நானும் சிங்கிள் தான் படத்தின் DESI LADY பாடல் வீடியோ !

நானும் சிங்கிள் தான்…

தமிழ் திரையுலகில் வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் தினேஷ். பல படங்களில் சிறிய பாத்திரத்தில் நடித்த இவருக்கு வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தில் நல்ல பாத்திரம் கிடைத்தது.

ரஞ்சித் இயக்கத்தில் வெளியான அட்டக்கத்தி படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார் தினேஷ். தொடர்ந்து குக்கூ, திருடன் போலீஸ், விசாரணை போன்ற வெற்றி படங்களில் நடித்தார். கடைசியாக அதியன் ஆதிரை இயக்கிய இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தில் நடித்து அசத்தினார்.

திரி இஸ் ஏ கம்பெனி என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் நானும் சிங்கிள் தான். இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கோபி என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது.

அதன் அடிப்படையிலே நானும் சிங்கிள் தான் என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம். டைட்டில் போலவே கண்டெண்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.

இந்நிலையில் படத்தின் Desi Lady பாடல் வீடியோ வெளியானது. ஹிதேஷ் மஞ்சுநாத் இசையமைத்த இந்த பாடலை லேடி காஷ் எழுதி பாடியுள்ளார். பாடலில் ராஜேந்திரன் மற்றும் தினேஷின் நகைச்சுவை

இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கும் புதிய படமும் தினேஷ் கைவசம் உள்ளது. ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் அருள்தாஸ் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். நான் மகான் அல்ல, தென்மேற்கு பருவகாற்று, சூதுகவ்வும், தர்மதுரை, காலா போன்ற படங்களில் நடிப்பில் அசத்திய அருள்தாஸ் தயாரிப்பாளராக கால் பதிக்கும் படம் இதுதான்.

போலீசை எதிர்த்தால் என்ன நடக்கும் – காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்!

காவல்துறை உங்கள் நண்பன்..

நாயகன் சுரேஷ் ரவி சென்னையில் உணவு டெலிவரி செய்து வருகிறார். இவரது மனைவி ரவினா ரவி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஒரு நாள் ரவினா இரவில் நடந்து வரும் போது, மூன்று இளைஞர்கள் வழிப்பறி செய்து ஒருவர் கட்டிப்பிடித்து விட்டு செல்கிறார். இதனால் கவலைப்படும் ரவினா, நடந்ததை சுரேஷிடம் கூற, இருவரும் மூன்று இளைஞர்களை தேடி செல்கிறார்கள்.

அப்போது இரவு ரோந்து பணியில் இருக்கும் போலீஸ், சுரேஷ், ரவினாவை மறித்து விசாரிக்கிறார்கள். இதில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் மைம் கோபிக்கும் சுரேஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

போலீசை எதிர்த்து பேசுவதால் கோபமடையும் மைம் கோபி, சுரேஷை அடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார். போலீஸ் ஸ்டேஷனில் பல சித்திரவதைகளை அனுபவிக்கும் சுரேஷ், இதிலிருந்து மீண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சுரேஷ் ரவி, நிறைய கஷ்டப்பட்டு உழைத்து இருக்கிறார். போலீஸிடம் அடி வாங்குவதை பார்க்கும்போது மிகவும் பாவமாக இருக்கிறது. பயப்படுவதற்கு ஏற்ற முகம், ஆனால், கோபம் செட்டாக வில்லை. நாயகியாக நடித்திருக்கும் ரவினா யதார்த்தமான நடிப்பு. கணவர் மீது பாசம், கோபம், அக்கறை, பரிதாபம், ஏக்கம் என நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார். சுரேஷ், ரவினா இடையேயான கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. பல இடங்களில் பரிதாபப் பட வைத்திருக்கிறார் ரவினா.

போலீஸ் அதிகாரியாக வரும் மைம் கோபி, நடிப்பில் மிரட்டி இருக்கிறார். அலட்டல் இல்லாத இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

போலீசை ஒருவர் எதிர்த்து பேசினால், என்ன நடக்கும் என்பதை கதையாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ஆர்.டி.எம். கதாபாத்திரங்கள் தேர்வு, மற்றும் அவர்களிடம் வேலை வாங்கிய விதம் அருமை. படம் பார்க்கும் போது சமீபத்தில் நடந்த சாத்தான்குளம் சம்பவம் நினைவுக்கு வருகிறது.

