையென்றால் அது தன்னுடைய மார்க்கெட்டுக்கு பா.தி.ப்.பை ஏ.ற்.படுத்தும் எனவும் தன்னுடைய வட்டாரங்களில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது கதைகூற வரும் இயக்குனர்களிடம் தன்னுடைய வயதுக்கு ஏற்ற கதைகளை உருவாக்குங்கள் எனவும், ஹீரோயின்களுடன் டூயட், பறந்து பறந்து போடும் ச.ண்.டை.க் காட்சிகள் போன்றவற்றை தவிர்த்து விடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ரஜினிக்கு கதை எழுதும் இயக்குனர்கள் அனைவருமே தற்போது அவரது வயதுக்கு ஏ.ற்.ப எ.ழு.த வேண்டிய க.ட்.டா.யத்துக்கு த.ள்.ள.ப்.ப.ட்டுள்ளனர்.

இனி வரும் ரஜினி படங்களில் கண்டிப்பாக ஹீரோயினை து.ர.த்.தி து.ர.த்.தி கா.த.லி.க்கும் காட்சிகள் இருக்காது. மேலும் வ.ய.து.க்கு ஏற்ற ரொமான்ஸ் இருக்கும் என்கிறார்கள்.

ஜெயலலிதாவுடன் நிற்கும் மாஸ்டர் பட நடிகை.. மடியில் உட்கார்ந்து காபி குடித்த சம்பவம்!!

ரம்யா….

இன்னைக்கு ஹாட் ட்ரெண்டிங் என்றாலே இந்த பிரபலம் தான். ஜெயலலிதாவுடன் இந்த பிரபலம் எடுத்த சிறுவயது புகைப்படம் இன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆக உள்ளது. ஆனால் அவர் யார் என்பதைப்பற்றி பார்ப்போம்.

தொகுப்பாளர்களைப் பொருத்தவரை ஒரு சிலர் மட்டுமே பெரும் வரவேற்பை பெற்று ரசிகர்கள் கொண்டாடக்கூடிய ஒரு பிரபலமாக உள்ளனர். அந்த வரிசையில் கண்டிப்பாக விஜே ரம்யாவிற்கும் ஒரு இடமுண்டு.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு போன்ற நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ரம்யா. ஒரு சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில் இவர் ஒரு சிறு காட்சி மட்டுமே நடித்து விட்டு சென்று இருப்பார். அதிலும் குறிப்பாக “ஜேடி ஸ்டுடென்ட் இல்லமா ப்ரொஃபஸர் “ என கூறும் விஜே ரம்யாவின் குரல் ரசிகர்களிடம் பிரபலமடைந்தது.

ரம்யா அவரது சமூக வலைதள பக்கத்தில் ஜெயலலிதாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த பதிவில் தான் சிறுவயதில் இருக்கும்போது தனது தந்தை தமிழகத்தின் அட்வகேட் ஜெனரலாக இருந்தார்.

அப்போது ஜெயலலிதாவை பார்க்கும்போது தங்களையும் அழைத்து சென்றதாக குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஜெயலலிதா அவர்கள் விஜே ரம்யாவை மடியில் உட்காரவைத்து காபி கொடுத்ததாகவும் அந்த பதிவில் பதிவிட்டு மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் விஜே ரம்யா.