ஆனால், இப்படம் அதற்கு முன்னதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. நாம் பார்த்த, கேட்ட சம்பவங்கள் திரைக்கதையில் அமைத்திருக்கிறார் இயக்குனர். அனைத்து போலீசும் கெட்டவர்கள் இல்லை, நல்ல மனசாட்சி உள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லி இருக்கிறார். வசனங்கள் படத்திற்கு பிளஸ்.

முதல் பாதியின் நீளம் மைனஸ். ஆதித்யா, சூர்யா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு சிறப்பு. மொத்தத்தில் ‘காவல் துறை உங்கள் நண்பன்’ கவர்கிறான்.

பிக்பாஸ் வீட்டிற்கு வருமுன் அஜீம்க்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

அஜீம்..

பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி வெற்றிகரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாக சுவாரஸ்யமான டாஸ்குகள் மூலம் போட்டியாளர்கள் சமயோசிதமாக விளையாடுகின்றனர். பார்வையாளர்களுக்கும் போட்டியாளர்களின் சண்டைகளை பார்ப்பதற்கு ஆர்வ்த்துடன் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பிக்பாஸ் வீட்டில் ஆரி, அனிதா, ரியோ, ஷிவானி, ஆஜித், கேப்ரில்லா, ரமேஷ், ரம்யா, சம்யுக்தா, சோம், நிஷா, பாலாஜி, சனம் மற்றும் அர்ச்சனா ஆகியோர் உள்ளனர் ஏற்கனவே ரேகா, சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகியோர் வெளியேறிய நிலையில் தொலைக்காட்சி நடிகர் அஜீம் விரைவில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வர இருப்பதாகவும் அவர் தற்போது சென்னையில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது..

இந்த நிலையில் திடீரென அஜீமின் தாயாருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அஜீமுக்கு தெரிவிக்கப் பட்டது. இதனையடுத்து அவர் ஸ்டார் ஓட்டலில் இருந்து மருத்துவமனைக்கு சென்று தனது தாயாருடன் இரண்டு நாட்கள் இருந்ததாகவும்,

தற்போது அஜீம் தாயாருக்கு குணமாகி கொண்டு வருவதாகவும் இதனை அடுத்து மீண்டும் ஒட்டலுக்கு திரும்பிய அஜீம், வரும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசன் முன் வைல்ட்கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்கு வருவார் என்றும் கூறப்படுகிறது.

பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே பாலாஜி-ஷிவானி இடையே காதம் அரும்பியுள்ளதாக கூறப்படும் நிலையில் ஷிவானியுடன் ‘பகல்நிலவு’ என்ற தொலைக்காட்சி தொடரில் காதலராக நடித்துள்ள அஜிம் வரவு, பாலாஜிக்கு அதிருப்தியை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டீசருக்கே இப்புடினா அப்போ டிரைலர பாத்தா? செம கலக்கலான வீடியோ! ஆட்ட்ம போடும் நபர்கள்!

மாஸ்டர்…

மாஸ்டர் டீசர் கடந்த நவம்பர் 14 ல் தீபாவளி ஸ்பெஷல் ரிலீஸாக வெளியிடப்பட்டது. youtube ல் வந்த சில நிமிடங்களிலேயே பெரும் சாதனைகளை செய்து டிரெண்டிங்கில் இடம் பிடித்தது.

தற்போது வரை 40 மில்லியன் பார்வைகளை கடந்துவிட்டது. இதனை ரசிகர்கள் #MasterTeaserHits40MViews என டிவிட்டரில் டேக் போட்டு கொண்டாடிவந்தனர்.

இப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன், ஸ்ரீ நாத், ஸ்ரீமன், சஞ்சிவ், மகேந்திரன், சாந்தனு, விஜய் சேதுபதி, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா என பலர் நடித்திருக்கிறார்கள்.

இந்த டீசரில் மகேந்திரனும் இடம் பெற்றார். ஆனால் அது பலருக்கு தெரியவில்லை. இப்போதெல்லாம் வெளிநாட்டினரும் தமிழ் படங்களுக்கு தங்கள் உணர்வுகளை கருத்தாக பதிவு செய்து வீடியோ வெளியிடுகின்றனர்.

தற்போது டீசருக்கும் அவர்கள் அப்படி செய்திருப்பதை மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

கமல்ஹாசனை மனைவியுடன் சந்தித்த அட்லி! என்ன காரணம்?

அட்லி…

தமிழ் சினிமாவில் ’ராஜா ராணி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் தளபதி விஜய் நடித்த ’தெறி’ ’மெர்சல்’ மற்றும் பிகில் ஆகிய மூன்று வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி. இவர் அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் பாலிவுட் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் தற்போது அட்லியின் மனைவி பிரியா அட்லி தயாரித்த ’அந்தகாரம்’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளியானது. இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது என்பதும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அட்லி மற்றும் ’அந்தகாரம்’ பட தயாரிப்பாளர் பிரியா அட்லி, அர்ஜுன் தாஸ் உள்பட படக்குழுவினர் அனைவரும் நேற்று உலக நாயகன் கமல்ஹாசனை சந்தித்து ஆசி பெற்றனர்.

’அந்தகாரம்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து கமல்ஹாசனிடம் படக்குழுவினர் வாழ்த்து பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விமல் படத்திற்கு தடை – நீதிபதி அதிரடி உத்தரவு..!

விமல் படத்திற்கு தடை…

நடிகர் விமல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கன்னிராசி’. கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமை ‘மீடியா டைம்ஸ்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.

இதற்காக படத்தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு 17 லட்சம் ரூபாயை மீடியா டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கியுள்ளார். ஆனால், ஒப்பந்தத்தின்போது உறுதி அளித்ததைப் போல 2018-ம் ஆண்டுக்குள் படத்தைத் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிம் வெளியிடவில்லை.

இந்நிலையில், ‘கன்னிராசி’ திரைப்படம் நேற்று (27/11/2020) வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தது. ஆனால், படத்தை வெளியிடும் உரிமையை மீடியா டைம்ஸுக்கு அளிக்கவில்லை. வேறு நிறுவனம் மூலமாக வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமைக்காக தன்னிடம் 17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு வேறு நிறுவனம் மூலமாகப் படம் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும்,

தன்னிடம் பெறப்பட்ட தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 21 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரியும் ‘மீடியா டைம்ஸ்’ நிறுவனம் சார்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ‘கன்னிராசி’ திரைப்படம் வெளியாக இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக டிசம்பர் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு உத்தரவிட்டார்.

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ அப்டேட் வந்தாச்சு – உற்சாகத்தில் ரசிகர்கள் !

அயலான்…

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அயலான்’ படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் அயலான். இப்படத்தின் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.

அறிவியல் சார்ந்த படமாக உருவாகி வரும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

அயலான் படக்குழு வெளியிட்ட டுவிட்டர் பதிவு நீண்ட நாட்களாக இந்தப் படம் குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அயலான் பட அப்டேட் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகவும், சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகிபாபு ஆகியோர் படப்பிடிப்பில் இணைந்திருப்பதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

படக்குழு வெளியிட்ட இந்த அப்டேட்டால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். மேலும் விரைவில் அயலான் படத்தின் சிங்கிள் டிராக் வெளியிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘பாவ கதைகள்’ டீசர் இதோ..!

பாவ கதைகள் டீசர்..

சமீப காலமாக பல ஆந்தாலஜி படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது முன்னணி இயக்குநர்கள் 4 பேர் இணைந்து ஒரு சீரிஸை இயக்கியுள்ளார்.

ஆம் வெற்றிமாறன், கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘பாவ கதைகள்’ எனும் சீரிஸ் ஒன்று உருவாகியுள்ளது.

இதில் சிம்ரன், சாய் பல்லாவி, அஞ்சலி, சாந்தனு, கௌதம் மேனன் காளிதாஸ் ஜெயராம், உள்ளிட்ட பல பரபலன்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் 4 முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த சீரிஸின் டீசர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

அந்தகாரம் திரைவிமர்சனம்..!

அந்தகாரம்….

கதைக்களம்

அர்ஜுன் தாஸிற்கு ஒரு போன் கால் வந்துக்கொண்டே இருக்கிறது. அது அவரை மிகவும் டிஸ்ட்ர்ப் செய்கிறது. அந்த குரல் யார் என்று தேட ஆரம்பிக்கின்றார்.

அதே நேரத்தில் தன் கண் பார்வைக்காகவும், தன் அப்பா வாழ்ந்த வீட்டை காப்பாற்ற போராடுகிறார் வினோத்.

இதை காட்டும் அதே நேரத்தில் ஒரு மனநல மருத்துவர் தன் ஒரு பேஷண்டால் தன் குடும்பத்தை இழந்து, மீண்டும் தன் புதிய பேஷண்டுகளை ஏதோ செய்ய முயற்சிக்கிறார்.

இந்த மூன்று விஷயங்களும் ஒரு புள்ளியில் எப்படி சந்திக்கிறது என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்..

அர்ஜுன் தாஸ் கண்டிப்பாக தமிழ் சினிமாவிற்கு நல்லா வரவு, தன் கனத்த குரலில் மிரட்டியும், அதே வேளையில் பயந்தும் நடிப்பில் அசத்தியுள்ளார்.

வினோத்தும் கண் தெரியாத இளைஞராக பேய் ஓட்டும் நபராக அவர் செய்யும் விஷயங்கள் நம்மை திகிலடைய செய்கிறது.

டெக்னீக்களாக படம் செம்ம வலுவாக உள்ளது, ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங் என்ன அனைத்தும் பிரமாதம்.

இயக்குனருக்கு இன்னும் பல வாய்ப்புக்கள் கிடைக்கும். அதே வேளையில் எல்லோருக்கும் இது புரியுமா என்றால் கேள்விக்குறியாக தான் உள்ளது.

க்ளாப்ஸ்

நடிகர்களின் பங்களிப்பு

டெக்னீக்கள் விஷயங்கள்

கிளைமேக்ஸ் டுவிஸ்ட்

பல்ப்ஸ்

படத்தின் நேரத்தை குறைத்து இருக்கலாம்.

மொத்தத்தில் அந்தகாரம் முழுதிருப்தி சினிமா ரசிகர்களுக்கு.

 

என்னை வெளியே அனுப்பினாங்க.. பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் கொடுக்கவில்லை?

சரவணன்…

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சர்ச்சையான போட்டியாளர் என்றால் அது பாலாஜி முருகதாஸ் தான்.

ஏனென்றால், சனம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் டைட்டில் வின்னர் ஆனார் என குற்றம் சாட்டி இருந்தார். அதை சனம் ஒரு டாஸ்கில் கடிதத்தின் மூலமும் தெரிவிக்க அந்த ப்ரோமோவை விஜய் டிவி நீக்கி இருந்தது.

இதனால், கடுப்பான அந்த நிறுவனமான ஜே மைக்கல் என்பவர் பாலாஜி மீது வழக்கு தொடர்வதாகவும், மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் ஒரு கோடி நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் பங்கேற்ற பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரான சரவணன், பாலாஜிக்கு ரெட் கார்டு அளிக்கப்படாதது குறித்து பேசியுள்ளார்.

அதில், உங்களுக்கு கொடுத்தது போல பாலாஜிக்கு ஏன் ரெட் கார்ட் கொடுப்படவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டு இருந்தது.

அதற்கு, எனக்கு ஏன் நடந்தது என்பது எனக்கு இதுவரை தெரியவில்லை. நான் பிக்பாஸில் இருந்து வெளியே வந்து உடன் பேட்டி எடுத்தபோது அப்போதே சொல்லிவிட்டேன் பிக்பாஸ் பற்றி கேட்காதீர்கள் என்று.

அதனால், விஜய் டிவி பற்றியும் பிக்பாஸ் பற்றியும் நான் எங்கேயும் எப்போதும் பேசுவதில்லை. பாலாஜியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அவருக்கு ஏன் ரெட்கார்டு கொடுக்கவில்லை என்று கமல் சார் மற்றும் அவர்களது டீம் கிட்ட தான் கேட்க வேண்டும்.

என்னை பற்றியே எனக்கே தெரியவில்லை.. ஏன் அனுப்பினாங்க என்று, ஆனால் 46 நாள் நான் உள்ளே இருந்தவரை சந்தோஷமாக இருந்தேன் என கூறினார்..

மேலும், திரும்ப பிக்பாஸிற்கு எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும் போகவே மாட்டேன் என அதிரடியாக கூறியுள்ளார்.